சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் (ஹிந்துகளின் உருவ வழிபாடு)

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் (ஹிந்துகளின் உருவ வழிபாடு)
--------------------------------------------------------------------------------

தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில்(கோயில்களில்) வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம் தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், 'நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?' என்றுகேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.

எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும், தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.

அவன் எங்குமே நின்று விடக்கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை'. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : 'அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.'

இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.

சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.

இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.

ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார். அதன் பலன்(ஆற்றல்) என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.

இன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான்.

சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும்.

சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை(மன்றம்) பெளத்த மத சபையாக(மன்றமாக) இருந்தது. அக்பரது சபை(மன்றம்) இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே(மன்றமாகவே) இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.

இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகி(தோன்றி)க் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்தின்(விடுதலையின்) தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.


இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:45 PM | Best Blogger Tips
இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!

இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாகஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் மத கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் . சமிபத்தில் தாண்டவம் என்ற திரை படத்தில் கூட நடிகர் விக்ரம் ரா வில் பனி புரிவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே.

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 4:07 PM | Best Blogger Tips
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips
உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு !!!

சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.

சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட!

நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.

நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.

இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!
இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!

கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?

அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.

இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.

பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம், ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.

நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.

நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.

காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.

'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.

அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்! அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் தோன்றும்.

'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்' எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.

'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.

சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக் காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக் கொள்வது.

'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக் கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின் வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.

நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.

'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப் மார்ஸ்டன்.

தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.

கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர் மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில் தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான் என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம் நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.

தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.

அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்', 'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?

உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.

காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால் திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.

எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?

சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?

உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர் களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.

பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.

உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு
உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!

தகவலுக்கு நன்றி
ரமேஷ்
 

டெங்கு காய்ச்சல்:

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 PM | Best Blogger Tips
டெங்கு காய்ச்சல்:

நோயின் அறி உணர்குறிகள்:

* தலைவலி
* கண் பின்புற வலி
* பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
* குமட்டலும் வாந்தியும்
* வயிற்றுக்கடுப்பு
* தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
* பசியின்மை
* தொண்டைப்புண்
* மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள் -- petechiae)[21]
* நிணநீர்க்கணு வீக்கம்
* வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்



தடுப்பு முறைகள்:

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் தீ நுண்மத்தில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.
கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

எளிதில் பாதிப்படைபவர்:

குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்
 

.ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:23 PM | Best Blogger Tips
ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்..


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும், புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஆலிவ் எண்ணெய் கெட்ட கொழுப்புகளையும் குறைக்கிறது. மேலும் இது உயர் இரத்தம் அழுத்தத்தையும், இதய நோய்களையும் வராமல் பாதுகாக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும், கற்கள் உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.


ஆலிவ் எண்ணெய் திரவ நிலையில் இருப்பதால் இதற்கு “திரவத் தங்கம்” என்று பெயர். ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி. ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.


தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்படுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.


உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.


ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக்கூடாது. அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்துவிடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும், மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.



ஆலிவ் எண்ணெயில் ஏராளமான சத்துகள் அடங்கி இருப்பதை இன்றைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன 1400 வருடங்களுக்கு முன்பே அவைகளில் அதிக சத்துகள் இருப்பதாகவும் அவைகளை உங்களுக்காகவே (மனிதர்களின் நலன் கருதியே உருவாக்கியதாகவும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். இனிவரும் காலங்களில் இதன் ஆராய்ச்சியில் இன்னும் பல நன்மைகள் அடங்கி இருப்பதை கண்டு பிடித்து அறிவிக்கலாம்.



6:141. படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்..! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்..! வீண் விரையம் செய்யாதீர்கள்..! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.



16:11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/580283_10151104228153450_524034331_n.jpg

உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்துவதில் மட்டுமே பலர் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்துவதில் மட்டுமே பலர் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு.

சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர்.

மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.

நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும்.

நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை., செய்யக்கூடாதவை

1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.

2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.

3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.

5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.

ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

by
meena

"தமிழ் இலக்கிய கதை மாந்தர்கள்" பரதன்:

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips
"தமிழ் இலக்கிய கதை மாந்தர்கள்"

பரதன்:

பரதன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் கைகேயி. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இவர் தனது தாயார் தனக்காகப் பெற்றுத் தந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியணை ஏற மறுத்து, இராமனின் பாதணிகளை அரியனையில் வைத்து பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் ஆட்சியை வழி நடத்தினார்.

