எல்லை தாண்டி சென்றார்கள் வென்றார்கள்-எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:40 AM | Best Blogger Tips

பாகிஸ்தான் ராணுவம் பத்திரிக்கையாளர்களை அழைத் துக்கொண்டு இந்தியா சர்ஜிக்கள் தாக்குதல் நடத்திய இடத்தை காண்பித்து இங்கே பாருங்கப்பா.இந்தியா சொல் கிற மாதிரி இங்கே எதுவும் நடக்கவில்லை என்றுபாகிஸ்
தான் மக்களை நம்ப வைக்க படாது பட்டு வருகிறது.. ஆனால் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்முஷார
ப்போ.பாகிஸ்தானை தாக்குவதே இந்தியாவின் வேலை
.
நான் மட்டும் இப்பொழுது ஆட்சியில் இருந்திரு ந்தால் இந்தியாவை இரண்டில் ஒன்று பார்த்தி ருப்பேன் என்று வசனம் பேசியுள்ளார்.
ஆக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா பலத்த
அடி கொடுத்துள்ளது என்பது எதிரியும் ஒத்துக்கொண்டு ள்ள உண்மை.உண்மையிலேயே பாகிஸ்தானின் எல்லை க் கட்டுபாட்டு கோட்டுக்கு மிக அருகில் இருக்கும் கிராம மான மந்த்ஹோலில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ளே நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்குவது கஷ்டமான
காரியம் தான்.
ஆனால் புத்திசாலிகளுக்கோ ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி.அப்படி தான் இந்திய வீர்ர்கள் ரஸ்க் கை சாப்பிட்டுக்கொண்டே மந்த்ஹோலில் இருந்த 7 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளனர்.இதற்காக
7
சிறப்பு ராணுவப்படை குழு சென்றுள்ளது.இவர்களை 
எல்லைப்பகுதியில் இறக்கிவிட்ட விமானத்தில் இருந்து
சிக்னல்கள் சென்று கொண்டிருக்க நடு இரவில் நடந்து
சென்று எதிரி முகாம்களை தாக்கிய இந்திய ராணுவத்தின்
செயல் அசாத்தியமானது..
ஏனென்றால் உலகிலேயே வட கொரியா தென்கொரியா
எல்லைக்கு பிறகு அதிக வீரர்கள் கண்காணித்து வருவது
இந்த எல்லைக்கோட்டு பகுதியைத்தான் சுமார் 72 ஆயிரம்
வீரர்கள் இந்திய தரப்பிலேயே கண்காணித்து வருகிறார் கள்.இந்த எல்லைக்கட்டுபாட்டுக்கோடுசுமார்780 கிலோ
மீட்டர் தொலைவை கொண்டது.
அது மட்டுமல்லாது மலைகள் காடுகள் நிறைந்த இந்த எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சில இடங் களில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளது. இதை யும் தாண்டி சென்று தீவிரவாதிகளின் முகாம்களை
அழித்த படைக்கு மூளையாக இருந்து செயல்பட்டது
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல்தான்.
அவருக்கும் மூளையாக இருந்து செயல்பட்டது இந்தி யாவின் கார்டோசாட்-2சி செயற்கைகோள் தான்.இந்த செயற்கை கோள் உளவு துறையில் சிறந்து விளங்கும்
அஜித் தோவலுக்கு .உளவு கூறிய மாஸ்டர் மைண்ட்.. இந்த செயற்கைகோள் தான்பாகிஸ்தானின் மந்த்ஹோல் பகுதியில் உள்ள தீவிரவா திகளின் முகாம்களை மிகத் துல்லியமாக படம் மட்டும் அல்ல வீடியோவும் எடுத்து அனுப்பியது.
