நோய் கொடுக்கும் நொறுக்குத் தீனிகள்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:19 PM | Best Blogger Tips

Photo: நோய் கொடுக்கும் நொறுக்குத் தீனிகள்! ! ! !

குழந்தைகள் வாழ்வு என்பது பெற்றோரையே பெரிதும் சார்ந்தது. அவர்களின் பாதுகாப்பு, நலம், வளர்ச்சி, பழக்கம், பண்பு என்று பலவும் பெற்றோரையும் மற்றோரையும் பொறுத்தே அமைகிறது. எனவே, குழந்தைகளை வளர்ப்பதில் இவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்; திட்டமிட்டும் செயல்பட வேண்டும்.

குழந்தை பிறந்த 6 மணி நேரத்திற்குள் குழந்தையின் தாய்தனக்குச் சுரக்கும் பாலை (சீம்பால்) தவறாது, வெளியேற்றி வீணாக்காது குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டால ே குழந்தையின் வாழ்நாள் முழுக்க நோய் தடுக்கும் ஆற்றலை அது குழந்தைக்கு வழங்குகிறது.

அடுத்து ஆறுமாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்குஉணவாகக் கொடுக்க வேண்டும். வேறு உணவுகள் கொடுக்கக் கூடாது; தேவையும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்மாற்றுணவு தரவேண்டும்.

ஆறு மாதத்திற்குப் பிறகு வேகவைத்த உருளைக் கிழங்கு, முட்டை, வேகவைத்த பருப்பு, கீரை இவற்றை மசித்துக் கொடுக்கலாம். முதல் ஒரு வருடத்திற்கு மருத்துவரின் ஆலோசனையின்படியே உணவுகளை வழங்குவது நலம். ஒரு வயது வரை குழந்தை தான் என்ன உண்ண வேண்டும் என்று எதையும் கேட்பதில்லை. பெற்றோர்தான் தேர்வு செய்து, மருத்துவர் கூறுவதைக் கேட்டுத் தரவேண்டும்.

ஒரு வயதுக்குமேல் குழந்தைகள் உணவுகளை அதுவே தேடும். அப்போது இன்னும் விழிப்பாக பெற்றோர் செயல்பட வேண்டும். காரணம், அருகில் கிடைப்பதையெல்லாம் வாயில் வைக்கும். மண், துரும்பு, சிறு பொருட்கள் என்று எது கிடைத்தாலும் வாயில் போடும். இதைக் கண்காணிக்க வேண்டும்; இதுபோன்ற பொருள்கள் அருகில், அதன் கையில் கிடைக்காமல் செய்வதோடு, குழந்தை புழங்கும் இடங்களைத் தூய்மையாக வைக்க வேண்டும்.

இதில் கவனக் குறைவாக பெற்றோர்கள் இருக்கும் போதுதான்வயிற்று டல் பிரச்சினைகளும் வயிற்றுப் போக்கும் வருகிறது. நீர், நெருப்பு, கூரிய பொருட்கள் அருகில் இல்லாமல் பொறுப்புடன் பார்க்க வேண்டும். சூடான பொருட்களைக் குழந்தைகள் தொடும் இடத்தில் வைக்கக் கூடாது.

இரண்டு வயதுக்கு மேல் குழந்தைகள் உணவைத் தேடிச் சென்று எடுக்கும். எனவே, சிறுவயதுமுதலே உடலுக்கு உகந்த உணவுகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும். குழந்தை பெரிதும் விரும்புகிறதுஎன ்பதாலும், அதன் மீதுள்ள பாசத்தாலும், இனிப்பு, சாக்லெட், பிஸ்கெட், அய்ஸ்கிரீம் போன்ற பொருட்களைக் கொடுத்துப் பழக்கக்கூடாது.

முதலில் இவற்றின் ருசி கண்டுவிட்டால், பின் அவற்றையே அதிகம் உண்டு, நல்ல சத்தான உணவுகளைக் குழந்தைகள் புறக்கணிக்க அல்லது வெறுக்கத் தொடங்கும். 95% குழந்தைகள் உடல்நலம் கெட இதுவே காரணம்.

