ஜனாதிபதி தேர்லில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் #ராம்நாத்_கோவிந்த் ஜி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:37 | Best Blogger Tips
Image may contain: 4 people, people standing, flower and indoor
ஜனாதிபதி தேர்லில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் #ராம்நாத்_கோவிந்த் ஜி பற்றி அறிவோம் .
ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய 11 அம்சங்கள் :
1. ராம்நாத் கோவிந்த், .பி.,யின் கான்பூரில் 1945 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர்.
2. இவர் கான்பூர் பல்கலை.,யில் வணிகவியல் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்.
3. தலிக் சமூக தலைவரான இவர் 1994 முதல் 2006 வரை 12 ஆண்டுகள் .பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்.
4. வழக்கறிஞரான இவர், 1977 முதல் 1979 வரை டில்லி ஐகோர்ட்டில் மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு 1980 முதல் 1993 வரை சுப்ரீம் கோர்ட்டின் மத்திய அரசு நிலை குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 1978 ல் சுப்ரீம் கோர்ட் வழக்குறிஞராகவும் பணியாற்றி உள்ளார். 1993 வரை டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக ஏறக்குறைய 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1971 ல் டில்லி பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார்.
5. பார்லி., பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குழு, பார்லி., உள்துறை விவகாரங்களுக்கான குழு, பார்லி., பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழு, பார்லி.,ன் சமூக நீதி மற்றும் அதிகாரத்துவ குழு, பார்லி.,ன் சட்ட மற்றும் நீதிக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். ராஜ்யசபா குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
6. பா.., தலித் மோட்சாவின் முன்னாள் தலைவராகவும், அனைத்து இந்திய கோலி சமாஜ் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். பா..,வின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் இவர் இருந்துள்ளார்.
7. லக்னோ டாக்டர் அம்பேத்கார் பல்கலை.,யின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், கோல்கட்டா இந்திய மேலாண்மை கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
8. .நா.,வில் இந்தியாவிற்கான பிரதிநிதியாகவும் இருந்துள்ள இவர், 2002 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த .நா., பொதுக் குழு கூட்டத்தில், இந்தியா சார்பில் உரை நிகழ்த்தி உள்ளார்.
9. திருமணமான ராம்நாத் கோவிந்த்திற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
10. 2015 ம் ஆண்டு ஆக. 8ம் தேதி கோவிந்த், பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
11 . RSS - ல் பல ஆண்டுகள் உபி மாநிலத்தில் பணியாற்றியவர்.

 நன்றி இணையம்