நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்கபிரட்டி சிறிது நேரம் ஊறவைத்த பின் குளிப்பது வழக்கமாக இருந்தது.
காரணம் கேட்டால் உடம்புச்சூடு தணிய என்று கூறுவார்கள்.
ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது.
இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக்கூடிய தீய கதிர்வீச்சுக்களை வெளிபடுத்துகின்றது.
அதனால் அதனை ஒரு பாபக்கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகிறது.
சனிகிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன.
அதனால் அந்த ஜாதகர் உடல், மனரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார்.
சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் ஊறிய எமது உடம்பு, தாக்கவிடாது தடை செய்கின்றது.
தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணை முழுக்கு.
இந்த தீயகதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது.
அந்த கிரகத்தின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிகமுக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய ஔியில் 1/2 மணிநேரம் நின்ற பின் குளிக்க வேண்டும்,
அதனால் தான் நமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்கும் வழக்கத்தினை பின்பற்றியுள்ளனர்.
ஆனால் தற்போது நாகரீகம் எனும் பெயரால் நாம் அதை பின்பற்றுவதில்லை.
நன்றி இணையம்