விக்கலை நிறுத்துவது எப்படி...?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:30 AM | Best Blogger Tips
விக்கலை நிறுத்துவது எப்படி...?

“டயாஃப்ரம்” (Diaphragm) என்கிற தோல் போன்ற ஒரு தசை நம் மார்பில் உள்ளது. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது. விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள். இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது அளவுக்கு அதிகமாகவேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, “எபிக்லாட்டிஸ்”என்னும் சுவாசக்குழாயின்மூடியானது டக்கென்று மூடிக்கொள்ளும்.அதனால் ஏற்படும் ஒரு வித “விக் விக்” எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்
விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்

நாட்டு மாதுளம் பழத்தை சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும் என்கிறது ஒரு ஆய்வு

நன்றி - Doctor Vikatan