இந்து_முன்னணி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips
Image result for இந்துமுன்னணி
இது RSS பேரியக்கத்தின் தமிழக கிளை அமைப்பாகும்
அந்தக்காலக்கட்ட த்தில் மீனாட்சிபுரத்தில் ஒட்டுமொத்த கிராமமே இஸ்லாமுக்கு மாற்றப்பட்டு மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.
இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்ற முயற்சி நடந்தது. கிறிஸ்த்தவ விற்பனையாளர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து எல்லாம் கடிதம் வருகிறதோ அதிலெல்லாம் கன்னிமேரி மாவட்டம் என எழுதி அனுபச்சொன்னார்கள்.அவ்வாறே கடிதங்களும் வந்துக்கொண்டிருந்தது.
அதுமட்டுமல் இராம நாதபுரத்தில்
ஒரு லட்சம் பேரை மதம் மாற்றப்போவதாகவும்,அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்கள்,இவை அனைத்தும் வெளிப்படையாக நடந்தன.
சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் .வெ.ரா கொள்கை என்று கூதகோஷ்டமிட்டவர்களின் தூண்டுதலால் விநாயகர் சிலைகள் துடப்பத்தால் அடிக்கப்பட்டு தெரு முச்சந்தியில் வைத்து உடைக்கப்பட்டது.
இந்த இந்துக்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்கவும்,இந்துக்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என முடிவு செய்து RSS பேரியக்கத்தைச்
சேர்ந்த ராமகோபாலன் மற்றும் தியாகி தானுலிங்க நாடார் அவர்களால் துவக்கப் பட்டதே #இந்துமுன்னணி இயக்கம் ஆகும்.
இந்து முன்னணி 1980-ல் துவக்கபட்டது. போலி நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும்,அயல் நாட்டு மதவெறியர்களின் மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை தமிழக இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் கடும் உழைப்பால் போலி நாத்திகப்பிரச்சாரம் முறியடிக்கபட்டுள்ளது.அந்நிய மதவெறி மதமாற்றம் தடுக்௧ப்பட்டு வருகிறது.
கோவை,திருச்சி போன்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் கொடிகட்டி பறந்த நிலைமை மாறி, இன்று பாரத தேச தொன்மையான பாரம்பரியான காவி இயக்கங்௧ள் கால் பதிக்கத் துவங்கி விட்டன.
எந்தத் தமிழகத்தில் விநாயகர் சிலை உடைப்பு நடந்ததோ அந்த தமிழகத்தில் இன்று இந்து முன்னணியினர் நடத்தும்
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள் களைகட்டத் துவங்கி விட்டன.
இந்து முன்னணியின் சாதனைகளில் சில...
இந்து முன்னணியின் சாதனைகள்:
இந்துமத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் , எதிர்த்துப் போராடுவது, வெற்றி பெறுவது , நூற்றுக்கணக்கான ஊர்களில் அந்நிய மதமாற்றப் பிரச்சாரத்தை முறியடித்து அந்நிய மத மாற்றத்தை தடுத்து வருவது.
வேலூரில் 400 ஆண்டுகளாக சாமிசிலைகள் இல்லாத கோயிலில் ஜலகண்டேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்தது.
முஸ்லிம் வஹாபியர்கள் மீனாட்சிபுரம் பெயரை ரஹமத் நகர் என்று பெயர் மாற்றம் செய்ய முயன்ற போதும், 1லட்சம் அரிஜன மக்களை மதமாற்றம் செய்ய முயன்ற போதும், இந்து முன்னணியால் இம்முயற்சிகள் தடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்ற சிஎஸ்ஐ திருச்சபை கிறிஸ்தவ பாதிரியார்கள் முயற்சித்த பொது இந்து முன்னணி தடுத்து நிறுத்தியது.
பொள்ளாச்சி கணபதி பாளையத்தில் மாநில அரசு நிதி உதவியுடன் பசு மாமிச ஏற்றுமதி தொழிற்ச்சாலைகள் துவங்கும் முயற்சியை ஆரம்ப கட்டத்திலேயே முறியடித்தது.
