சிலர் ஒரு விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்தால் இது நம்மால் முடியுமா? நமக்கு ஒத்துவராது என முன்னேற்றப் பாதைக்கு தடைக்கல்லாக பேசுவார்கள்.
பிரிஸ்டல் என்ற ஆராய்ச்சியாளர் கருத்துப்படி, வலிமையான நமது எண்ணங்கள் மற்றவர்களை பாதிக்கிறது.
'முயன்றால் நடக்கும். முயலும் போது நடக்கும். முயற்சி நடத்தி வைக்கும்'.
நம்மை நம்பி முயற்சியுடன் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்தால் வெற்றி பெறலாம். நடந்து போகையில் நிற்க நினைத்தால் உடல் நிற்கிறது. மனம் நிற்கிறதா? உடலும் மனமும் சேர்ந்து கஷ்டப்பட்டு முயலாமல், இஷ்டப்பட்டு முயன்றால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
இன்று தொழில் வளர்ச்சியில் முன்னேறி, உலக அரங்கில் வல்லரசுகளுடன் போட்டியிடும் ஜப்பான் சிறிய நாடு. வளமான பூமி இல்லை. எரிமலை, பூகம்பம், சூறைக்காற்று போன்ற எல்லா இயற்கை சீற்றத்திலும், அணுகுண்டு வீச்சினால் நிர்மூலமாகப் போன நாடு, இன்று முன்னேறியுள்ளது என்றால் காரணம் உழைப்பு, முயற்சி, நாட்டுப்பற்று.
விதியைப் பற்றி விளக்கம் சொல்ல வந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் 'சீட்டு விளையாட்டில் குறிப்பிட்ட சீட்டு விழுவதை விதி என்று வைத்தக் கொண்டால், விழுந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு நீ எப்படி விளையாடி ஜெயிக்கிறாய் என்பது உன்னுடைய மதியைப் பொறுத்த விஷயம்' என்கிறார்.
வாழ்க்கையின் முன்னேற்றப்பாதையில் 100 பேர் பயணம் செய்கிறார்கள் என்றால் முதல் புறக்கணிப்பிலே 90 சதவீதம் பேர் நின்று விடுகிறார்கள். மீதம் உள்ள 10 பேர் மட்டுமே பயணத்தை தொடங்குகிறார்கள்.
'மனிதர்கள் கடன்பட்டிருப்பது மூளைக்கு அன்று; முயற்சிக்கே! கடவுள் வரங்களை விற்கவே செய்கிறார். முயற்சியே அவற்றின் விலை' என்கிறார் எடிசன்.
பலருடைய பாதையில் தடையாக இருக்கும் கல், பலமுற்றவருடைய பாதையில் படிக்கல்லாக மாறிவிடும்.
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி பெ.சுகுமார்*
இணையம்