கோடையில் மிளகாயை தவிர்த்தல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips


கோடையில் மிளகாயை முற்றிலுமாக தவிர்த்தால், குடலுக்கு ரொம்ப நல்லது. கண்டிப்பாக பச்சை மிளகாயை தவிருங்கள். குடல் தொடர்பான பெரும்பாலான நோய்கள் கோடையில் தான் உருவாகின்றன. இதற்கு காரம் மிகுதியான உணவுகளும் ஒரு காரணம்.
உலர் சருமம் உள்ளவர்கள் கை, கால், முகத்தில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு,குளிக்கலாம். பெண்கள், அடிக்கடி மருதாணி இட்டுக் கொள்வது, உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
பலர், கோடையில் எந்த விரிப்புமின்றி, வெறும் தரையில், சுகமாகஇருக்கிறதென்று படுத்துறங்குகின்றனர்.இது, தவறான பழக்கம். தரையிலிருக்கும் மெல்லிய வெப்பம், உடம்பில் ஏறுவதுடன் தசை வலியை உண்டாக்கும்.
வாரம் ஒரு நாள், உணவில் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். குடல் மற்றும் வாய்ப்புண் ஏற்படாமல் இருக்கும்.
கோடையில், பெண்களுக்கு வருகிற வேர்க்குருவிற்கு வேப்பிலை, மஞ்சள், சந்தனம் மூன்றையும் மைய அரைத்து பூசினால், வேர்க்குரு உதிர்ந்து விடும்.
 
நன்றி