கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:31 | Best Blogger Tips


கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க



 உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம், உண்ணும் உணவுகள் தான். எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல் நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது. அதிலும் இந்த பிரச்சனை இளம் வயதிலிருந்தே உண்ணும் உணவினாலும் ஏற்படும். ஏனெனில் அப்போது உணவுக்கட்டுப்பாடு எதுவுமின்றி, கண்டதை அதிகம் சாப்பிடுவோம். இது பிற்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, தேவையற்ற நோய்களை வரவழைத்துவிடும். எனவே, இத்தகைய பிரச்சனைகளை தடுக்க எந்தவிதமான உணவுகளை சாப்பிட்டால், சரியாகும் என்று ஒரு சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை என்னவென்று படித்து பார்த்து, அந்த உணவுகளை உண்டு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.






கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 1/13 Light on ரெட் ஒயின் அனைவருக்கும் ரெட் ஒயினின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். அதுவும் ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா (tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆகவே இதனை அளவுக்கு அதிகமாக பருகாமல் அளவோடு சாப்பிட்டால் நல்லது.



கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 2/13 Light on பாதாம் பாதாமில் வைட்டமின் மற்றும் ஃப்ளேவனாய்டு அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தடுத்துவிடும்.



கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 3/13 Light on டார்க் சாக்லெட் பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியும். அதுவும் இதயம் நன்கு செயல்படும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், உடலில் இருந்து 10 சதவீத கொலஸ்ட்ராலும் குறையும்.




ஓட்ஸில்
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இது உடலானது கொலஸ்ட்ராலை உறிஞ்சாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 5/13 Light on அவோகேடோ அவோகேடோவில் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்


கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 6/13 Light on ஆலிவ் ஆயில் இதயம் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 7/13 Light on ஆப்பிள் ஆப்பிளில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 8/13 Light on ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்கப்படுத்தும். ஆகவே வாரத்திற்கு இரண்டு முறை சாலமன் அல்லது கானாங்கெளுத்தி மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டால் நல்லது.




கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 9/13 Light on சோயாபீன்ஸ் சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இந்த சோயாபீன்ஸ் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.


கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 10/13 Light on தக்காளி தக்காளியில் லைகோபைன், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இவை கொலஸ்ட்ராலை எளிதில் கரைத்துவிடும். ஆகவே அதனை சமைத்தோ அல்லது அப்படியேவோ சாப்பிட்டால், நல்லது.

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 11/13 Light on வெண்டைக்காய் வெண்டைக்காய் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். ஏனெனில் அதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இதனை வறுத்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும்.


கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!! 12/13 Light on பூண்டு பூண்டை அதிகம் உணவில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைந்து விடுவதோடு, தமனிகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிலும் தினமும் அதிகமான அளவில் பூண்டை சாப்பிடாமல், 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.