கோயில்:

கேரள மாநிலத்தில் உள்ள கூடல்மாணிக்கம் கோயிலே இந்தியாவில் பரதனுக்கு உள்ள ஒரே கோயிலாகும்.

பரதனின் பண்பு :

ஒருவனை ஊர் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதனால்அப்படியொன்றும் பெரிய பாதிப்பு வந்து விடாது. ஆனால் அவனுடைய குடும்பத்தினர், உற்றார் கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவனை விட துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் மிகவும் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்தான் பரதன். இராமாயண கதாபாத்திரங்களிலேயே மிக உயர்ந்த, ஆனால் இராமாயண கதாபாத்திரங்களினால் புரிந்து கொள்ளப் படாத கதாபாத்திரம் பரதனுடையது. பரதன் மிக உயர்ந்தவன் என்பதை நான் சொல்லவில்லை. கம்பரே சொல்கிறார்.

" ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?" என்று. அப்படியானால் அந்த காப்பியம் பரதாயாணம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எதனால் இராமாயாணம் ஆனது? தாயை, மூத்தவர்களை மதிக்கும் விசயத்தில் இராமன், மற்ற கதாபாத்திரங்களை விட உயர்ந்து நிற்கிறான். மின் விளக்குகளுக்கு ஒவ்வொரு அளவு கோல் உண்டு. 10 வாட் பல்பிலிருந்து 1000 வாட் வரைகூட உண்டு. இவை எல்லாவற்றுக்கும் மதிப்பு இரவிலும், இருண்ட இடங்களிலும்தான். காலையில் உதய சூரியன் உதித்து வந்து விட்டால் எந்தவொரு "வாட்" க்கும் மதிப்பு கிடையாது. சூரிய ஒளியில் எல்லா "வாட்"டும் மங்கித் தெரியும். இராமனுடைய மூத்தோர் சொல் மதிக்கும் பண்பின் முன்னால், பரதனுடைய, உயர்ந்த பண்புகள் அடிபட்டுப் போய் விடுகிறது.

பரதனுக்குத்தான் அரசுரிமை, ராமன் காடு செல்ல வேண்டும் என்று கைகேயி சொன்னபோது, "நான் ஏன் போக வேண்டும் என்றோ, அதை அப்பா சொல்லட்டும்" என்றோ இராமன் சொல்லவில்லை. மாற்றாந்தாயின் கட்டளையைக் கூட தந்தை சொன்னதாக ஏற்று மரவுரி தரித்து காடு சென்றான். இப்போது பரதன் விசயத்துக்கு வருவோம். பரதனை, பெற்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. தகப்பன் புரிந்து கொள்ளவில்லை. தமையன் புரிந்து கொள்ளவில்லை. மந்திரி புரிந்து கொள்ளவில்லை.

கைகேயி, தசரதனிடம் இரண்டு வரம் கேட்ட போது, அதாவது, இராமன் காடு செல்லவேண்டும், பரதன் அரசாள வேண்டும் என்று கேட்ட போது, இந்த விசயத்தில் பரதனுக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்பது கூட தெரியாத தசரதன், கைகேயியைப் பார்த்து, " நீ எனக்கு மனைவியும் அல்ல; உன் மகன் பரதன் எனக்கு மகனும் அல்ல என்கிறார் (நல்லா கவனிக்கணும் - நம்ம மகன் என்றோ அல்லது என் மகன் என்றோ கூட சொல்லாமல் "உன் மகன்" என்கிறார். இதிலிருந்தே தசரதனுக்கு பரதன் மீது எந்த அளவுக்கு வெறுப்பு உண்டானது என்பது புரிகிறது.)

இராமன் வனம் சென்ற சில நாளிலேயே தசரதன் இறந்து போக, அவரின் மறைவு பரதனுக்கு தெரிவிக்கப் படவில்லை. இவ்வளவுக்கும் பரதன், தனது மாமன் வீட்டுக்குத்தான் போயிருக்கிறான். (ஒரு பெண்ணின் கணவன் இறந்து போனால், அவளது தாய், தந்தை வழி உறவுகளுக்கு முதலில் சொல்லி அனுப்புவதுதான் நடைமுறை வழக்கம். அந்த வழக்கம் கூட பின்பற்றப் படவில்லை.)

தற்செயலாக அயோத்தி திரும்பும் பரதன், கொடிகள் தாழக் கிடப்பது, மக்கள் முகத்தில் சோகம் அப்பிக் கிடப்பது, மக்கள் அவன் மீது உமிழ்ந்த வெறுப்பான பார்வை , இவை எதற்கும் காரணம் விளங்காமல்தான் அரண்மனை வந்து சேருகிறான். வந்த பிறகுதான் தந்தை இறந்து போன விஷயம், இராமன் வனவாசம் சென்ற விஷயம் எல்லாம் தெரிய வருகிறது.

