அறிந்து கொள்வோம்....

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips

 
 உலகில் அதிக மழைப்பொழிவு உள்ள இடம் எது.. ?
...................................................................................

உலகில் கொலம்பியாவில் உள்ள லோரோ தான்(Lloro - Colombia) அதிக மழைப்பொழிவு உள்ள இடம் (42 Feet precipitation per year) ஆனால் வருடத்தில் அதிக நாட்கள் மழை பொழியும் இடம் சிலியில் உள்ள பாகியா ஃபிளிக்ஸ் (Bahia Felix) வருடத்தின் 325 நாட்கள் மழை பெய்து கொண்டே இருக்கிறது இங்கு.

நம் உடலின் எல்லா நகங்களும் ஒரே அளவில் வளர்கிறதா?
.....................................................................................................
அப்படி இல்லை என்றால் எந்த விரலின் நகம் சீக்கிரமாகவும்
...................................................................................................... எந்த விரலின் நகம் மிக மெதுவாகவும் வளர்கிறது ?
.........................................................................................

நம் உடலின் நகங்கள் எல்லாம் ஒரே அளவில் வளர்வதில்லை. எந்த கைப்பழக்கம் உடையவர்களோ அந்த கை நகங்களே வேகமாக வளர்கிறது.

அதிலும் சுட்டு விரல் (index finger) வேகமாக வளர்கிறது. பெருவிரல் (thumb) நகம் மற்றவிரல்களை காட்டிலும் மெதுவாக வளர்கிறது.

இன்னும் சொல்லப்போனால் நம் கால் பெருவிரல் நகம் தான் மிக மெதுவாக வளர்கிறது.

நகம் வளர்வதற்கு நகத்தின் அடியில் உள்ள திசுவில் கெரோட்டின் என்ற புரதம் உற்பத்தியாகி உதவுகிறது.

இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் என்ன?
.......................................................................................................

இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் அதன் கண்களின் பின்புற உட் பகுதிகளில் "டேப்டம் லுசிடம்" என்று சொல்லப்படுகிற விளித்திரை ஒளிரும் செல் படலம் உள்ளது.

ஒளியானது கண்களின் ரெட்டினா எனப்படும் விளித்திரையின் மேல் பட்டு கண்களின் உட் சென்று டேப்டம் லுசிட படலத்தின் மேல் விழும் போது பிரதிபளிக்கின்றன.

இந்த ஒளிரும் படலம் இரவில் குறைந்த ஒளியிலும் அதற்கு உருவங்கள் தெளிவாக தெரிய பயன் படுகிறது.

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில்
................................................................................................. ஒளிர்வது எப்படி?
................................
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன அவற்றில் நுனிகளில் வெல்வெட்டு போன்ற நுண்துகள்கள் உருவாகின்றன.

இந்த துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் பேட்டன் என சொல்லப்படும் உடற்கூறு செல்களின் படி அந்தந்த நிறத்தை பெருகிறது.

அவற்றின் மீது வெயில் படும்போது கண்ணைக்கவரும் தோற்றத்தைப் பெறுகின்றன.

நம் கையால் இறகை தொட்டும் போது கைகளில் இந்த துகள்களை ஒட்டிக் கொண்டு அந்த இடம் நிறமற்ற வெளிர் இறகாகி விடும்.

தேனீக்கள் ரீங்காரமிடுவது ஏன் ?
.........................................................
உண்மையில் தேனீக்கள் ரீங்காரமிடுவதில்லை அதாவது அவைகள் சப்தத்தை எழுப்புவதில்லை.

தேனீக்களின் இறக்கைகள் நொடிக்கு 300 முதல் 400 தடவைகள் சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது.

இதுவே ஒரு வண்ணத்துப்பூச்சியாயிருந்தால் எதுவும் கேட்பதில்லை இதன் சிறகுகள் நொடிக்கு 6 முதல் 10 தடவைகளே சிறகடிக்கின்றன.

கொசுக்கள் சிறிய உருவம் மற்றும் சிறு இறக்கைகள் காதின் அருகில் வந்தால் மட்டுமே "ஙொய்" என்ற சப்தம் கேட்கிறது.

வறண்ட குளப்பகுதிகள் பாளம் பாளமாக வெடிப்பது ஏன் ?
..................................................................................................

