தசைகளை உறுதிப்படுத்த

மணக்கால் அய்யம்பேட்டை | 12:42 PM | Best Blogger Tips

வைட்டமின் பி1:
தசைகளை உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகிக்கும் வைட்டமினாக பி1 உள்ளது. தினசரி உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்களை பயன்படுத்துவதும், சக்திக்காக ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துவதும் இந்த வைட்டமினின் பணியாகும். சூரியகாந்தி விதைகளில் பி1 வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
வைட்டமின் பி2:
ரிபோஃப்ளாவின் என்றும் அழைக்கப்படும் பி2 வைட்டமின் உடலுக்குத் தேவையான மூன்று முதன்மையான ஊட்டச்சத்துக்களாக இருக்கும் புரதங்கள், க்ராப்ஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்கவும், நொதிக்கவும் மிகவும் உதவுகின்றன. பாலில் ரிபோப்ளாவின் அதிகளவில் உள்ளது.
வைட்டமின் பி3:
மூன்றாவது பி வைட்டமினாக இருக்கும் நியாஸின் உடலின் சக்தியை உற்பத்தி செய்வதிலும், நரம்பு மண்டலத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது செரிமாணத்தை ஆரோக்கியமான முறையில் நிகழ்த்தவும் உதவி வருகிறது. கோழிக்கறியில் நியாஸின் அதிகளவில் உள்ளது.
வைட்டமின் சி:
முதுகெலும்புக்கும், உடலின் தசைகளுக்கும் இடையில் சரியான இணைப்பு திசுக்களை பராமரிக்க வைட்டமின் சி பெரிதும் உதவுகிறது. இந்த வைட்டமினில் உள்ள அதிகபட்ச ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதுகாக்கின்றன. ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ், ப்ராக்கோலி, குடைமிளகாய் மற்றும் பப்பாளி ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
போலிக் அமிலம்:
உடலில் புதிய செல்களை உருவாக்கவும், இரத்த சோகையிலிருந்து உடலை காக்கவும் போலிக் அமிலம் உதவுகிறது. ஒரு கோப்பை அவரையில் கிடைக்கும் போலிக் அமிலம் ஒரு நாள் முழுவதற்குமான அளவு 90 சதவீதத்தை நமக்கு அளித்து விடும்.
வைட்டமின் :
ரெட்டினால் என்று அழைக்கப்படும் வைட்டமின் , உடலின் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சளிச்சவ்வு நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவி உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கேரட், பசலைக் கீரை, தக்காளி, வின்டர் ஸ்குவாஷ் மற்றும் டர்னிப் ஆகியவற்றில் வைட்டமின் நிறைந்துள்ளது.
வைட்டமின் டி:
சூரிய ஒளி வைட்டமின்என்று அழைக்கப்படும் வைட்டமின் D- நாம் சூரிய வெளிச்சதிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வெண்ணைய் நீக்கப்பட்ட பால், சால்மன் மீன், இறால் மற்றும் முட்டை ஆகியவற்றிலும் வைட்டமின் டி குவிந்துள்ளது.

 நன்றி இணையம்

செந்தூரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips

சிந்துார் - ( செந்தூரம் )
அழகானஆரஞ்சு நிறம் 
ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயங்களில் மட்டுமே கிடைக்கும் ..
என் இஷ்ட தெய்வமான அவரின் சிந்தூரை இட்டுக் கொள்வதில் எனக்கு அவ்வளவு இஷ்டம்.
இந்த சிந்தூரின் பின்னால் ஒரு சின்ன கதை உண்டு.
ஒரு முறை அரசவைக்குப் புறப்பட சீதா தேவி தயாராகிக் கொண்டிருந்தார்.
ஒரு வெள்ளிச் சிமிழிலிருந்து சிறிது சிந்தூரை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார்.
அவரை அழைத்துச் செல்ல வந்த அனுமன் இதை கவனித்தார்.
தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?என்று கேட்டார்.
சீதா தேவியும் தாராளமாக கேள் என்றார்.. நீங்கள் ஏன் தினசரி உங்கள் வகிட்டிலும் சிந்தூரை வைத்துக் கொள்கிறீர்கள் என்றார். .
என் கணவர் நீடூடி வாழ வேண்டும் என்பதற்காக என்றார்.. சீதா தேவி.
பிறகு அனுமன் சீதா தேவியை அரசவை வாயில் வரை சென்று விட்டு விட்டு.. தாயே நீங்கள் செல்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
சீதை தன் பணிப்பெண்களுடன் வருவதை கண்ட ராமன் அனுமன் எங்கே? என்று கேட்க.. சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சீதை கூறினார்.
சில நிமிடங்களில் தன் உடல் முழுவதும் சிந்தூரைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்தார் அனுமன் ..
அனுமா இது என்ன கோலம்? என்று ராமன் கேட்க.. அதற்கு அனுமன் ..தெய்வமே.. அன்னை நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிறு சிந்துார் தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால் நான் தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் சிந்துாரை தினமும் பூசிக் கொள்வேன் என்றார்.
இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும் வெகுளித்தனத்தையும் நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.
இந்தக் கதை ஒரு ஆங்கில சிறுவர் மாத இதழில் படித்தது.
ஜெய் ஸ்ரீராம்...


சிவப்பு முள்ளங்கி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips

இதயத்தின் நண்பன்:
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.
புற்றுநோய் தடுப்பு:
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.
உறுதியான எலும்பு:
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
பார்வைக்கு பலம்:
தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும். லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது. இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்:
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

 நன்றி இணையம்

குடற்புழுக்கள் நீங்கிட..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்க நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.
நன்றி இணையம்


*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :*👇👇👍

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips


1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ ோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉
மரமும் கடவுள்
👉
கல்லும் கடவுள்,
👉
நீரும் கடவுள.
👉
காற்றும் கடவுள்.
👉
குரங்கும் கடவுள்.
👉
நாயும் கடவுள் .
👉
பன்றியும் கடவுள் .
9. நீயும் கடவுள், 
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம்.,
பெண் ஆசையை ஒழிக்க
👉
இராமாயணம்
மண் ஆசையை ஒழிக்க
👉
மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉
பகவதம்,
அரசியலுக்கு
👉
அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு
👉
காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு
👉
சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு
👉
வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு
👉
யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு
👉
வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு
👉
கோள்கணிதம்.
11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"
கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
13. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
14. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 
👉👉
இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
👉💪👑👑
இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்👏💫🌟. 
😇😇😇😇😇

🙏🙏🙏🙏🙏

 நன்றி இணையம்