முயற்சி செய் வெற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:49 | Best Blogger Tips
முயற்சியே க்கான பட முடிவு

நெப்போலியன், பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் மிகவும் கடினமான கணக்கு ஒன்றைப் போட்டார். நெப்போலியன் வகுப்பறையில் 72 மணி நேரம், அந்த கணக்கை போட்டு முயன்று விடை கண்டுபிடித்தார். அவருடைய இந்த முயற்சி கணக்கு, இன்று வரை 'நெப்போலியன் கணக்கு' என வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலக் கவிஞர் வேட்ஸ்வொர்த் ஒரு பாடல் எழுதினார். அந்த பாடலில் குயிலின் சிறப்பியல்பை விளக்க, நல்ல அடைமொழி தேடினார். அவருக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் ஆயின. ஒரு அடைமொழி கிடைக்காமல் அந்த பாடல் முழுமை பெறவில்லை. பாதியிலே நின்றுவிட்டது. பின்னர் 43ம் ஆண்டில் அவருக்கு அடைமொழி கிடைத்தது. பாடலை எழுதி முடித்தார். 43 ஆண்டுகள் முயன்று வெற்றி.முயற்சித்தால் தான் முன்னேற்றம்
பாடப் பாடத்தான் ராகம்;
எழுத எழுதத்தான் எழுத்து;
படிக்க படிக்கத்தான் படிப்பு;
முயற்சிக்க முயற்சிக்கத்தான் முன்னேற்றம்.
பூமியை முட்டிக் கொண்டு போட்ட விதை முளைக்க காரணம் விதையின் முயற்சி.
எழுதிய எழுத்தில் பிழை இருக்கலாம்.
எழுதா எழுத்தில் ஏது பிழை?
முயற்சியின்மை ஓர் எழுதா எழுத்து போலத்தான்.
மாண்டெக்ச்யூ என்பவர் தன் நுாலைப் பற்றி தன் நண்பரிடம், நீங்கள் சிலமணி நேரங்களில் படித்து முடித்து விடுவீர்கள். ஆனால் அதற்காக நான் எடுத்துக் கொண்ட முயற்சி எனது கறுப்பு முடியை வெளுப்படையச் செய்து விட்டது ' என்று கூறினார்.
'
நீ முயற்சி செய்து சாதித்தால் சாதனையாளர் இல்லையென்றால் வேதனையாளர்'.
முயற்சி செய் வெற்றி உனக்கே! வெற்றி என்பது முயற்சியின் விளைவே!
Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

நன்றி  பெ.சுகுமார்*

இணையம்