பரதனைக் கண்டதும், தலைமை பொறுப்பில் உள்ள மந்திரி கேட்கிறார் " முடி சூட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யலாமா?" என்று. ( மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்றொரு பழமொழி உண்டு. எல்லா விசயங்களையும் எடை போட்டுப் பார்த்து அலசி ஆராய்ந்து, தப்பு எந்த பக்கம், அதில் பரதனுக்கு பங்கு இருக்கிறதா, உடன்பாடு இருக்கிறதா என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருந்தாரென்றால் , பரதனைப் பார்த்ததும் அப்படியொரு கேள்வியைத் தூக்கிப் போட்டிருக்க மாட்டார்.)

எல்லாக் குழப்பத்துக்கும் தாய்தான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் பரதன், தகாத வார்த்தைகளால் தாயை கடிந்து கொள்கிறான். நீ எனக்கு வேண்டாம், அண்ணனைத் தேடி நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இராமனை போலவே மரவுரி தரித்து காடு செல்கிறான். ( தாயறியா சூல் உண்டா என்ற பழமொழி இங்கே பொய்த்துப் போய் விடுகிறது. ஒருவனுக்கு சேர வேண்டிய ஒன்றை தந்திரமாகப் பெற்று மகனுக்கு வாங்கித் தருகிறோமே. இதை மகன் விரும்புவானா என்பதுகூடத் தெரியாத தாயாகத்தான் கைகேயி இருந்திருக்கிறாள். ஆக, பரதனைப் பெற்ற தந்தை புரிந்து கொள்ளவில்லை. தாய் புரிந்து கொள்ளவில்லை. மந்திரி புரிந்து கொள்ளவில்லை.)

மரவுரி தரித்து வனம் செல்கிறான் பரதன். அவன் வருகிறான் என்ற செய்தி கேட்டதுமே, கொதித்தெழுகிறான் குகன். அவனது வீரர்களை அழைத்து "போருக்கு தயாராகுங்கள். இந்த பரதனை அடித்து விரட்டுவோம் என்றெல்லாம் சொல்ல, வேட்டுவ குல வீரர்களோ எதுவுமே பேசாமல் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்களை உற்சாக படுத்த பலவாறு வீர உரை ஆற்றுகிறான் குகன்.ஆனால் அவர்களோ போருக்கு தயாராக வில்லை (காரணம் கடைசியில் வருகிறது)

பரதன் வரும் சேதி ராம லட்சுமணர் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேருகிறது. கொதித்தெழுகிறான் லட்சுமணன் . அவனை உண்டு இல்லைன்னு பார்த்து விடுகிறேன் என்று லட்சுமணன் பொங்கி எழ ( பரதனைப் பெற்றவள், ராமனை காட்டுக்கு ஓட்டிவிட்டாலென்றால், மகன் இங்கு வந்து தொல்லை கொடுக்க வருகிறானோ என்கிற ஆத்திரம் லட்சுமணனுக்கு) அவனுடைய ஆத்திரத்துக்கு அணை போட்டு அடக்கி வைக்கிறான் ராமன்.

பரதனை பார்த்ததும், எதுவுமே பேசாமல் முகம் திருப்பி நிற்கிறாள் சீதை.

எந்த அண்ணனுக்காக தாயிடம் சண்டை போட்டுவிட்டு வந்தானோ, அந்த அண்ணன் கேட்கிறான் " தம்பி,அரியணை சுகமளிக்கிறதா?" என்று. அந்தவகையில் இராமன், பரதனைப் புரிந்து கொள்ளவில்லை.

அப்படிஎன்றால் பரதனை சரியாக புரிந்து கொண்டவர் யார்தான் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழத்தானே செய்கிறது. அதற்கான விடை.

