இணையத்தில் சுலபமாக 'தமிழில்' தட்டச்சு செய்ய:

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips
இணையத்தில் சுலபமாக 'தமிழில்' தட்டச்சு செய்ய:

கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் கணினியில் நம்மால்
தட்டச்சு செய்ய முடிந்த ஒரே மொழி ‘ஆங்கிலம்’
மட்டுமே..

ஆனால், இன்றைய நவீன உலகில்
ஒரு கணினியை பயன்படுத்தி நம்மால் எதுவும் செய்ய
இயலும் (கணினி சம்பந்தமாக)..

அதே சமயத்தில் நம் தாய்மொழியான தமிழ் மொழியில்
தட்டச்சு செய்வதும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும்
சுலபமாகும்..

நிற்க..!

தாங்கள் நினைப்பதுபோல் எல்லோரும்
வழக்கமாகக் கூறுவதை நான் கூறப்போவதில்லை..

வழக்கமாகத் தமிழில் தட்டச்சு செய்திட நாம்
நாடுவது,,

1) தமிழ் எழுத்துரு (font) மென்பொருள் நிறுவப்பட்ட
ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட
விசைப்பலகை (Keyboard) யாகத்தான் இருக்கும்..
(எ-கா) Tamil99
அல்லது

2) ஏதேனும் ஒரு ஆங்கில
தட்டச்சை மொழி பெயர்த்து தரும் இணையதளமாக
இருக்கும்..
(எ-கா)
www.tamilcube.com

அல்லது

3) தமிழ் எழுத்துருக்களைத் தரும்
மென்பொருட்கள்
(எ-கா) அழகி


ஆனால் இப்போது கூறப்படும்
வழியானது மிகவும் சுலபமான ஒன்றாகும்..

அதாவது 'கூகுளைப்பற்றி' அறியாதோர் எவரும் இலர்
என்றே சொல்லலாம்..

அந்தளவுக்கு இது இணையப்பயனரிடையே வெகு
பிரபலமானதாகும்..

அவ்வாறான கூகுள் நிறுவனம் நிறைய
மென்பொருட்களை இணையப்பயனாளர்களுக்கு
வழங்கி வருகிறது..
அதில் ஒன்றுதான்
இங்கே குறிப்பிடப்படும் Google Input Tool For
Windows “இலவச தமிழ் தட்டச்சு கருவி”யாகும்..

இதனைத் தரவிறக்குமுன்,
இதிலுள்ள
நன்மைகளைப்பற்றி அறிந்து கொள்வோம்..


1) இதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில்
பதிந்துகொண்டால் போதுமானது..
பின் எப்போதும்
இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாது..

2) மேலும் இது கைப்பேசி-யில் குறுந்தகவல்
அனுப்பவது போல் நாம் ‘தங்லீஷ்’-ல் தட்டச்சு செய்தால்
தமிழில் தெரியும்..
(எ-கா) Amma = அம்மா

3) இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..
நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான
வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன்
தனிச்சிறப்பாகும்..

4) மேலும், இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும்
குறைவாகும்..

5) இதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும்
உபயோகிக்கலாம்.
(எ-கா) MS Word, Notepad etc.,
இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்..

http://www.google.com/inputtools/windows/index.html


பின் திரையில் தெரியும்
வழிமுறைகளை பின்பற்றவும்..

கணினியில் பதிந்தபின் இதனை உபயோகிக்க:

1) Taskbar-ன் ஏதேனும் ஒரு இடத்தில் 'க்ளிக்'
செய்து Toolbar-->Language bar
தேர்வு செய்யவும்..

2) பின்பு, ALT+SHIFT கீயை ஒரு சேர அழுத்தினால்
ஆங்கிலம் மற்றும் தமிழில்
மாறி மாறி தட்டச்சு செய்யலாம்..



இவ்வளவு நேரம் இதை மிகப்பொறுமையாக
படித்ததற்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்...


via நவமணிராஜா