நந்தியாவட்டப் பூவின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:28 AM | Best Blogger Tips


நந்தியாவட்டப்பூ பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. பூக்கள் வெண்மையாய் ஒற்றை அல்லது இரட்டையாயிருக்கும். ஒற்றை அடுக்கு பூவே சிறந்தது. இது பாலுள்ள செடியாகும்.
இதன் பூ, வேர், பால் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
இதனை நந்திபத்திரி, நத்தியாவர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்

நந்தியாவட்டப்பூ சித்தமருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகம் பயன் படுகிறது.

கண் நோய்கள் நீங்க

உடலின் முக்கிய உறுப்புகளில் கண்கள் முதலிடம் வகிக்கின்றது.

ஐம்புலன்களில் ஒன்றான கண்களை பேணிக் காப்பது மிகவும் அவசியம். கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அனைத்து வேலைகளும் கணினி மூலம் செய்யப்படுவதால் கண்களுக்கு அதிக பளு உண்டாகிறது. மேலும் இரவை பகலாக்கும் மின்சார விளக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வகைகளில் கண்களை பாதிக்கும் மீடியாக்கள் தற்போது பரவி வருகின்றன. இதனாலும் இரவு உறக்கமின்றி வேலை செய்வதாலும் கண் நரம்புகள் சூடாகிவிடுகின்றன.

இதுபோல் ஈரல் பாதிப் படைந்தாலும் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்று பலருக்கு 40 வயதிலேயே வெள்ளெழுத்து என்கின்றனர். மேலும் சிறு குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் கண்ணாடி அணிந்துள்ளனர். கண் லேசர் அறுவை சிகிச்சைகள் அதிகம் நடைபெறுகின்றன.

இந்த நிலை மாற நந்தியாவட்டப் பூ சிறந்த மருந்தாகும்.

நந்தியாவட்டப் பூவை சாறு எடுத்து அதனை கண்களில் சிறு துளி விட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறு, கண் படலம், கரும்பாவை முதலியன மாறும்.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண் நரம்புகள் பலப்படும்.

காச நோயின் பாதிப்பு குறைய

மனிதனை அழிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. காச நோயால் இந்தியாவில் வருடத்திற்கு பல லட்சம் மக்கள் பலியாகின்றனர். இந்த நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபட நந்தியாவட்டப் பூ உதவுகிறது.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும் உண்டு வந்தால் காச நோயால் ஏற்பட்ட களைப்பு, இருமல் நீங்கும். தேகம் வலுப்பெறும். மேலும் உடலுக்கு வனப்பையும் கொடுக்கும்.

மண்டைக் குத்தல் நீங்க

தலை வலிக்காமல் தலையில் குத்துவது போல் சிலருக்கு தோன்றும். பித்த அதிகரிப்பு மற்றும் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

இவர்கள் நந்தியாவட்டப் பூவை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் மண்டைக் குத்தல் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க

நந்தியாவட்டப் பூவின் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து கண்களில் விட்டால் கண் எரிச்சல் நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.

வெட்டுக்காயம் ஆற

நந்தியாவட்டப் பூவை அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பற்று போட்டால் காயம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்