சிறுவயதில் குழந்தைக்கு உணவை எப்படிப் பழக்குகிறோமோ அதுவே அவர்கள் வாழ்நாள் எல்லாம் வரும்.எனவே, திட்டமிட்ட, சத்தான, சமச்சீரான, உடலுக்கு உகந்த உணவைத் தரவேண்டும். நோயின் ஊற்றுக்கண் (தோற்றுவாய்) நொறுக்குத் தீனிகள் என்றால் அது முழு உண்மை.
சாக்லெட், பிஸ்கெட், பீட்சா, சிப்ஸ், அய்ஸ்கிரீம், கேக் என்று இன்று எத்தனையோ உணவுகள் வந்துவிட்டன. வணிகநோக்கில் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இவை உற்பத்தி செய்து, கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இவை போன்ற செயற்கை உணவுகள் இரசாயனக் கலவையை உள்ளடக்கி இருப்பதால் உடல்நலத்திற்குப ் பெரும் கேடு உருவாக்கி, நோய்களைக் கொண்டு வருகின்றன.

கெடாமல் இருக்க இரசாயனம் கலந்து,பாக்கெட் களில் அடைக்கப்பட்ட உணவுகளே இன்று பெருமளவில் கடைகளில் தொங்குகின்றன. அவை அனைத்துமே கேடானவை.

பழங்களைப் பச்சையாக உண்ண வேண்டுமேயன்றி பழச்சாறு என்ற பெயரில் பாட்டில் பானங்கள் பருகுவது உடல்நலத்திற்குக ் கேடு. உடலுக்குக் கேடு என்பதோடு பணமும் பலமடங்கு செலவாகும்.

அய்ந்து ரூபாய் பெறுமானமுள்ளது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு,ச ெயற்கையாக, இரசாயனம் கலந்து வரும்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . இச்சுரண்டலை உணர்ந்து உணவுகளைத்தேர்ந்தெடுக்க வேண்டும்.

துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றுள் உடலுக்குக் கேடானவையே அதிகம். குறிப்பாக கொழுப்பைக் கூட்டும். உடல் பருமன் உருவாக்கும். உடல்பருமன் என்பது நோய்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.

பொதுவாகவே, உடலுக்குக் கேடு பயக்கக்கூடியவை ருசியாகவும், நன்மை பயக்கக்கூடியவை அதிக ருசியில்லாமலும் இருக்கும். எனவே, நாவிற்கு அடிமையாக ருசியைத் தேடினால் நோய்க்கு ஆளாகி நொந்து கலங்க வேண்டி வரும். நாவை உணவிலும் சரி பேச்சிலும் சரி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டாலும் கேடு வரும்.

கீரை, பருப்பு, பழம், காய்கள், சிறுதானியங்கள் கட்டாயம் அன்றாடஉணவில் தேவையான அளவு இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை தேவையான அளவு குழந்தைகளுக்குக ் கிடைக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நித்தம் ஒரு முட்டை உடல்நலத்திற்கு உகந்தது. வாழைப்பழம், பால் இவை தினம் எடுத்துக் கொள்வது நல்லது. இம்மூன்றும் குறைந்த விலையில் நிறைந்த பயன் அளிக்கக்கூடியது .

வெறும் இனிப்பைத் தருவதைவிட, வாழைப்பழத்தில் தேன் கலந்து கொடுக்கலாம். பீட்ரூட், காரட்டில் இனிப்பு செய்து தரலாம். வெல்லம் கலந்த கேழ்வரகு அடை தரலாம். கொழுக்கட்டை, சுவைப் பிட்டு போன்றன இனிப்பையும் தரும், நலத்தையும் தரும். எனவே, நொறுக்குத்தீனிகளை நொறுக்குவோம் (வெறுப்போம்): நலம் தரும் உணவை நாடுவோம்.

நன்றி மருத்துவ-தகவல்கள்