தினமும் ஒரு கப் காரட்- கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:43 PM | Best Blogger Tips


தினமும் ஒரு கப் காரட்- கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது!



பீட்டா கரோடின் என்ற சத்தின் மூல ஊற்று காரட் என்றால் மிகையாகாது வைட்டமின் -யின் முன்னோடி பீட்டா கரோடின் இது காரட்டில் அதிகம் உள்ளது.

உணவு சீரணத்திற்கு காரணமாகும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் காரட்டில் உள்ளது. மாலைக் கண் நோயை தடுக்கவல்லது காரட்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த சத்துக்களெல்லாம் அதில் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சருமத்தில் லேசான மஞ்சள் தன்மை ஏற்படும். பச்சை காரட்டில் உள்ள பீட்டா கரோடினை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதினால் இருதய நோய்களைத் தடுக்க முடியாது. பச்சை காரட்தான் நல்லது.

பீட்டா கரோடின் நம் உடலில் வைட்டமின் -யாக மாற்றமடைகிறது. அதிக பளபளப்பு இருக்குமேயானால் பீட்டா கரோடின் சத்தும் அதிகமாக இருக்கிறது என்று பொருள்.

சமைக்கப்பட்ட ஒரு கப் காரட்டில் 70 கலோரிகள் உள்ளன. 4கிராம் நார்சத்தும், சுமார் 18மிலி கிராம் பீட்டா கரோடினும் உள்ளது. வைட்டமின் உணவில் எவ்வளவு இருக்கவேண்டும் என்ற அளவிற்கு இது மிகத்துல்லியமாக பொருந்தக்கூடியது. ஆரோக்கியமான தலை முடி, சருமம், கண்கள், எலும்புகள், சளிச்சவ்வு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும் கிருமிகளிலிருந்தும் காக்கிறது வைட்டமின் .

தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் 3வாரங்கள் அளவில் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

நமது பொதுப்புத்தி புரிதலுக்கேற்ப காரட் சாப்பிட்டால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஏற்படாது என்று தவறாக நினைத்து விடக்கூடாது. ஆனால் காரட்டில் உள்ள சத்து இல்லாததால் மாலைக் கண் நோய் ஏற்படலாம்!

சில தினங்களுக்கு ஒரு முறையாவது காரட் எடுத்துக் கொண்டால் மாலைக் கண் நோயை தடுக்கலாம். அதாவது மாலைக் கண் நோய் வைட்டமின் குறைபாட்டினால் வருகிறது என்ற நிலையிருக்கும்போது மட்டும் காரட் பயனளிக்கும்.

காரட்டை நறுக்கி, சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கிறது. அதாவது அதன் கடினமான செல் சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோடின் சமைக்கும்போது வெளிப்படுகிறது.

காரட்டுடன் வெண்ணெய் சிறிதளவு சேர்த்து எடுத்துக் கொண்டால் பீட்டா கரோடின் சத்தை உடல் நன்றாக உறிஞ்சி உள்ளே எடுத்துச் செல்லும்.

பீட்டா கரோடின் மட்டுமல்லாது ஆல்பா கரோட்டின், பயோ ஃபிளாவனாய்ட்ஸ் ஆகியசத்துகளும் உள்ளன. காரட்டில் உள்ள ஒட்டுமொத்த சத்துக்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதால் பயனில்லை. இன்னும் கூறப்போனால் மாத்திரை வடிவில் பீட்டா கரோடினை எடுத்துக் கொள்வது புகைப்பிடிப்பவர்களுக்கு தீங்கு கூட இழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.