மகாசங்கடஹர சதுர்த்தி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:11 | Best Blogger Tips
‘மகாசங்கடஹர சதுர்த்தி 
========================

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை ‘வர சதுர்த்தி’ என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்றும் கூறுவார்கள்.

முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து இராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ண பட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம், செல்வாக்கு கிடைக்கும்.

ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.

இந்த விரதத்தைத் தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச்சின்னங்களை தரிசித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.

அவருடைய ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாவது ஒன்றை இதுவும் தெரியாதவர்கள் விநாயகரின் பெயரையாவது இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று.

இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடைப்பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

Via Fb வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை