வெற்றி எப்படி கிட்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips
Related image

இது என்னால் முடியாது’, `ம்ஹூம் நான் மாட்டேன்பாஎன்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் பயம். மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டுமென்றால், முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்., தன்னம்பிக்கையும், முயற்சியும் தானே வெற்றிப்படிகள். இந்த இரண்டையும் தயக்கத்தால் தடை செய்தால், வெற்றி எப்படி கிட்டும்?
இன்னும் சிலர், சில முடிகள் உதிர்ந்தாலே `ஐயய்யோ வயசாகி விட்டதுஎன்றும், சற்று பார்வை மங்கலாகத் தொடங்கினால், `பார்வையே பறிபோனதுபோலவும் பதறுவார்கள். சிறு இழப்பைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல், எல்லாமே போய்விட்டதாக புலம்புவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
எனவே பயத்தை வென்று நம்பிக்கை வளர்ப்போம்.👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி 👤✍ *பெ.சுகுமார்*