ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
உதாரணமாக,
தாகம்
கொண்ட
ஒரு
மனிதர்,
ஒரு
வீட்டில்
நுழைகையில்
அவருக்கு
பாதியளவு
தண்ணீர்
நிரம்பிய
ஒரு
தம்ளர்
தரப்படுகிறது.
அதைப்
பார்த்ததும்
அவர்
திருப்தியடைந்தால்,
அவர்
நேர்மறை
எண்ணம்
கொண்டவர்
என்று
அர்த்தம்.
மாறாக,
அதிருப்தியடைந்தால்,
எதிர்மறை
எண்ணம்
கொண்டவர்
என்று
அர்த்தம்.
ஏனெனில்,
திருப்தியடைபவர்,
பாதியளவு
தண்ணீர்
நிரம்பியுள்ளதைப்
பார்க்கிறார்.
எதிர்மறை
எண்ணம்
உள்ளவரோ,
அந்த
தம்ளர்
பாதியளவு
காலியாக
இருப்பதைப்
பார்க்கிறார்.
எனவே
எதிர்மறை
எண்ணம்
உள்ளவரைவிட,
நேர்மறை
எண்ணம்
உள்ளவர்
சிறிய
விஷயங்களில்
அதிக
திருப்தியடைகிறார்.
மேலும்,
சுய
நம்பிக்கை,
வெற்றிக்கான
தெளிவான
திட்டமிடுதல்
போன்ற
பண்புகளும்
அவருக்கு
இருப்பதால்
அவரின்
வெற்றி
மிகவும்
எளிதாகிறது.
"ஒருவர்
தோல்வியடைந்தால்
அவருக்கு
ஏமாற்றம்
கிடைக்கத்தான்
செய்யும்.
அதற்கு
பயந்து
ஒருவர்
முயற்சியே
செய்யாமல்
இருந்தால்
அவர்
பிணத்திற்கு
சமம்"
என்று ஒரு பொன்மொழி
உண்டு.
நாம் இந்த வகையில்தான்
சிந்திக்கப்
பழக
வேண்டும்.
நீங்கள்
எப்படி
சிந்திக்கிறீர்களோ,
அவ்வாறே
உங்களின்
நடத்தையும்
இருக்கிறது.
நேர்மறை
எண்ணம்
இருந்தால்,
சிறுசிறு
தடைகள்
உங்களின்
லட்சியத்தை
அடைவதை
தடைசெய்ய
முடியாது.
"நீ
எங்கே
இருக்கிறாய்,
உன்னிடம்
என்ன
இருக்கிறது
என்பதை
வைத்து
உன்னால்
முடிந்ததை
செய்"
"உனக்கு
ஒன்று
பிடிக்கவில்லை
எனில்,
அதை
மாற்றிவிடு.
ஒருவேளை
அதை
மாற்ற
முடியவில்லை
என்றால்,
உன்னை
நீ
மாற்றிக்கொள்.
அதற்காக
குறை
கூறிக்கொண்டு
இருக்காதே"
"ஒரு
உண்மை
அறிவாளி
என்பவர்
1% மட்டுமே உந்துதலைக்
கொண்டிருப்பார்.
ஆனால்
99% கடும் முயற்சியைக்
கொண்டிருப்பார்"
போன்றவை
பிரபலமாக
பொன்மொழிகள்.
இன்றைய
நாள்
இனிதாக
அமைய
வாழ்த்துக்கள்
பெ.சுகுமார்*