கால்ஷியம் அவசியம்...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:40 | Best Blogger Tips
கால்ஷியம் அவசியம்...

கிட்டத்தட்ட 1 முதல் 1.3 கிராம் கால்சியம் நமக்கு தினசரி தேவை. தினசரி 2 கப் மோர், கொஞ்சம் சோயாகட்டி(TOFU), கீரை, 1கப் பீன்ஸ், 1 கப் பழச்சாறு சாப்பிட்டாலே இந்த 1 கிராம் கால்சியம் கிஅடைத்து விடும். பாலில் நிறைய கால்சியம் இருந்தாலும் பாக்கெட் பால் குறித்து பயம் நிறைய இருப்பதால் முடிந்தவரை தவிர்க்கலாம். மற்ற உணவிற்கு வாய்ப்பில்லாதவரும், மெனோபாஸ் நேரத்தில் ஆஸ்டியோபோரோஸிஸ் இருப்பாதாக ஏற்கனவே மருத்துவரால் சொல்லப்பட்டவரும் மட்டும், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பால் எடுங்கள்.

பழங்களில் அத்திப்பழம் கால்சியம் நிறைந்த ஒரு கனி. உலராத சீமை அத்தி இன்னும் சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு அத்தியில் 170கிராம் கல்சியம் உள்ளது. ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா, இவற்றிலும் கால்சிய சத்து கூடுதலாக உள்ளது. கீரைகளை எடுத்தால் வெந்தயக் கீரை, வெங்காயத் தாள் மிகச் சிறப்பு. காலிஃப்ளவரிலும் மிக அதிக அளவு கால்சியம் உள்ளது. முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக் இவற்றிலும் கால்சியம் குறைவில்லாமல் உண்டு.

தானியங்களில் ராகிக்கு முதலிடம். கிட்ட்த்தட்ட 100கிராம் ராகியில் 380 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி/ராகி தோசை/ ராகி வெல்ல உருண்டை வீட்டில் இனி செய்யத் தவறாதீர்கள். கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவிற்கு இணையாக கால்சியம் உள்ளவை. ராகி ரொட்டிக்கு, ரஜ்மா குருமா பாலக் கீரை சேர்த்து தந்து, ஒரு கப் மோரோ அல்லது ஒரு கப் ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட்டால், அன்றைய தேவை கால்சியம் பூர்த்தி!

காய்கறிகளில் கேரட், வெண்டை, வெங்காயம், சர்க்கரைவள்ளிகிழங்கு இவற்றிலுள்ள சுண்ணாம்பு சத்து குறைவில்லாதது. புலால் சாப்பிடுபவருக்கு நண்டில் எக்கச்சக்கமாய் கால்சியம் கிடைக்கும். 100கிராம் நண்டில்  1600மிகி கால்சியமுள்ளது. அதே போல் மீனிலும் கால்சியம் மிக அதிகம். அது தான் நண்டு எலும்புக்கு நல்ல்துன்னு சொல்லிட்டாரே  என அவசரப்பட வேண்டாம். அலர்ஜி உள்ளோருக்கு நண்டு உடம்பெங்கும் அரிப்பை தடிப்பை ஏற்படுத்திவிடலாம்.  “சைனிஸ் ஃபுட் சாப்பிடலாமுன் வந்தோம் சார்!..சாப்பிடும்போது இந்தியனாக இருந்தார்..இப்போது மூஞ்சு சைனிஸாகவே மாறிடுச்சு”, என்று சைனிஸ் ரெஸ்டரண்டுக்கு சமீபமாய் போய் பதறி வந்த நண்பர் பலரை எனக்குத் தெரியும்.

கால்சியம் என்றதும் பலருக்கும் அது எலும்புக்கு நல்லது என்ற கருத்துதான் தெரியும். கால்சியம் இதய துடிப்பிற்கு, தசை வலுவிற்கு, இரத்த கொதிப்பு சீராக இருக்க , இரத்த நாளங்களில் புண்ணாகாமல் இருக்க என பல பணிகளுக்கு மிக அவசியம். உடல் சோர்வு போக்க உடனடி கால்ஸியம் மட்டுமே மருந்தும் கூட. கால்சியம் உடலில் சேர விட்டமின் டி சத்து ரொம்ப அவசியம். இப்போது விட்டமின் கே2, மக்னீசியமும் அவசியம் என்கிறார்கள். விட்டமின் டி சத்து எந்த ஆட்சிக்கு வந்தாலும் இலவசமாய் கிடைக்கும். கொஞ்ச நேரம் வெயிலில் நிற்க வேண்டும் அவ்வளவுதான் 15 நிமிட சூரியஒளி போதும்.

சுண்ணாம்புச்சத்து குறைவால், விழாமலே வரும் எலும்பு முறிவுகள் இன்று அதிகம். ஷாப்பிங் போவது மாதிரி மருந்துக்கடைக்கு போய் பல மருந்தை வாங்கி விருந்தாய் சாப்பிடுவோருக்கும் கால்சியம் குறையும். குறிப்பாய் ஸ்டீராய்டு மருந்து சாப்பிடுவோருக்கு இந்த வாய்ப்பு அதிகம். மாதவிடாய் முடிவில், குழந்தைப்பேற்றில் பாலூட்டும் போது, கால்சியம் குறையும்.  இவர்கள் எல்லோருக்குமே கூடுதல் கால்சியம் ரொம்ப ரொம்ப அவசியம். உணவில் அதை தேர்ந்து எடுத்து சாப்பிடுவது அவசியம். டாக்டர் சொன்னப்புறம் பார்த்துக்கலாம் என இராமல் 20 வயதுகளிலேயே இதில் கவனாமாயிருப்பது  நல்லது!

Via FB Doctor Vikatan