*மண், உலோக பாத்திரங்களின் நன்மைகள்*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

உலோகம் கண்டுபிடிப்பிற்கு முன்பே நாம் மண்ணால் செய்த பாண்டங்களை பயன்படுத்தி வருகிறோம்
பல்லாயிரக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் உருவான மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பலவகையான சாட்சியங்கள் உள்ளது. அக்காலத்தில் வீடுகள் கூட களிமண்ணால் கட்டப்பட்டு அதில் வாழ்ந்தும் உள்ளனர்.
களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகள் தனி சுவை தரும் மேலும் அவ்வாறு செய்யப்பட்ட உணவுகளில் மருத்துவகுணம் நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். மண்பானைகளில்சேமித்து வைத்து உபயோகிக்கும் தண்ணீர் சுவையாகவும் குளிர்ந்தும் இயற்கை மாறாமல் இருக்கும். இதனால் தான் மண்பானைகளை ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி என்று சொல்கிறோம்.
தோண்டி,குடம்,தோசைக்கல், இட்லிப்பானை, குளிர் சாதனப்பெட்டி, சித்திரப்பானை, காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள் கூண்டு என்று பலவகையான பொருட்களையும் இந்த களிமண்ணால் உருவாக்கப்படுகிறது. அக்காலத்தில் வீட்டில் அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரியஅளவில் மண் தொட்டிகள் (குதிர்)உருவாக்கப்பட்டு அதில்தானியங்களை சேகரித்து வந்தனர்.
மண்பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.
உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும்
இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால்
புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
பராமரிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங் களிலேயே சிறந்தது மண் பாண்டங்கள்தான். மண் சட்டிகளில் உள்ள நுண்துளைகள் மூலமாக நீராவியும், காற்றும் ஊடுருவி உணவை சரியான பதத்தில் சமைக்க வைக்கும். மேலும், இதில் சமைத்த உணவு கூடுதல் சுவையுடனும், பல மணி நேரம் கெடாமலும் இருப்பதோடு, அமிலத்தன்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது.
இவ்வளவு அருமை
பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து
வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
*வெள்ளிப் பாத்திரம்* உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம்
ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.
*பித்தளை மற்றும்* செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்சனைகள்
வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
*செம்புப் பாத்திரத்தில்* தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப்
பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு(steel)
போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
*இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம்* என்பது அந்தக்கால அறிவுரை.
எஃகு / உருக்கு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம்,
கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப்
பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம்
முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!
*செப்பு பாத்திரம்-(E-Coli)-கோலையின் முதல் எதிரி செப்புப் பாத்திரங்கள்மருத்துவர்கள் தகவல்*
செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின்
பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகவீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க்
கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப்
பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன்
தெரிவித்துள்ளார். இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர்
மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும்
குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது
என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணத்தினாலேயே *கங்கை நீர்,செப்பு பாத்திரங்களில் சேமித்து* வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என இப்போது புதிதாகக்
கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது
குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.செப்புப்
பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம்
கூறுகிறது. எகிப்தில் தொன்மைக் காலம் முதலே செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும்
பழக்கம் உண்டு.
உலகையே அச்சுறுத்தும்-கோலைபாக்டீரியாவைக் கொல்லும் திறன் செப்பு உலோகத்திற்கு உண்டு
என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட இதுபோன்ற திறன் கிடையாது.
*செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அறையின் வெப்ப நிலையிலேயே நான்கே மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.*
எவசில்வர் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன.
பித்தளை பாத்திரத்தில் நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
இரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் இரத்தசோகை குறைகிறது. இந்த நீர் மிகவும்
தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், கலங்களால் உறிஞ்சப்படுகிறது.
உடலில்மெலானின்என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், ‘விடிலிகோஎன
அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.
*செம்பு குடங்களில் நீர் எதற்கு*
அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில்தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால்
இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், can வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள்
முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு
ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம்
நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து
வைப்பார்கள் ஏன் தெரியுமா?
*செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை* என்று அந்த
நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிந்ததிலிருந்து செம்புக் குடத்தில்
வைத்திருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்தில் கிடைக்கின்ற தண்ணீர், செம்புக்
குடத்துக்குப் போனதும்மினரல் வாட்டர்மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு
குடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள் போட்டு
வைத்தால் கூட உங்க வீட்டுத்தண்ணி தரமானதாக மாறிவிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி
இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும்
குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான்.
இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக
இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது
குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம்
கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும்
தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல்
சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
இந்திய பண்பாட்டின்படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின்
அடிப்படையாகும். *ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல்படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.* அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த
தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். தண்ணீர் மக்கி
போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில்
வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள
தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
1) பக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது
தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் -கோலி E-coli போன்ற
பக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில்
வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும்.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல
நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக
அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும்
உதவுகிறது.
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச்
செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும்
பக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள
இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க
கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும்
அது தடுக்கும்.
6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய
குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான்
தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க
தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும்.
இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
8) கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி
விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை
குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள்
அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது.
மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய இது உதவும்.
10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில்
ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான
தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.


 நன்றி இணையம்