மாத விலக்கு நாட்களில் ஏற்படும் வலியைப் போக்க

மணக்கால் அய்யம்பேட்டை | 3:27 PM | Best Blogger Tips


சில பெண்களுக்குத் மாத விலக்கு நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு வயிற்றில் அதிக வலி ஏற்படுவதுண்டு. தூர விலக்கு நிற்கும் வரை சிலருக்கு வலி நீடிப்பதுண்டு. இப்படிப்பட்ட பெண்கள் தூரவிலக்கு ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்ததும் 2, 3 நாட்கள் முன்னதாக எண்ணெய்ப் பண்டங்கள், கிழங்கு வகைகள், கடலை வகைகள், சுக்கா சப்பாத்தி, தோசை, ரவா உப்புமா, போண்டா, பஜ்ஜி, காரக் குழம்பு, வத்தல் குழம்பு, மிளகாய்ப் பொடி, ஆகியவற்றைக் கண்டிப்பாக நீக்கி விட வேண்டும்.

இளங்காய்கள், கீரைகள், துவரம் பருப்பு, மிளகுப் பொங்கல், சாம்பார் தக்காளி ரசம், மிளகு ரசம், மோர் பால், நெய், புழுங்கலரிசி, பச்சரிசி, பச்சைப் பருப்பு ஆகியவற்றை மட்டும் சமைத்து உணவாக உட்கொண்டு வரவேண்டும். தூர விலக்கு நிற்கும் வரை, இந்த உணவு
முறையை கடைபிடித்தால் வலி குணமாகும்.

3 மாதங்கள் ஒவ்வொரு மாதவிலக்கின் போதும், தொடர்ந்து இந்த உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், எளிதில் குணமாகும். குறிப்பாக மலக்கட்டு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி மலக்கட்டு ஏற்படும் பெண்களுக்குத் மாதவிலக்கு காலத்தில் வலி ஏற்படுவது சகஜம் ஆகிறது. எனவே மாதவிலக்கு நாட்களில் வலியுள்ள பெண்கள் மாதம் ஒரு முறை குறிப்பாகத் மாதவிலக்கு ஆவதற்கு 7 நாட்கள் முன்னதாக சுகபேதி அருந்தலாம்.

தூர நாட்களில் கடுமையான வலிக்கு ஆளாகும் பெண்கள் தூரம் ஏற்படப் போகும் 3 நாட்கள் முன்னதாக இரவு உணவை விலக்கிப் பாலும், 2 வாழைப் பழமும் மட்டும் உட்கொண்டு வரவும். வாழைப் பழத்தோடு சிறிது தேனும் சேர்த்துக் கொள்ளலாம். சீனியைக் கண்டிப்பாக விலக்க வேண்டும். சீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். காலை உணவில் இஞ்சி, எலுமிச்சம் பழ ரசம், பச்சைக் கொத்து மல்லி சேர்த்து அரைத்துச் சிறிது உப்பிட்டுக் காலை உணவோடு உண்டு வரவேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், வலி குணமாகும்.
( நன்றி  தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி )