******சிவசக்தி******
சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சியைக் காண்கின்றோம்.
ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண்.
இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது.
மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.
இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது.
எது அறிகின்றதோ அது சைதன்யம்.
எந்த உடலின் மூலமாக எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம்.
உயிர்த் தத்துவம் சிவம்;
உடல் தத்துவம் சக்தி.
உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது.
உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது.
சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்க மற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.