இந்த ஆண்டு ஜூன் 22ம் தேதியன்று விண்ணில் ஏவப் பட்ட கார்டோசாட்-2சி செயற்கைக்கோள் இந்தியா வின் உளவுத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்.இந்த
கார்டோசாட் வகை செயற்கை கோள்களை இஸ்ரோ
2005 ல் இருந்து விண்ணில் ஏவி வருகிறது. இந்த கார் டோசாட்-2சி இந்த வரிசையில் 5 வது செயற்கை கோளா கும்.இதன் மூலம் பூமியின் எந்த பரப்பில் இருக்கும் நிலப்
பகுதியை மிகத்துல்லியமாக பயன் படுத்த முடியும்.
.இந்த வகை செயற்கைகோள்களை பயன் படுத்தி மாதம் ஒரு முறை கடைசி புதன் கிழமை நடை பெறும் பிரகதி என்கிற வீடியோ கான்பெரன்ஸ் நிகழ்ச்சி
மூலம் நம்முடைய பிரதமர் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் வேலைகளை அதன் இயக்குனர்களிடம் விசாரித்துக்கொண்டே கார்டோ சாட் செயற்கைகோள் அனுப்பிய படங்களுடன் அந்த வேலையின் உண்மை நிலையை ஒப்பிட்டு பார்க்கிறார்..
இந்த கார் டோசாட்-2சி அமெரிக்க, இஸ்ரேல் தொழில் நுட் பத்தை விட மிக சிறந்த தொழில்நுட்பம் உள்ளது. மின் காந்த நிறமாலையில் செயல்படும் வகையில் சிறப்பு கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது. பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளி வாக படம் பிடிக்கும் சிறப்பு வாய்ந்தது இந்த செயற்கைக் கோள்.முக்கியமான பகுதிகளை வீடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் வகையில் சிறப்புகளை கொண்டது.
.
இந்த செயற்கை கோள் எடுத்துக்கொடுத்த படங்களை வைத்தே எதிரிகளின் மூவ்களை கண்காணித்து அதன்
படி சென்று இந்தியவீரர்கள் தீவிரவாதிகளை அழித்து
விட்டு பத்திரமாக திரும்பியுள்ளனர்.இந்திய வீரர்களை
பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பிவிட்டு அவர்கள் திரும்பி வரும்வரை சுமார் 5 பட்டாலியன் வீரர்களை அதாவது சுமார் 4000 வீரர்களை எல்லை அருகே தயாராக வைத்திருந்தது இந்திய ராணுவம்
ஏனென்றால் உள்ளேபுகுந்த வீரர்களுக்கு ஏதாவது ஒன்று
நடந்தால் ஒட்டு மொத்த எல்லை பகுதியையும் காலி செய்து விடும் திட்டத்தோடு தான் ராணுவம் தயார் நிலை யில் இருந்துள்ளது.இந்த சர்ஜிக்கள் தாக்குதலுக்கு முக்கி யமாக இருந்தது இந்தியாவின் உளவு விமானங்கள் இந்த
விமானங்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்து வாங்கப்பட்டது.
.
இந்த விமானங்கள் எதிரி ராடார்களை செயலிழக்க 
செய்வதோடு, எதிரிகளின் தொலை தொடர்பை துண்டிப்ப து அங்கிருந்து செல்லும் தகவல்களை ஒட்டுக் கேட்பது
போன்ற வேலைகளை 1௦௦ கிலோமீட்டர் தொலைவில் இருந்தே செய்யக்கூடியது.அதாவது இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தானின் 100 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெறும் அனைத்து தகவல் தொழில்நுட்ப கட்டளை
களை கட்டுபடுத்தும் வல்லமை கொண்டது
எதிரிகளை தாக்க சென்ற நம்முடைய வீரர்களும் இருளில் பார்க்கும் நைட் விஷன்நவீன கருவிகளால் நடந்து சென் று கொண்டு வாட்ச் வடிவில் இருக்கும் நவீன கம்யூட்டர் கள் மூலம் கார்டோசாட்-2சி செயற்கைககோள் கொடுக்கு ம் இலக்கை அடைவதற்கான வழிகளை பெற்றுக்கொண்டு இலக்கைதாக்கி வெற்றிகரமாக திரும்பியுள்ளனர்.

 நன்றி இணையம்