தாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!
குழந்தை கருவில் உருவானதிலிருந்து அவர்களின் அசைவை அணுஅணுவாய் ரசிக்க துவங்கி விடுவாள் தாய். குழந்தை பிறந்து தாய்ப்பாலூட்டும் போதும் கிடைக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை. பிரசவம் முடிந்து குழந்தைக்கு கொடுக்கும் முதல் தாய்ப்பாலில் ஏராளமான சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. முடிந்த வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தாய்ப்பால் கட்டி கொள்ளுதல். இது சில மணி நேரங்கள் குழந்தைகள் பால் கொடுக்கவில்லை என்றால் ஏற்படும். இங்கு தாய்ப்பால் கட்டி கொண்டால் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
1 வெளியேற்றுதல்
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, அதிக அளவில் பால் சுரந்து குழந்தை குடிக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொள்ளும். பால் கட்டிக் கொள்ளுதல் போன்ற உணர்வு ஏற்படும் போதே, பாலை வெளியேற்ற முயற்சியுங்கள். அதற்கென கிடைக்கும் பம்ப்களை கூட உபயோகித்து வெளியேற்றலாம்.
2 சுடுநீர்
பால் கட்டிக் கொண்டால் தாய்மார்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். அது போன்ற சமயத்தில் சுத்தமான துணியை, சுடுநீரில் நனைத்து மார்பகங்களின் மீது வைத்து எடுத்தால், வலி குறைந்து விரைவில் சரியாகி விடும்.
3 படுக்கும்
நிலை
பால் கட்டிக் கொள்ளுதல் இரண்டு மார்பகங்களிலும் சேர்ந்து ஏற்படும் என்பது தவறான கருத்து. குழந்தை ஒரு மார்பகத்தில் மட்டும் பால் குடிக்கும் போதே உறங்கி இருந்தால், ஒரு மார்பகத்தில் மட்டும் கூட பால் கட்டிக் கொள்ளும். அது போன்ற சமயத்தில் பால் கட்டி இருக்கும் மார்பகம் மேல் புறமும், மற்றொன்று கீழ் புறமும் இருக்கும் மாறு படுக்க வேண்டும். இதனால், ஒரு மார்பகத்திலிருந்து மற்றொரு மார்பகத்திற்கு பால் செல்லும். இது பால் கட்டி கொண்டிருப்பதை குறைக்க உதவும்.
4 பாசிப்பயறு / துவரம் பருப்பு
பாசிப்பயறு அல்லது துவரம் பருப்பை அரைத்து சுடுநீரில் கலந்து மார்பில் பூசி கொள்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். வலி அதிகம் இருந்தால் மட்டும் உபயோகிப்பது சிறந்தது. இது பால் சுரப்பை குறைக்க செய்யும். ஒரு முறை மட்டும் உபயோகிப்பது சிறந்தது, தொடர்ந்தோ அல்லது பல முறையோ உபயோகிக்க கூடாது.
5 மார்பகங்கள்
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஒரே மார்பகத்தில் கொடுக்காமல், இரு மார்பகங்களிலும் கொடுக்க வேண்டும். ஒரு மார்பில் பால் குடித்தவுடன் குழந்தை உறங்கி விட்டால், அடுத்த முறை பால் கொடுக்கும் போது மற்றோர் மார்பத்தில் பால் கொடுத்தால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
6 உணவு
பால் கட்டி கொண்டிருக்கும் சமயத்தில் உணவு மற்றும் தண்ணீர் அதிக அளவில் எடுத்து கொள்வதை தவிர்க்கவும். இது மேலும் பால் சுரப்பை அதிகரிக்கும் என்பதால் குறைத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
7 மல்லிகை
பூ
மல்லிகை பூவை அரைத்து மார்பில் பூசுவதால், பால் கட்டிக் கொண்டிருப்பது சரியாகி விடும். இதை மார்பக காம்புகளில் படாமல் மார்பில் மட்டும் போட வேண்டும். தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இவற்றை அடிக்கடி பூசி கொண்டால், நல்ல பலன் தரும்.
8 ஐஸ்
கட்டிகள்
ஐஸ் கட்டிகளை சுத்தமான துணியில் வைத்து பால் கட்டி இருக்கும் மார்பகத்தில் ஒத்தி எடுத்தால், வலியில் இருந்து நிவாரணம் கொடுப்பதோடு, பால் கட்டிக் கொண்டிருப்பதையும் சரி செய்ய உதவுகிறது.
9 ஆமணக்கு
எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆமணக்கை மார்பகத்தில் நேரடியாக தடவினால், தாய்ப்பால் கட்டி கொண்டிருப்பது சரியாகி பால் வெளியேற துவங்கி விடும். இது உங்கள் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
10 அவல்
அவலை சுடுநீரில் நனைத்து மார்பில் கட்டிவிட்டால், பால் கட்டி இருப்பது சரியாகி பால் வெளியேற துவங்கும். அவலை வறுத்து வெதுவெதுப்பான சூட்டில் சுத்தமான துணியில் வைத்தும் மார்பகளின் மீது கட்டி விடலாம். இதனால் மார்பகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்.
நன்றி இணையம்