பரதனை மிக சரியாக, பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவர்கள், குகனுடைய படை வீரர்கள்தான். ( பரதன் கூடவே இருந்து பழகியவர்களுக்கு தெரியாமல் போன ஒரு விசயத்தை, படிப்பறிவில்லாத காட்டுவாசிகள், ஒரே ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்டார்கள்.) அதாவது, பரதன் வருவது கண்டு கோபம் கொண்ட குகன் (படகோட்டி) பரதனை விரட்டி அனுப்ப, போருக்கு தயாராகும்படி சொல்லி வீரவுரை ஆற்ற, எந்தவொரு reaction ணும் இல்லாமல் படை வீர்கள் நிற்பதுகண்டு அதற்கான காரணம் கேட்கிறான் குகன். ஏனென்றால் தலைவன் எட்டடி பாய்ந்தால், இவர்கள் பதினாறு அடி பாயத் தயாராக நிற்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் இன்று அமைதியாக நிற்கக் கண்டு காரணம் கேட்கிறான் குகன். அவர்கள் சொல்கிறார்கள் : " வருகிறவனைப் பார்த்தால் சண்டைக்கு வருகிறவன் மாதிரி தெரியலையே. போருக்கான எந்த ஆயுதமும் இல்லை. இவனும் நமது தலைவன் இராமன் மாதிரி மரவுரி கட்டியல்லவா வந்திருக்கிறான். போருக்கு வருபவன் மரவுரி கட்டி சந்நியாசி மாதிரியா வருவான்?" என்று கேட்கிறார்கள். அப்போதுதான், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு அமைதி நிலைக்கு வரும் குகன், ஓடி சென்று, பரதனை, ராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறான். ஆக மொத்தத்தில், பரதனை மிகச் சரியாக புரிந்து கொண்டது, படிப்பறிவில்லாத பாமர, வனவாசிகள்தான். 

இன்று மனித உடல் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
இன்று மனித உடல் பற்றிய தகவல்.

ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஓயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை பெரும் வியப்பை உருவாக்குவதாக இருக்கிறது.

ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.

உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்னேகால் கிலோ.
மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின்
உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.

இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மயில் நீல ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது இதயம். ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகி றது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.

ஒருமனிதன் 25 வயதில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குருத்தெலும்புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது.

நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தி விட வேகமாக வளர்கிறார்கள்.

ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.

வளர்ச்சி அடைந்த ஆண் ஓய்வாகி இருக்கும் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்ச்சி செய்யும் போது இது 200 வரை உயரும் நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது.

மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும்.

ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்சி சுருங்கி விடும்.

உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் முதிகில் உள்ள குருத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த மூடியுடைவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீபெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

இப்படி எண்ணற்ற வேலைகளை ஓயாமல் உடல் செய்து கொண்டே இருக்கிறது.இந்த வேலைகள் நின்றுவிட்டால் வாழ்க்கை ஓட்டமும் நின்று விடுகிறது

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips
மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..!!!

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்:
-----------------------------------
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர் பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:31 PM | Best Blogger Tips
முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர் பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள் -----------------------------------------------------------------------------------------

இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய தமிழர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு இந்த மாதத்தின் நினைவாஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.

இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார் கோவை, கொடுமுடியில் 1908 அக்டோபர் 11 அன்று பாலாம்பாளின் புதல்வியாக சுந்தராம்பாள் பிறந்தார். கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மை குடும்பம். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண்வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ பாடலை அருமையாகப் பாடி ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது.

அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கே.பி.எஸ் பாடல் இசைத்தட்டுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை.

அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர்.

சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.
திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.
டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
“சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண் கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.
தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.
1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.


பக்கம் பார்த்துப் பேசு!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips
பக்கம் பார்த்துப் பேசு!

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!

• நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத காதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.

• பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம்
செல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம் தனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த
செய்தி களையோ நாம் பேசிக் கொண்டு வருவோம். நம் அருகே பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக

இருந்தாலும் தம் காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டு கேட்பார்.சிலநேரங்களில் நம்மோடு கலந்து நமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில் உணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக் கொண்டிருப்பதுபோலவே இருக்கும்.

• அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதில் சிலருக்கு இருக்கும் ஆர்வம் இன்று பலருக்கு அவர்களின் வாழ்வில் கூட இருப்பதில்லை.

• இன்றும் பார்க்கிறோம் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதில் நாமோ, நம்மைச்சுற்றி இருப்பவர்களோ எவ்வளவு ஆர்வம் கொள்கிறோம்..!

• பசி, தண்ணீர் தாகம்போல "ஒட்டுக் கேட்டல்“ என்னும் பண்பு சிலருக்கு கூடப்பிறந்த பழக்கமாகவே இருக்கிறது.

• சங்ககாலத்தில் இப்படி காதுகொடுத்துக் கேட்பதை அம்பல், என்றும் அலர் என்றும் பெயரிட்டு அழைத்தனர். அதனால் தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அது தானும் பேசாதே' என்று..

நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல் ஒன்று..

“அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்"

• அதனால் தமிழ் உறவுகளே.. நம்மைச்சுற்றி நிறைய காதுகள் இருக்கின்றன என்பதை அறிந்து பக்கம் பார்த்துப் பேசுவோம், இன்னொருவர் பேசுவதை அவர் அறியாது கேட்டல், அதை இன்னொருவரிடம் சொல்லுதல் அநாகரீகம் என்பதை உணர்வோம்.

மனிதர்கள் வெறும் காதுகளில் ஒட்டுக்கேட்ட காலம் கடந்து...

இன்று...

• தொலைபேசிகள், அலைபேசிகள், இணையங்கள் வழியே ஒட்டுக் கேட்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்
என்பதையும் நினைவில் கொள்வோம்.

- Guna Thamizh ..

இணையத்தில் சுலபமாக 'தமிழில்' தட்டச்சு செய்ய:

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips
இணையத்தில் சுலபமாக 'தமிழில்' தட்டச்சு செய்ய:

கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் கணினியில் நம்மால்
தட்டச்சு செய்ய முடிந்த ஒரே மொழி ‘ஆங்கிலம்’
மட்டுமே..

ஆனால், இன்றைய நவீன உலகில்
ஒரு கணினியை பயன்படுத்தி நம்மால் எதுவும் செய்ய
இயலும் (கணினி சம்பந்தமாக)..

அதே சமயத்தில் நம் தாய்மொழியான தமிழ் மொழியில்
தட்டச்சு செய்வதும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும்
சுலபமாகும்..

நிற்க..!

தாங்கள் நினைப்பதுபோல் எல்லோரும்
வழக்கமாகக் கூறுவதை நான் கூறப்போவதில்லை..

வழக்கமாகத் தமிழில் தட்டச்சு செய்திட நாம்
நாடுவது,,

1) தமிழ் எழுத்துரு (font) மென்பொருள் நிறுவப்பட்ட
ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட
விசைப்பலகை (Keyboard) யாகத்தான் இருக்கும்..
(எ-கா) Tamil99
அல்லது

2) ஏதேனும் ஒரு ஆங்கில
தட்டச்சை மொழி பெயர்த்து தரும் இணையதளமாக
இருக்கும்..
(எ-கா)
www.tamilcube.com

அல்லது

3) தமிழ் எழுத்துருக்களைத் தரும்
மென்பொருட்கள்
(எ-கா) அழகி


ஆனால் இப்போது கூறப்படும்
வழியானது மிகவும் சுலபமான ஒன்றாகும்..

அதாவது 'கூகுளைப்பற்றி' அறியாதோர் எவரும் இலர்
என்றே சொல்லலாம்..

அந்தளவுக்கு இது இணையப்பயனரிடையே வெகு
பிரபலமானதாகும்..

அவ்வாறான கூகுள் நிறுவனம் நிறைய
மென்பொருட்களை இணையப்பயனாளர்களுக்கு
வழங்கி வருகிறது..
அதில் ஒன்றுதான்
இங்கே குறிப்பிடப்படும் Google Input Tool For
Windows “இலவச தமிழ் தட்டச்சு கருவி”யாகும்..

இதனைத் தரவிறக்குமுன்,
இதிலுள்ள
நன்மைகளைப்பற்றி அறிந்து கொள்வோம்..


1) இதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில்
பதிந்துகொண்டால் போதுமானது..
பின் எப்போதும்
இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாது..

2) மேலும் இது கைப்பேசி-யில் குறுந்தகவல்
அனுப்பவது போல் நாம் ‘தங்லீஷ்’-ல் தட்டச்சு செய்தால்
தமிழில் தெரியும்..
(எ-கா) Amma = அம்மா

3) இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..
நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான
வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன்
தனிச்சிறப்பாகும்..

4) மேலும், இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும்
குறைவாகும்..

5) இதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும்
உபயோகிக்கலாம்.
(எ-கா) MS Word, Notepad etc.,
இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்..

http://www.google.com/inputtools/windows/index.html


பின் திரையில் தெரியும்
வழிமுறைகளை பின்பற்றவும்..

கணினியில் பதிந்தபின் இதனை உபயோகிக்க:

1) Taskbar-ன் ஏதேனும் ஒரு இடத்தில் 'க்ளிக்'
செய்து Toolbar-->Language bar
தேர்வு செய்யவும்..

2) பின்பு, ALT+SHIFT கீயை ஒரு சேர அழுத்தினால்
ஆங்கிலம் மற்றும் தமிழில்
மாறி மாறி தட்டச்சு செய்யலாம்..



இவ்வளவு நேரம் இதை மிகப்பொறுமையாக
படித்ததற்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்...


via நவமணிராஜா

எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips
எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்...

வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

மகாளய அமாவாசை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:04 PM | Best Blogger Tips
புரட்டாசி பௌர்ணமிக்குப்பின் பிரதமையிலிருந்து அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் புண்ணிய காலம்.

மகாளய பட்சத்தில் வரும் அமாவாசை தினம் சிரார்த்த காரியத்திற்கு மிகவும் உகந்த நாள்!

மகாளய பட்சத்தில் வரும்

பரணிக்கு மகாபரணி என்று பெயர்
திரயோதசி திதிக்கு கஜசாயை என்றும்.
அஷ்டமி திதிக்கு மத்தியாஷ்டமி என்றும் பெயர்.

இந்த மூன்று புண்ணிய காலங்களில் செய்யும் சிரார்த்த காரியங்கள் கயையில் செய்யும் சிரார்த்தத்திற்கு இணையானது.

மேலும் அமாவாசை துதீய பாதம், பரணி துவாதசி, அஷ்டமி ஆகிய நாட்களில் திதி, நட்சத்திரம், வாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங் களைக் கவனிக்கத் தேவையில்லை.

காருணிகர்கள் எனப்படுகின்ற
பெற்றோர்
சிறிய தகப்பனார்,
பெரிய தகப்பனார்,
தமையனார்,
தம்பி,
அத்தை,
அம்மான்,
பெரிய தாயார்,
சிறிய தாயாரின்
சகோதரர்கள்,
அவர்களின் பிள்ளைகள்,
மனைவி,
மாமனார்,
அக்காள் கணவன்,
மருமகள்,
மைத்துனர்,
குரு,
எஜமான்,
நண்பர் மற்றும் நமக்குப் பிரியமான சகல ஜீவராசிகளுக்கும் மகாளய பட்சத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

மேலும் முறையாக குருவிடம் தீட்சை பெறாமல் சுயமாக சந்நியாசம் பெற்றுக் கொண்டு காலமானவர்களுக்கு துவாதசியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்;

காலம் வராமல் காலனைச் சென்றடைந்த வர்களுக்கு (துர்மரணம் அடைந்தவர்களுக்கு) சதுர்த்தசி திதியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்;

மேலும் இந்த சிரார்த்த காரியம் செய்யும் பொழுது விஸ்வேஸ்வரனையும் விஷ்ணு வையும் காலபைரவரையும் ஆராதனை செய்தல் மிகவும் உத்தமம்.

மேலும் காலபைரவரின் அஷ்டோத்திரம் கூறுவதால் சகல நன்மைகளும் அடைந்து நல்வாழ்வு கிட்டும்.

வஸ்திரம்,
அன்னம்,
உத்திராட்சம்,
துளசி மாலை,
பஞ்ச பாத்திரம்,
உத்திரணி,
கிண்டி,
பசு,
பூமி,
குடை,
பாதரட்சை போன்றவற்றை தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

இவற்றைச் செய்ய இயலாதவர்கள் வில்வத்தை கையில் ஏந்தி தியானம் செய்து ஆற்றில் விடுவதும் உத்தமாகும்.

உத்திரவாகினியாக ஓடும் நதிகளில் சிரார்த்தம் செய்வது சிறப்பானது.

மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கம மாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடும். அதுவே உத்திரவாகினியாகும்.

கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத் தையொட்டி, காவிரி நதி உத்திரவாகினியாக ஓடுகிறது.

காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்தார். ஆகவே இந்த ஸ்தலம் கஜேந்திர மோட்ச ஸ்தலம் எனப்படுகிறது. இங்கே தர்ப்பணம் செய்வதும் சிறப்பானது.

பாட்டி தாத்தா சொன்ன கதைகள்: லட்சுமி கடாட்சம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்:

லட்சுமி கடாட்சம்!

முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன.

ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, “அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றார்.

“நான் தான் மகாலட்சுமி; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். பிரம்மன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,'' என்றாள்.

மகாலட்சுமி போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.

“அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,'' என்றார்.

லட்சுமியும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது லட்சுமியின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.

வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை துõக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “அடி! உதை அவனை பிடி!'' என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர்.

உடனே அரசன், “முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,'' என்றான்.

கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; லட்சுமிதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.

அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு லட்சுமி கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.

இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் லட்சுமி இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் துõங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் துõக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது.

“முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!'' என்றான்.

இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர்.

ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர்.

மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார்.

அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை துõக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.

மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது துõக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது.

கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது லட்சுமி, “நான் தங்கøள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.

கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், “இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,'' என்று கோபப்பட்டான்.

