!!திருமுருக கிருபானந்த வாரியார்!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:36 | Best Blogger Tips
Image result for !!திருமுருக கிருபானந்த வாரியார்!!


நகைச்சுவை கலந்த சொற்பொழிவு!!
வாரியார் அவர்கள் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர்.
ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , 'சொல்லின் செல்வன்' என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள்.
இங்கேயும் சில 'சொல்லின் செல்வர்கள்' இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.
முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
முருகப் பெருமானின் மனைவியை 'வள்ளி' என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் 'வள்ளல்'. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி 'வள்ளி' ஆனார்!
வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு:
கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. 'கள்' என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை 'நீ' என்று சொல்லுவதற்குப் பதில் 'நீங்கள்' என்று சொல்லிப் பாருங்கள்.
அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் 'கள்' செய்யும் வேலைதான்.”இதே போல், 'இல்லாள்' என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. 'இல்லாள்' இல்லத்தை ஆள்பவள்.
Image result for !!திருமுருக கிருபானந்த வாரியார்!!
பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் 'இல்லான்' - 'பாப்பர்' என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட 'அய்யா, பிச்சை' என்று சொல்ல மாட்டான்; 'அம்மா, பிச்சை' என்று தான் சொல்லுவான்.
அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!”
கரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர், 'மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?' என்ற ஏக்கத்தோடு, 'மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?' என்று ஆர்வத்துடன் கேட்டார்.
அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!
வாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார். மற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார். “அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது.
இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்'' என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்?
வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?
Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
 நன்றி இணையம்