பெண்களின் கவனத்துக்கு!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:19 PM | Best Blogger Tips
பெண்களின் கவனத்துக்கு!

இரும்புச்சத்து ஆணை விட பெண்ணுக்கு அதிகம் தேவை என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். சாதாரண பெண்ணை விட தாய்மை அடைந்த, பிரசவித்த, பாலூட்டும் பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதலாய்த் தேவை. மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு உள்ள இளம் பெண்ணுக்கு இன்னும் அதிகம் தேவை. பல நோய் நிலைகளில் இரும்புச்சத்து குறைந்திருப்பின் அந்த நோய் இன்னும் அதிகம் ஆட்டம் போடும். சர்க்கரை நோயாளிகள், அறுவை சிகிச்சையில் இருந்து வந்தவர்கள், மூல நோயினர், ஃபைப்ராய்டு கட்டியினால், பெரும்பாடு(அதி ரத்தப்போக்கு) உள்ள மகளிர் எல்லோரும் அவ்வப்போது தங்கள் இரும்புச்சத்து அளவை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் ஃபோலிக் அமைலமும் அவசியம்.ஆதலால், அடிக்கடி நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் என சாப்பிடுவது நீங்கள் சாப்பிடும் இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும்.
வீட்டில் உங்கள் குழந்தை சுவரை பிராண்டி அந்த சுண்ணாம்பு காரையை சாப்பிட்டாலோ, அல்லது உங்க வீட்டு அம்மணி, கோயில்பிரசாதமாக‌ தந்த திரு நீரை அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிட்டாலோ, ‘என்னே பக்தி!’ என மெச்ச வேண்டாம். டாக்டரிடம் கொண்டு போய் ”அனீமியா” இருக்கிறதான்னு பார்த்து விடுங்கள். PICA என அழைக்கப்படும் இரத்த சோகைக்கான அறிகுறி இது. நெஞ்சுக்குள் குதிரை ஓடுவது போல் ஒருவித படபடப்பு, மூச்சிரைப்பு, இருந்து கொண்டே இருந்தாலும் இரும்புசத்தை தேடும் உடலின் நிலையாக இருக்கலாம்!

உடலுக்கு தேவையான முக்கிய சத்து இரும்பு. அதை காந்தமாய் உணவிலிருந்து கவர்ந்திழுக்க இளமை முதல் தவறிவிட வேண்டாம். மறுத்தாலோ, மறந்தாலோ, நோய் காந்தமாய் ஒட்டிக் கொள்ளும்!இரும்புச்சத்து ஆணை விட பெண்ணுக்கு அதிகம் தேவை என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். சாதாரண பெண்ணை விட தாய்மை அடைந்த, பிரசவித்த, பாலூட்டும் பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதலாய்த் தேவை. மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு உள்ள இளம் பெண்ணுக்கு இன்னும் அதிகம் தேவை. பல நோய் நிலைகளில் இரும்புச்சத்து குறைந்திருப்பின் அந்த நோய் இன்னும் அதிகம் ஆட்டம் போடும். சர்க்கரை நோயாளிகள், அறுவை சிகிச்சையில் இருந்து வந்தவர்கள், மூல நோயினர், ஃபைப்ராய்டு கட்டியினால், பெரும்பாடு(அதி ரத்தப்போக்கு) உள்ள மகளிர் எல்லோரும் அவ்வப்போது தங்கள் இரும்புச்சத்து அளவை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் ஃபோலிக் அமைலமும் அவசியம்.ஆதலால், அடிக்கடி நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் என சாப்பிடுவது நீங்கள் சாப்பிடும் இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும்.
வீட்டில் உங்கள் குழந்தை சுவரை பிராண்டி அந்த சுண்ணாம்பு காரையை சாப்பிட்டாலோ, அல்லது உங்க வீட்டு அம்மணி, கோயில்பிரசாதமாக‌ தந்த திரு நீரை அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிட்டாலோ, ‘என்னே பக்தி!’ என மெச்ச வேண்டாம். டாக்டரிடம் கொண்டு போய் ”அனீமியா” இருக்கிறதான்னு பார்த்து விடுங்கள். PICA என அழைக்கப்படும் இரத்த சோகைக்கான அறிகுறி இது. நெஞ்சுக்குள் குதிரை ஓடுவது போல் ஒருவித படபடப்பு, மூச்சிரைப்பு, இருந்து கொண்டே இருந்தாலும் இரும்புசத்தை தேடும் உடலின் நிலையாக இருக்கலாம்!

உடலுக்கு தேவையான முக்கிய சத்து இரும்பு. அதை காந்தமாய் உணவிலிருந்து கவர்ந்திழுக்க இளமை முதல் தவறிவிட வேண்டாம். மறுத்தாலோ, மறந்தாலோ, நோய் காந்தமாய் ஒட்டிக் கொள்ளும்!