குளம் குட்டையின் தரைப்பகுதிகள் இயல்பாக களிமண்ணால் அமைந்திருக்கும். களிமண்ணில் சோடியம் பென்டோனைட் எனும் வேதிப்பொருள் கலந்து உள்ளது.

இது ஈரப்பபசை இருக்கும் போது விரிவடைகிறது. அதாவது களிமண் இளகியநிலையில் அல்லது விரிவடைந்த நிலையில் இருக்கும்.

வறண்ட நிலையில் நீர்பசை இல்லை இழுவிசை குறைந்து சுருங்கியநிலயில் பாளம் பாளம் ஆக வெடிக்கிறது.

உயரமான மலைப் பகுதிகளுக்கு செல்லும் போது மூச்சு
................................................................................................. வாங்குவது ஏன்? ஆனால் அங்கு வசிப்பவர்கள் இயல்பாக
................................................................................................... இருக்கிறார்கள் எப்படி ?
.....................................

சமநிலப்பகுதிகளை காட்டிலும் உயரமான மலைப்பகுதிகளில் காற்றில் உள்ள ஆக்சிஜன் அடர்த்தி யானது குறைவாக இருக்கும்.

நுறையீரலுக்கு வந்து சேரும் காற்றில் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு முழுமை அடையாததால். நுரையீரல் அதிகமாக இயங்குகிறது.

அதிகமான காற்று உடலின் உள் இழுக்கப்படும். இதுவே அந்த பகுதியில் வசிப்ப்பவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் ( hemoglobin ) அளவு அதிகமாக இருக்குப்பதால் இந்த வித்தியாசத்தை அவர்களால் உணர முடிவதில்லை.

இதை தகவைமைப்பு என்று சொல்லலாம்.

நவீன கைபேசியை (அல்லது ) தொலைபேசியை கண்டு
...............................................................................................
பிடித்தவர் யார் ?
.............................
டாக்டர். மார்டின் கூப்பர் (Dr. Martin Cooper) .

இவர் மோட்ரோலா (US) நிறுவனர்.

ஏப்ரல் 3, 1973 ல் டைனாடேக் (DynaTAC) எனும் மாதிரி வடிவமைப்பு நியூயார்கில் பரிசோதிக்கப் பட்டது.

சிலந்தி குரங்கு (Spider Monkey) ஏன் அவ்வாறு
............................................................................. அழைக்கப்படுகிறது?
.....................................
மத்திய மற்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்

இவ்வகை குரங்குகள்,வால் மற்றும் கால்களையும்

கைபோல பயன்படுத்தி மரத்திற்கு

மரம் தாவுகிறது

(ஐந்து கைகள் உள்ளது போல் தோற்றம் தரும்)

எனவே அவ்வாறு அழைக்கப்படுகிறது..

உலகின் உயரமான [volcano] எரிமலை எது ?
.........................................................................

சிலி- அர்ஜண்டைனா எல்லையில் உள்ள ஓஜோஸ் டெல்

சலாடோ (Ojos del Salado) 6887 m / 22,595 ft.


செயல்பாடு மிக்கதாக (most active) கருதப்படும் எரிமலை எது ?
......................................................................................................
இன்னும் செயல் பாடு உடையதாக கருதப்படும் எரிமலை

வாஸிங்டன் மாகாணத்தில் உள்ள (USA) உள்ள செயின்ட்

ஹெலன் மலைசிகரத்தில் [Mount St Helens ] உள்ளது.

இறுதி சீற்றம் July 10, 2008 ல் நிகழ்ந்தது....

மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு எது?
.....................................................................

சிங்கம்..

இந்தியாவில் வற்றாத ஜீவா அந்தி எது ?
.................................................................

கங்கை..

உலகிலேயே மிக உயரமான சிகரம் எது ?
...................................................................

எவரெஸ்ட்..

மனித உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன ?
...........................................................................

6 லட்சம் நரம்புகள் உள்ளன..

சுற்று சூழல் பாதுகாப்பு சட்டம் எப்போது வந்தது..?
.....................................................................................

1986 ஆம் ஆண்டு

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்...
............................................................

*திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு பிரான்ஸ்.

• பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.

• ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்த்தத்தைத் தொனிக்க கூடியச் சொற்கள் நிறைய உள்ளன.

ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இல்லை.

• ஒட்டகம் எவ்வளவு பசியோடு இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாது.

• ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

• பாம்பின் பற்கள் இரையைக் கவ்வ மட்டுமே பயன்படும். தின்ன உதவாது.


உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி