முதுமை + தனிமை

மணக்கால் அய்யம்பேட்டை | 4:40 PM | Best Blogger Tips

Image result for முதுமை

👪👨‍👩‍👧‍👦👩‍👩‍👦😟👨‍👨‍👧👩‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦😚

*முதுமை + தனிமை =*
*கொடுமை*

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*

*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

*இங்குதான் விளையாடுவாள்...*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

*என்ன சமைப்பது?...*

*என்ன சாப்பிடுவது?...*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

*தனிமை... வெறுமை...*
Image result for முதுமை
*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

*பயணம் ஒரு கொடுமை...*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

*ஓலாவும், ஊபரும்...*
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
*பீக் hour சார்ஜ்*
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி...

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*
என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

*பிசியாக இருப்பார்கள்...*

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

*அவர்கள் டைமிற்கு...*

*நம் தூக்க நேரம்...*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

*இந்த அரசியல்களும்...*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*)
*வாழ்கிறேன்!*

🤔🤭🤫😰😥😓😦😪

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

🌱🎋🌳🌹🌸🥀🌻🙏

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips
Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்

2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

Related image
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

Image result for ஒட்டியாணம்
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!

Image result for மோதிரம்
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. 

இவ்வாறு அணிவதன் சிறப்பு..

Related image
#கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்
#மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

Image result for மோதிரம்
#மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
Image result for மூக்குத்தி
#மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது

Image result for மூக்குத்தி
#மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
Image result for காதணி

#காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.
*என்றும் அன்புடன்,*

நன்றி  இணையம்

🌺அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்🌺

மணக்கால் அய்யம்பேட்டை | 4:20 PM | Best Blogger Tips
Image result for அண்ணாமலை கிரிவல
உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை; ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது.

கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் நம் ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது; ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

விசிறிச்சாமியார் என்ற யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்; இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்.

அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?

அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!

சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை;ஆனால்,ஓலைச்சுவடிகள், தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்.

Image result for அண்ணாமலை கிரிவலImage result for அண்ணாமலை கிரிவல
மனிதனாக பிறந்த நாம் புண்ணிய ஆத்மாவாக இருந்தால் பணம் சம்பாதிக்கவும், சொத்துக்கள் சேர்க்கவும், சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவ ஆத்மாவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை;அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்று பாவ பிணி அறுத்து பிறவியை முடித்து ஈசனுடன் சேரவே பரம்பொருள் நமக்கு இந்த பிறவியை கொடுத்துள்ளார்.

ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன; அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப் பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா; பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்; முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எத்துணை நபர்கள் ஆன்மீகத்தின் அருமையை உணர்ந்து ஈசனை வழிபடுகிறார்கள்? அத்தகையோர் கிரிவல மகிமை உணரவே இந்த பதிவு

🌺அண்ணாமலை கிரிவல மந்திரம்🌺
Image result for அண்ணாமலை கிரிவல

ஒவ்வொரு முறையும்அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
அப்படி 14 கிமீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும். இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;நம் பாவப் பிணியை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கும்.

இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்; முறைப்படி தீட்சை பெற்றவர்கள், உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள், முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்.

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்.

தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.

காலையில்,மதிய நேரத்தில், மாலையில், இரவில்,நள்ளிரவில், பின்னிரவில்,அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்.

மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்.

சிவனை அப்பாவாக,நண்பனாக, மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை சூட்சுமமாக உணருவார்கள்; 1008 முறை வலம் வந்தவர்களுக்கு அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

$$$ ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று.

🌺முதல்முறை கிரிவலம் செல்லும் போது

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

( நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் சிவ மகிமையை பரப்பினார்; எனவே, குருவின் அருள் நமக்குத் தேவை)

( 3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அதை கிரிவலத்தின் போது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்)

🌺இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா

(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)

🌺மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-
ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்

(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)

🌺நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;

ஓம் நமச்சிவாய

( நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)

🌺ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சல சிவ

(அண்ணாமலையாரின் சிவ மந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)

🌺ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆம் ஹெளம் செள

($ அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)

🌺ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவையை நம

($ அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)

🌺எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ரீங் சிவசிவ

( சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)

🌺ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய நம

( நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)

🌺பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

( ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)

🌺பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவசிவ

( இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)

🌺பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய சிவாய

( நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)

🌺பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவாய நம ஓம்

( சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)

🌺பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவயசிவ

( இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது)

🌺15 ஆம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சலாய சிவ நமஹ

🌺16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;இறுதியில் அவரே உங்களை ஏற்றுக் கொள்வார்

மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ🌺அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்🌺

உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை; ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது;

கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் நம் ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது; ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

விசிறிச்சாமியார் என்ற யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்; இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்;

அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?

அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!

சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை;ஆனால்,ஓலைச்சுவடிகள், தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்;

மனிதனாக பிறந்த நாம் புண்ணிய ஆத்மாவாக இருந்தால் பணம் சம்பாதிக்கவும், சொத்துக்கள் சேர்க்கவும், சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவ ஆத்மாவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;

இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை;அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்று பாவ பிணி அறுத்து பிறவியை முடித்து ஈசனுடன் சேரவே பரம்பொருள் நமக்கு இந்த பிறவியை கொடுத்துள்ளார்;

ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன; அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப் பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா; பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்; முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எத்துணை நபர்கள் ஆன்மீகத்தின் அருமையை உணர்ந்து ஈசனை வழிபடுகிறார்கள்? அத்தகையோர் கிரிவல மகிமை உணரவே இந்த பதிவு

🌺அண்ணாமலை கிரிவல மந்திரம்🌺

ஒவ்வொரு முறையும்அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;அப்படி
14 கிமீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்;இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;நம் பாவப் பிணியை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கும்.

இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்; முறைப்படி தீட்சை பெற்றவர்கள், உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள், முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;

தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;

காலையில்,மதிய நேரத்தில், மாலையில், இரவில்,நள்ளிரவில், பின்னிரவில்,அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;

மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;

சிவனை அப்பாவாக,நண்பனாக, மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை சூட்சுமமாக உணருவார்கள்; 1008 முறை வலம் வந்தவர்களுக்கு அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

$$$ ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;