சிரிப்பு அன்பைத் தழைக்கச் செய்யும் / விரோதத்தை உண்டாக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:15 | Best Blogger Tips
சிரிப்பு க்கான பட முடிவு

விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ கிட்டாமல் மனிதனுக்கு மட்டும் கிட்டியிருக்கும் அரிய வரமல்லவா சிரிப்பு!
விலங்குகளும் பறவைகளும் கண்ணீர் வடிப்பதுண்டு. ஆனால் ஆடோ, மாடோ, காகமோ, கிளியோ சிரித்ததாய்ச் செய்தியில்லை. `இந்த நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டு எங்கள் வீட்டு நாய் கலகலவெனச் சிரித்தது என்று உலகில் எந்த நாட்டிலாவது செய்தி வந்ததுண்டா?` எனத் தம் சொற்பொழிவின் இடையே கேட்டுக் கேட்பவர்களைச் சிரிக்கவைப்பார் திருக்குறள் முனுசாமி.
சிரிப்பு க்கான பட முடிவுசிரிப்பு பலவகைப் பட்டது என்பதை என்.எஸ். கிருஷ்ணன் திரைப்பாடல் ஒன்று விளக்குகிறது:
`சிரிப்பு! இதன் சிறப்பைச் சீர்தூக்கிப்
பார்ப்பதே நமது பொறுப்பு
சிரிப்பு க்கான பட முடிவு
மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு..’
-
எனத் தொடங்கும் அந்தப் பாடலில்
`சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு! -
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு!’
-
எனச் சிரிப்பின் பெருமையைப்
பட்டியலிடுகிறார் என்.எஸ்.கே.
*அதே சமயம், எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய சிரிப்பும் உள்ளது.*
மகாபாரதத்தில் பாண்டவர் நிர்மாணித்த மாளிகைக்கு வருகிறான் துரியோதனன். அந்த மாளிகையின் தரைப்பகுதி பளபளவென மின்னுகிறது. கால்பதித்து நடக்கிற துரியோதனன் அது நிலமா இல்லை நீரா எனத் தெரியாமல் மயங்கி, நடக்கும்போது தடுமாறுகிறான். அந்தத் தடுமாற்றத்தை உப்பரிகையிலிருந்து பார்க்கின்றன ஒரு ஜோடிக் கண்கள்.
அந்தக் கண்கள் திரெளபதியுடையவை. கலகலவென்று சிரிக்கிறாள் திரெளபதி. அந்த ஏளனச் சிரிப்பால் மனம் கசந்த துரியோதனன், மனத்தில் வஞ்சினம் கொள்கிறான். அதுவே பாரதப் போருக்கு வித்திடுகிறது. ஒரு பேரழகியின் ஒரே ஒரு சிரிப்பால் எத்தனை உயிர்கள் பின்னாளில் பலியாயின!
சிரிப்பு அன்பைத் தழைக்கச் செய்யும். தவறான நேரத்தில் சிரிக்கும் சிரிப்பு விரோதத்தை உண்டாக்கும்.

 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
பெ.சுகுமார்*