ஆசைகளும் இளமை பூரிப்பும் அரும்பு விடும் வயதில் ஆசை என்ற நெருப்புயை தொட்டு – காயத்தால் ஏற்பட்ட ரணங்களை மறைக்க – உருவாகிறான் ஒரு அனாதை.
இளமையின் உந்துதல் – ஒரு அனாதை உருவாகிறான்.
பெற்றோர்கள் பிள்ளை நம்புகிறார்கள் ஆனால் பிள்ளைக்கள் எல்லையை மீறுகிறார்கள் விளைவு அவா்களும், பெற்றோர்களும் அவமானப்படுகிறார்கள்.
தாய்மையுள்ளம், தியாகம், பெறுமையின் இலக்கணம் தான் – பெண் ……
சிறு தவறு பெண்ணை என்னென்னவாக ஆக்கிறது. இது ஏன் எத்தனை வழிகளிலும் புரிந்தாலும் திரும்ப திரும்ப ஆண், பெண் -
தவறு செய்யுகிறார்கள்.
அனைதை ஆக்கும் இவா்களை கொன்றால் கூட தப்புயில்லை என நினைக்க தோன்றுகிறது.
க்ளைமாக்ஸ் பாடலில் நம்மை கண்ணீர்
மழையில் நனைத்து இதயத்தில் குடைவிரிக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
தன்னைத்தானே காப்பாற்றிக்
கொள்ள முடியாத டீன் ஏஜ் பருவத்து காதலால் எப்படி பெற்றோர்களும் மற்றவர்களும்
அவமானத்துக்கு உள்ளாகிறார்கள். டீன் ஏஜ் ஈகோவால் அடுத்த தலைமுறை எப்படி
அனாதையாக்கப்படுகிறது என்பதை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன்.
காதல் என்றால் என்ன, எதற்காக காதலிக்கிறோம் என்பதை இயக்குநர்
சுசீந்திரன் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
குடும்பத்தோடு
மட்டும் அல்லாமல் தற்போது காதலித்துக் கொண்டிருப்பவர்களும்,
பெற்றொர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன் என்று ரொம்பவே சுதந்திரம்
கொடுக்கும் பெற்றொர்களும், அதே சமயம் காதலில் எது எல்லை என்று
புரியாமல் தறி கெட்டு திரியும் காதலர்களுக்கும், இப்படம் பெரிய பாடமாக இருக்கும். ஆதலால், இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.