முனிவரோ, “மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துõக்கிப் பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். லட்சுமி கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,'' என்றார்.

மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.

நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், “எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். லட்சுமி என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,'' என்றார்.

மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு லட்சுமி போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.

ஊரெல்லாம் ஊர்கள்...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 PM | Best Blogger Tips
ஊரெல்லாம் ஊர்கள்...!!!
இப்ப எல்லோரும் தெரிஞ்சுங்க!

‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருப்பது போல் ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருக்கு. (இதைப் பற்றி எழுதினால்
‘சிக்கல்’ வந்துடுமோன்னு தான் எழுதல ( ஹி..ஹி..!! )

இந்த ஊர்களை சுற்றி இருக்கும் ஊர் பெயர்களை கவனியுங்கள்.
"மஞ்சக்கொல்லை", "கூத்தூர்", "வேட்டைக்காரன் இருப்பு"
"தலைஞாயிறு" பெயர்கள் எப்படி?? (அவைகள் எல்லாமே நாகை மாவட்டத்தில் வருகிறது) "வாழ்க்கை", "வாழ வந்தான்" இப்படி
பெயர் கொண்ட ஊர்களும் ..!! (இவைகள் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்றன)

அது போலவே -

'ஏர்வாடி' என்ற ஊர் பெயர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒன்னு இருக்கு, ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு. (அந்த 'ஏர்வாடி’யில் என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். இந்த ‘ஏர்வாடி’யில் என்ன விசேஷம் என்று எனக்கு தெரியலைங்க!)

‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒரு 'குற்றாலம்' போல், ‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'குத்தாலம்' இருக்கு. இந்த ‘குத்தாலத்தில்’ “அந்த” குற்றாலம் மாதிரி எந்த விசேஷமும் கிடையாது.

"பாளையம்கோட்டை" என்ற ஊர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் மட்டுமில்லை, ‘கடலூர்’ மாவட்டத்திலும் ஒன்னு இருக்கு.
(அதில் ஃபேமஸ் ஜெயில், இதில் என்னவென்று தெரியல!)

"தமிழ் நாட்டில்" ஒரு 'வேலூர்' இருப்பது போல், (கேரளா)
'கோட்டயத்திலும்' ஒரு 'வேலூர்' இருக்கு. (இங்கே ஜெயில்
ஃபேமஸ் போல, அங்கே என்னவென்று தெரியல!)

"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவள்ளூர்' மாவட்டத்திலும் ஒன்றும் இருக்கு .

"வடகரை" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவாரூர்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும், ‘திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா)
“பாலக்காட்டில்” ‘வடகரா’ என்ற பெயரிலும் இருக்கு!!

"சாத்தனூர்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) ‘கொல்லம்’ (Quilon) மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"திருபுவனம்" என்ற ஊர் பெயர் (பட்டுப் புடவைக்கு ஃபேமஸ்)
‘தஞ்சை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும் இருக்கு.

"திருமுல்லை வாசல்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் இருப்பது போல் ‘சென்னையில்’ "திருமுல்லை வாயில்" என்று ஒரு ஊர் இருக்கு !!

“திருப்பத்தூர்” என்ற ஊர் ‘சிவகங்கை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘வேலூர்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"முதுகுளத்தூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு.

"வளையப்பட்டி" என்ற ஊர் ‘நாமக்கல்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"ஆலங்குடி" என்ற ஊர் 'திருவாரூர்' மாவட்டத்தில்
ஒன்றும், ‘புதுக்கோட்டை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

‘அரியலூர்’ முன்பு ‘பெரம்பலூர்’ மாவட்டத்தில் இணைந்திருந்தது. தற்பொழுது ‘அரியலூர்’ தனி மாவட்டமானாலும், ‘அரியலூர்’ என்ற ஊர் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு!

"அத்தானி" என்ற ஊர் 'ஈரோடு' மாவட்டத்தில் ஒன்றும்,
'புதுக்கோட்டை' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'திருச்சூர்'
மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'எர்ணாகுளம் ' மாவட்டத்தில்
ஒன்றும், (கர்நாடகா) 'பெல்காம்' மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

'கொத்தமங்கலம்' என்ற ஊர் 'புதுக்கோட்டை' மாவட்டத்தில் இருப்பது போல், (கேரளா) 'எர்ணாகுளம்' மாவட்டத்தில் "கோதமங்கலம்" என்ற ஊர் இருக்கு! ஆங்கிலத்தில் இரண்டு ஊருக்குமே (KOTHAMANGALAM) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.