பல கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப் பட்டது.
ஆலய நிலம். ஆக்கிரமிப்பில் பல இடங்கள் - திருப்பூர்(4 கோடி), வடபழனி (10 கோடி), திருவண்ணாமலை(2 கோடி), தருமபுரி(9.5 ஏக்கர்), கோபி சமத்துவபுரம்(2.5 ஏக்கர்) இவ்வாறு எல்லா தாலுக்க மாவட்டங்களிலும் சொத்துக்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
திருவாரூரில் நீண்ட வருடங்களாக ஓடாமல் இருந்த தியாகராஜர் கோயில் திருத்தேரை மக்களை ஒன்று திரட்டி இந்து விரோதி கருணாநிதியின் ஆட்சியிலேயே ஓட வைத்தது.
நீலகிரி மாவட்டத்தில் எரிமாடு என்ற ஊரில் சுடுகாடாக பயன்படுத்தி வரப்பட்ட சிவன் கோயில் நிலத்தை வழக்கு தொடுத்து, வெற்றி பெற்று, கோயில் நிலத்தை மீட்டது.
உலகிலேயே முதன் முதலாக சமுதாயத்திற்காக வேலை செய்யும் தர்ம வீரர்களை உருவாக்கும் பாரதப் பண்பாட்டுப்பயிற்சி கல்லூரி திருச்சி அருகே
(
சீராத்தோப்பு) உருவாக்கப்பட்டது.
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்க பாரதியார் குருகுலம் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கவும், அவர்களிடம் இந்துதர்ம சிறப்புகளை புரிய வைக்கவும் இதுவரை 150 கிராமங்களில் பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழக மீடியாக்களின் தொடர் இந்து விரோத பிரச்சாரத்தை கட்டுப்படுத்தி இருக்கிறது.
இந்துமுன்னனியின் இடைவிடாத போராட்டத்தால், இந்து கடவுள்களை இழிவுபடுத்தி திருடர் கலகமான திக தமிழகத்தில் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.சட்டப்பிரிவு 35 A B C யின் படி
இந்து தர்மத்தை இழிவுபடுத்தும் செயல் சட்ட விரோதம் என வாதாடி வென்றது.
முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜ் யாத்திரை செல்வதற்கும் கிறிஸ்துவர்கள் ஜெருசேலம் செல்வதற்கும் பயண மானியம் தருவது போல ஹிந்துக்களின் புனித தளங்களுக்கும் யாத்திரை செல்வதற்கும் அரசாங்கம் மானியம் தரவேண்டும் என்று கேட்டு இந்து முன்னணியினர் போராடியதில் தமிழக அரசை கைலாஷ் யாத்திரைக்கு மானியம் தரவைத்தது
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி தமிழக மக்களிடம் (20 லட்சம் பேர்) நேரடியாக சென்று கையெழுத்து பெற்று தொடர் போராட்டம் , மாநாடு நடத்தியதில் , 2013ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசியில் ஸ்ரீரங்கத்தில் தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்யும்படி வைத்தது.
இதுபோன்ற பல பணிகளை இந்து முன்னணி
செய்து வருகிறது.இன்று தமிழகத்தில் இந்துக்களின் உரிமைக்காகப் போராடும் இயக்கம் என்றால் ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் தமிழக இயக்கங்கள் தான் என்ற முத்திரை பதிவாகி விட்டது.
இதற்காக எத்தனை இளைஞர்கள்
உயிரையே தியாகம்
செய்திருக்கிறார்கள். அவர்கள் சிந்திய இரத்தமும்,
தியாகமும் வீண் போகாது.புனித காவி பூமியான தமிழ் மண்ணையும்,தமிழ் மொழியையும்,தமிழக மக்களையும் தமிழர்களின் தொன்மையான பண்பாடுகளையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்போம்.


நன்றி இணையம்