பக்கவாதத்தை தடுக்க பக்கா உணவுகளை சாப்பிடுங்க!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:14 | Best Blogger Tips
பக்கவாதத்தை தடுக்க பக்கா உணவுகளை சாப்பிடுங்க!!!

பக்கவாதம் என்பது முளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதாலோ அல்லது இரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதாலோ, முளைக்கு சரியான அளவில் இரத்தம் செல்லாமல் இருப்பதால், முளையின் செயல்பாடு குறைகிறது. இவ்வாறு முளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால், எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போகிறது. உதாரணமாக, சரியாக பேச, புரிந்து கொள்ள முடி

யாதது, சில உறுப்புகள் இயங்காமல் போவது என்பன.

இத்தகைய பிரச்சனை 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் பொதுவாக ஏற்படும். அதிலும் இந்த பிரச்சனை பரம்பரை பரம்பரையாக இருந்தாலும், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் ஏற்படும். இதில் பரம்பரையாக வந்தால், குணப்படுத்துவது கடினம். ஆனால் மற்ற காரணங்களால் வந்தால் சரிசெய்து விட முடியும்.
மேலும் உடலில் அதிக உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாயிருத்தல் போன்றவற்றாலும் ஏற்படும். ஆகவே அத்தகையவற்றை சரிசெய்ய நாம் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும். எந்த ஒரு உணவையும் கட்டுப்பாடின்றி சாப்பிடக்கூடாது. இப்போது எந்த உணவுகளைச் சாப்பிட்டால், பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம் என்று பார்ப்போமா!!!

பீன்ஸ் மற்றும் மற்ற ஃபோலேட் நிறைந்த உணவுகள்

பீன்ஸ் இதயத்திற்கு மட்டுமின்றி மூளைக்கும் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் வைட்டமின் பி ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பக்கவாதத்தை தடுக்கும் சிறந்த உணவுகளில் பீன்ஸ் மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால், பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஒரு ஆய்வின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயா

ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயா உணவுப் பொருட்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்களை டயட்டில் சேர்த்துக் கொண்டால், இது இரத்ததில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை 28% குறைக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்டி- ஆக்ஸிடன்ட் உணவுகள்

காய்கறிகள் மற்றும பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் புண் மற்றும் பிளேக் போன்றவை ஏற்படாமல் தடுகின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டமானது சீராக ஓடுகிறது.

பொட்டாசியம் உணவுகள்

பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்தால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் டயட்டில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், முளைப்பயிர்கள் மற்றும் உலர்ந்த திராட்சை போன்றவற்றை சேர்த்தால், உடலுக்கு தேவையான பொட்டாசியச் சத்து கிடைக்கும்.

கொழுப்பு குறைவான பால்

பால் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டீர்களா? உடனே பாலை குடிக்க ஆரம்பிங்க. அதிலும் கொழுப்பு குறைவாக உள்ள பாலை குடிப்பது நல்லது. ஏனெனில் பாலில் அதிக அளவில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆகவே அத்தகைய பாலை தினமும் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் குறைவதோடு, பக்கவாதம் ஏற்படாமலும் தடுக்கலாம்.

மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள்

எப்படி பொட்டாசிய உணவுகள் பக்கவாதத்தை தடுக்குமோ, அப்படி தான் மக்னீசிய உணவுகளும் பக்கவாதத்தை தடுக்கும். ஆகவே மக்னீசிய உணவுகளான பார்லி மற்றும் கார்ன்மீல் போன்ற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உணவுகள்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதிலும சாலமன் மீன் மிகவும் சிறந்தது. இந்த மீனை சாப்பிட்டால், பக்கவாதம் ஏற்படாமலும் தடுக்கலாம். எப்படியெனில் அதில் உள்ள ஒமேகா-3, உடலில் இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும். ஆகவே அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்று இருப்பவர்கள், இனிமேல் மீனை சாப்பிட தொடங்கலாமே.