இந்து நமது வழிபாடு !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:54 | Best Blogger Tips
Image result for இந்து நமது வழிபாடு

இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டு மதங்களுமே சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டி அந்த மண்ணை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.
ஆனால் ஐநூறு வருடவ்களுக்கு மேலாக இந்திய மண்ணை ஆண்டாளும் கூட இங்கு குறிப்பாக தமிழகத்தில் ஐந்து சதவிகிதத்திற்கு கூட மக்களை மதம் மாற்ற முடியவில்லை.
இதற்கு காரணமாக பலவிதமாக காரணங்களை சொல்லலாம். ஆனால் இதன் பின் இருக்கும் ஒரு உண்மை நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் ஒன்றாகும்.
நமது முன்னோர்கள் எதையும் காரண காரியம் இன்றி சடங்கு, சம்பிரதாயங்களை உருவாக்கி வைக்கவில்லை. அவர்களின் தீர்க்க தரிசனம், தொலை நோக்கு பார்வையுடன் நமக்கு கொடுத்த மரபுகள் தான் இந்து மதத்தை தமிழ் மண்ணில் தாங்கி பிடித்து வருகின்றன.
ஆயிரம் தெய்வங்களை வழிபடக்கூடியவர்கள் என்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்மை ஏளனப்படுத்தலாம். முனியாண்டிக்கும், ஐயனாருக்கும் விளக்கம் கேட்டு நம்மை கேலி செய்யலாம். ஆனால் உண்மையை சொல்லப்போனால் இந்த முனீஸ்வரர், அய்யனார், முப்பாத்தம்மன் தான் இன்றைக்கும் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் நம்மிடம் மண்டி போட வைக்கின்றது.
Image result for இந்து நமது வழிபாடு
நம் தேசத்தின் மீது படையெடுத்தது வந்து நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நமது வழிபாடு, உணவு, குருகுல கல்வி என அனைத்தையும் அழித்தால் மதத்தை பரப்பலாம் என திட்டமிட்டு படிப்படியாக ஒவ்வொன்றாக அழித்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
ஆனால் அவர்கள் அழிக்கவோ, தொடவோ முடியாதது நமது சிறு தெய்வ வழிபாடு. நமது முன்னோர்பள் நமது பாரம்பழியங்களை இந்த சிறு தெய்வ வழிபாட்டில் தான் தீர்க்கதரிசனத்துடன் இந்து மத மரபுகளை தனிமனித கடமைகளாக நமக்கு வைத்துள்ளனர். இந்த கடமைகளை எந்த கொம்பனாலும் இதுவரை அசைக்கவோ, மாற்றவோ முடியவில்லை. இனிமேலும் அது நடக்காது.
Image result for இந்து நமது வழிபாடு
இந்து மதம் ஒரு ஆலமரம். அதன் விழுதுகள் ஆறு பிரிவுகள்.
1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
2.
வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம.
3.
சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
4.
காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
5.
கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
6.
சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
Image result for இந்து நமது வழிபாடு
இந்த ஆறு விழுதுகளின் சல்லி வேர்கள் தான் சிறு தெய்வ வழிபாடு.
சிறுதெய்வ வழிபாடு ஒவ்வொரு இந்துவின் ரத்த நாளங்களிலும் கலந்துருப்பது. இதைத்தான் குல தெய்வ வழிபாட்டில் நமது முன்னோர் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் உண்டு. குல தெய்வம் இல்லாத இந்து கிடையாது.
இந்த குல தெய்வம் என்பது மேற்கண்ட ஆறு இந்து தெய்வங்களின் அம்சமாகவே அமைத்து வழிபடுகின்றனர். உதாரணமாக முனீஸ்வரர் சிவனின் அம்சம், அய்யனார் விஷ்ணுவின் அம்சம், முப்பாத்தம்மன் உமையின் அம்சம்.
