பருவப் பெண் உரிய வயதில் பூப்பெய்தவில்லையா?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:10 PM | Best Blogger Tips

செம்பருத்திக்கு ருது உண்டாக்கக் கூடிய குணம் உண்டு. தகுந்த வயது வந்து, பருவம் எய்தாத பெண்களுக்குச் செம்பருத்தம் பூவை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடக் கொடுத்து வர, பெண்கள் எளிதில் பருவம் அடைவார்கள்.

செம்பருத்திப் பூவின் கல்கண்டுத் தூளைச் சேகரித்து, தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். இதில் லவங்கம், ஏலக்காய் சேர்த்து, தினமும் இரு வேளை குடித்து வர, சீக்கிரமே மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். இரத்தப் போக்கு நிற்க, 2 -3 செம்பருத்திப் பூவை பசு நெய்யில் வறுத்துத் தின்ன வேண்டும். புஷ்பவதியாகாத பெண்களுக்கு இதைக் கொடுத்து வந்தால், சீக்கிரம் புஷ்பவதி ஆவார்கள்.

கடுகு, கருஞ்சீரகம், பனை வெல்லம் இன்மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதைப் பருவ வயதில், வயதுக்கு வராமல் இருக்கும் பெண்ணுக்கு, அதிகாலையில் கொடுத்து வந்தால், விரைவில் பலன் கிடைக்கும். கல்யாண முருங்கை என்ற முள் முருங்கை இலையை வேக வைத்துக் கடைந்து, தேங்காய் எண்ணெயில் தாளித்துச் சோறறுடன் உண்ண, பெண்களுக்கு பால் சுரப்பு ஏற்படும்.
பருவம் அடையாத பெண்கள் விரைவில் ருதுவாக சோம்பு 2 சிட்டிகை எடுத்து, அத்துடன் சீரகம் சிறிது, குங்குமப்பூ தாள் பத்து எடுத்து, இரு குவளை நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிச் சிறிது சர்க்கரை சேர்த்து பருகவும்.

அன்றாடம் வெற்றிலை பாக்குடன் 2 முதல் 5 தாள் குங்குமப்பூ சேர்த்து, மென்று விழுங்கவும். மாத விலக்கு சரிவர வராதவர்கள் குங்குமப்பூவை மேற்சொன்ன முறைகளில் பயன்படுத்தி வர, ருது உண்டாகும்.
(நன்றி இணையத்தில் எடுத்தது )