'புதுக்கோட்டை' மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள
ஊரின் பெயரை கேட்டால் சிரிப்பு வரும். "கொக்கு முட்டை"
அதேபோல அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் மற்றொரு
ஊரின் பெயர் "ஆளப்பிறந்தான்".

(கேரளா) 'எர்ணாகுளத்தில்' 'மட்டன்சேரி' என்ற ஒரு ஊர் இருக்கு. அது எந்த வகை 'மட்டன்' என்று நமக்கு தெரியாதுங்க!

‘கேரளாவில்’ "இடுக்கி" என்று ஒரு மாவட்டமிருக்கு. (இதில் யார் யாரை தூக்கி இடுப்பில் “இடுக்கி”க் கொள்வார்கள் என்று நமக்கு தெரியாதுங்க!!)

(கேரளா) ‘கொல்லத்தில்’ "புனலூர்" என்ற ஊர் இருக்கு. (இது நாம யூஸ் பண்ணும் 'புனல்' அல்ல!!)

(கேரளா) கோட்டயத்தில் "நாலு கோடி" என்று ஒரு ஊர் இருக்கு!!

'திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் 'படுக்க பத்து!'

(கேரளா) "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் "தடியூர்" (இங்கே யாரும் மெல்லிசாக இருக்க மாட்டாங்களோ?)

"கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்", "எப்போதும் வென்றான்" இவைகள் எல்லாமே ஊர்கள் பேர் தாங்க!!

'சென்னையில்' "சாலி கிராமம்" இருப்பது போல், 'சிவகங்கை' மாவட்டத்தில் "சாலை கிராமம்" என்ற ஊர் இருக்கு!

இப்படி இரண்டு, மூன்று, நான்கு மாவட்டங்களில் ஒரே ஊர்களின்
பெயர்கள் இருப்பது போல்......

இன்னுமிருக்கு .....!!



நன்றி : "ஆஹா பக்கங்கள்"


புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:44 PM | Best Blogger Tips

புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்...புதன் பெருமாளை குறிக்கும் கிரகம் ஆகும்...சுக்கிரனுக்கு மகாலட்சுமி என்பதை போல...கன்னி ராசி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி என்பதால் ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம்...

...
மேலும் உடல் வெப்ப நிலையும் அதிகரிக்கும்..பித்தம் போன்றவையும் அதிகரிக்கும்...இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும்...

பரவாயில்லைங்க.. நான் ஜீரணத்துக்கு ரசம் சாப்பிட்டுகிறேன்னாலும் ஒண்ணும் வேலைக்காகாது..அந்தளவு தொந்தரவு செய்யும் காலம் இது...அஜீரணம் இருப்பின் கோபம் அதிகரிக்கும்,காமம் அதிகரிக்கும்,சோம்பல்,மறதி,சலிப்பு அதிகரிக்கும் எந்த வேலையும் உருப்படியா முடியாது...பித்தம் அதிகரித்து வாதம் உண்டாக்கலாம்..மயக்கம் உண்டாக்கலாம் இதனால் துளசி தீர்த்தம் பெருமாள் கோயிலில் அடிக்கடி பருகுவதால் பித்தம் தீரும்..

சும்மாவே மட்டன் பிரையாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டா 2 நாளைக்கு மதமதன்னு இருக்கும்..வயித்துக்குள்ள கல்லை கட்டி போட்டாப்புல இருக்கும்..அதுவும் இய்றகையாகவே வயிறு பாதிப்புகளை தரும் மாதம்னா எச்சரிக்கையாத்தானே இருக்கணும்..அதுக்குத்தான் நம் முன்னோர்கள்..மலை ஏறு....பெருமாளை கும்பிடு...துளசி தீர்த்தம் குடி ந்னு சொல்லி வைச்சாங்க..கூட பெருமாள் அருளும் மிக பிரமதமா நமக்கு கிடைக்கும்...
See More

ஆயக்கலைகள் 64 பற்றி தெரிந்து கொள்ளுவோம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips
ஆயக்கலைகள் 64 பற்றி தெரிந்து கொள்ளுவோம் !!!


நம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைகள் 64 என்று சொல்கிறார்கள் அது என்ன வென்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது . அப்படியே யாரிடமாவது கேட்டால் அதற்க்கு சிலர் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவார்கள் . கீழே குறிப்பிட்டு உள்ளது தான் இந்த ஆயக்கலைகள் 64

1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு (காவியம்);
18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21. பாட்டு (கீதம்);
22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39. காமம் (காம சாஸ்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51. உடற் (தேகப்) பயிற்சி;
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலு
இதில் உங்களுக்கு எத்தனை தெரியும்