இந்துக்கள் குல தெய்வங்களான சிறு தெய்வங்கள் அனைத்துமே மேற்கண்ட ஆறு தெய்வங்களையே பிரதிபலிக்கும்.
முன்னோர்கள் நமக்கு வெறும் கல்லுக்கு மாலை போட்டு வழிபடுவதை மட்டும் நமக்கு சொல்லி விட்டு போகவில்லை. அந்த தெய்வ வழிபாட்டிற்கு பல பாரம்பரிய பழக்கங்களையும், விதிகளையும் நமக்கு கடமைகளாக வகுத்து வைத்துள்ளார்கள். அதில் நமது உறவுகளையும் பிணைத்து வைத்துள்ளார்கள்.
உறவுகளை பிணைத்ததோடு மட்டுமல்லாமல் நமது கௌரவம், புகழ், தனித்தன்மை, நமது அடையாளம், நமது வம்சத்தின் பாரம்பரியம் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சடங்கு சம்பிரதாயங்களை அதில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அவர்களது குல தெய்வம் கோவில் கண்டிப்பாக இருக்கும். காடு, மலை, வயல் என ஏதாவது ஒரு ஆள்நடமாட்டமில்லாத வனாந்திரத்திலாவது முன்னோர்கள் இருபது தலைமுறைகளுக்கு முன்பாக உருவாக்கி வைத்திருப்பார்கள்.
இருபது தலைமுறைகளுக்கு முன்பாக ஒரே குடும்பமாக இருந்த நான்கு அண்ணன் தம்பிகள் கட்டிய கோவிலாக இருக்கும். அவர்களின் வழி வந்தவர்கள் இப்போது உலகம் முழுக்க பரவி ஐநூறு குடும்பங்களாக பெருகியிருப்பார்கள்.
ஆதிகாலத்தில் கோவிலை கட்டிய போது வருடம் ஒரு முறை அனைவரும் எப்படி கூடி வணங்கினார்களோ அதே போல இன்று வரை அது தொடரும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடி அமாவாசை என வருடத்தின் ஏதாவது ஒரு நாளில் அனைத்து குடும்பங்களும் சேர்ந்து வருடா வருடம் வழிபடுவது அவர்களின் சாசனம். இது அவர்களின் அடையாளம், பிறப்புரிமை.
இது ஒவ்வொரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை கட்டமைப்பதற்கான அங்கீகாரம். ஒருவன் தனது மகன், மகளுக்கு பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ வேண்டுமானால் அவனது சாதி மட்டுமல்ல அவன் கும்பிடும் அந்த குலதெய்வ கோவிலும் முக்கியம். தனது குலதெய்வத்தை அவன் அடையாளமாக காட்டித்தான் தனது சொந்த சாதியிலேயே சம்பந்தம் பேச முடியும்.
ஒரு பெண் பிறந்து திருமணம் ஆகும் வரை பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்க்குவாள். அவள் திருமணமாகிய பின் கணவரது வீட்டு குலதெய்வத்தை ஏற்றுக்கொள்வாள். இங்கேயும் நமது முன்னோர்கள் பலமான பிணைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதோடு பிறந்த வீட்டு கடமை முடிவதில்லை. அந்த பெண்ணின் பிறந்த வீட்டு குல தெய்வ வழிபாடுகளில் அவளின் ஆயுள் முடியும் வரை சிறப்பான மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டியது உடன் பிறந்த சகோதர்ர்களின் கடமை.
குலதெய்வ கோயில்களில் நடைபெறும் திருவிழா, கிடாவெட்டு, கும்பாபிசேகம், என அனைத்திலும் திருமணம் செய்து கொடுத்த சகோதரிகளை குடும்பத்துடன் அழைத்து, புத்தாடைகள் கொடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது ஆண்களின் கடமை.
நமது முன்னோர்கள் குலதெய்வங்களை வழிபடுவதோடு குடும்ப உறவுகளையும் அதில் செழிக்க வைத்துள்ளனர்.
ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் மொட்டையடித்து காது குத்துதல் அவரவர் குலதெய்வ கோவில்களில் வைப்பது மரபு. இதை கூட வெறுமனே பெற்றவர்கள் செய்து விட முடியாது. தாய்மாமனை அழைத்து அவர் மடியில் குழந்தையை அமர்த்தி செய்வார்கள்.
சரியாக சொன்னால் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க செய்தது நமது குல தெய்வங்களான சிறு தெய்வ வழிபாடு மட்டுமல்ல நமது தாய்மாமன்களும் தான்.
பெண் கேட்டு சென்றாலே தாய்மாமன் அனுமதியை முதலில் கேட்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றும் பல சமூகங்களில் உள்ளது.
அது மட்டுமல்ல சகோதரிகளின் முக்கியத்துவத்தை திருமணங்களிலும் நமது முன்னோர் வைத்துள்ளனர். தாலிக்கு மூன்று முடிச்சு தான். இது வரை எந்த ஆணாவது மூன்று முடிச்சு போட்டதுண்டா...? மூன்றாவது முடிச்சுக்கு உரிமையாளராக சகோதரிகளை நமது முன்னோர் வைத்துள்ளனர்.
ஒரு பெண் பருவமடைந்ததும் அவளுக்கான சடங்கு சம்பிரதாயங்களை முழுக்க முழுக்க செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு தான். அங்கே தகப்பன் இரண்டாவது இடம் தான். முதல் மரியாதை தாய் மாமனுக்குத்தான்.
ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவள் திருமணமாகும் வரை அவள் மீதுள்ள அக்கறை, அதிகாரத்தை தகப்பனுக்கு சமமாக நமது முன்னோர் தாய்மாமனுக்கு வழங்கியுள்ளனர்.
ஒரு வீட்டில் தனது மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர் முக்கியமாக தாய் தன் பிறந்த வீட்டிலிருந்து பெண் வரவேண்டுமென முன்னுரிமை கொடுக்கிறாள். பெண் இல்லா விட்டால் தனது பிறந்த வீட்டு கோவிலை குலதெய்வமாக கொண்ட பெண்ணை தேடுகிறாள். இதில் எது நிகழ்ந்தாலும் அந்த பிறந்த வீட்டு குல தெய்வத்தின் தொடர்பு அவள் விரும்பியபடி தொடர்ந்து கொண்டிருக்கும்.
கடைசியாக செத்தால் கூட பிறந்த வீட்டு மரியாதையோடு போகத்தான் ஒவ்வொரு இந்து பெண்ணும் விரும்புவாள். அவளின் உடலை அடக்கம் செய்ய இறுதி யாத்திரையில் அமர வைக்க அவள் பிறந்த வீட்டு சேலை தான் உடுத்துவார்கள். ஒரு வேளை உடன் பிறந்த சகோதரன் இல்லா விட்டால் அவளின் பிறந்த வீட்டு குல தெய்வத்தை கும்பிடுபவர் யாராவது சகோதரன் ஸ்தானத்தில் இருந்து இறுதி ஊர்வலத்திற்கான சேலையும், மாலையும் அணிவிப்பார். இதுவும் நமது முன்னோர் நமக்கு கொடுத்த சம்பிரதாயம் தான்.
இதை இவ்வளவு விரிவாக சொல்ல காரணம் உள்ளது. இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே நமது முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தி பரம்பரை பரம்பரையாக நமது ரத்தத்தில் கலந்த்து. இதை மாற்றவும் முடியாது.
ஏனெனில் பிற மதத்தில் மனிதர்கள் மிருகங்களை போல வாழ்ந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் மனித உறவுகளின் மேன்மையையும், அதன் பரிசுத்தத்தையும் நமது இறை வழிபாட்டுடன் கலந்து உயர்வான இடத்திற்கு வந்து விட்டனர்.
இந்த பதிவு பலருக்கும் மிகைப்படுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் நிதர்சனம் இதுதான்.
சொந்த வீடு இருக்காது, கூரை வீட்டில் இருந்தாலும் மழை பெய்தால் இத்துப்போன கூரைகளோடும், இடிந்து விழும் அளவிற்கு மோசமான மண் சுவர் கொண்ட குடிசையில் வாழும் ஒருவனுக்கு குடிக்க கஞ்சி இல்லாமல் பட்டிணியாக கூட கிடப்பான். ஆனால் தாய்மாமன் சீர் செய்ய கிட்னியை விற்றாவது லட்சக்கணக்கில் செலவு செய்வான்.
உடன் பிறந்த பெண்களுக்கு உரிய கடமையை செய்தால் தான் நமது சமூகம் அவனை ஆணாகவே ஒப்புக் கொள்ளும். அது மட்டுமல்ல அவனது குலதெய்வ கோவிலில் அப்போது தான் அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அதனால் எப்பாடு பட்டாவது அவன் தனது கடமையை செய்கிறான்.
ஒரு குடும்பம் மதம் மாற வேண்டுமெனில் முதலில் குடும்பத்து பெண்களின் ஆதரவு இருக்க வேண்டும். நமது இந்து மதத்தில் தனக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும், பெருமைப்படுத்தும் உறவுகளை விட்டு அவள் எப்படி வெளியேற சம்மதிப்பாள்....? கணவனுக்காக தனது சகோதரர்களை அவள் எப்படி புறக்கணிக்க முடியும்.
தமிழ் சமூகத்தில் ஆணின் சிறப்பே உடன்பிறந்த சகோதரிகளை கடைசி வரை கைவிடாமல் உறவை பேணுவது. தனக்கு சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் வழங்கும் தாய் மாமன் உறவை புறம் தள்ளி அவன் எப்படி மதம் மாறுவான்...?
இதெல்லாம் நமது இந்து சமூகத்திற்கு ரத்தத்தில் ஊறியது. சிறு தெய்வ வழிபாடு என்பது சினிமாவில் காட்டுவது போல ஒரு கல்லை நட்டு, அதற்கு மாலை போட்டு சூடம் பத்தி காட்டும் காமெடி அல்ல. நமது பாரம்பரியத்தின் அடி விழுதுகள். நமக்கு உணர்வு பூர்வமானது. உண்ணும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுபவன் செய்யக்கூடியது.
இவ்வளவு பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இந்த மண்ணில் அப்பன் யாரென்றே தெரியாதவனையும், சகோதரிகளையே மணந்து கொள்ளலாம் என்பவனையும் தூக்கிக்கொண்டு வந்து வியாபாரம் செய்ய வந்து விட்டார்கள்.
எவன் ஏற்பான்...? வாளுக்கு அஞ்சியவன் நான்கு சதவிகிதம், கஞ்சிக்கு செத்து ரொட்டிக்கு ஆசைப்பட்டவன் மூன்று சதவிகிதம். அவ்வளவு தான். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஊளையிட்டாலும் மேற்கொண்டு போனியாகாது.
ஏசப்பாவும், பில்லாஹ்வும் நம்மூர் சிறு தெய்வங்களான முனீஸ்வரன்,மாரியம்மன், செல்லியம்மன், அய்யனார், அங்காளம்மன் மற்றும் முப்பாத்தம்மனிடம் எப்போதோ மரண அடி வாங்கி தோற்று போய் விட்டனர்.
இந்து மதம் என்பது மதமல்ல அது ஒரு வாழ்வியல் நெறி என்பதை உணர்த்தி நம் அனைவரையும் பெருமைபட வைக்கும் நம் முன்னோர்கள் வகுத்த நடைமுறைகளை பெற்றுவரும், பின்பற்றி வாழ்வோம். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம ......நன்றி..... அருணாச்சலம்...