தன் வினை தன்னை சுடும்

மணக்கால் அய்யம்பேட்டை | 7:11 PM | Best Blogger Tips


தன் வினை தன்னை சுடும்

(இந்த உலகில் நடந்த ஒரு சம்பவம்)

விதை ஒன்றை போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் 

💥“ 10 ரூபாய்க்கு 13 லட்சம் ”💥


ஒரு கடைக்காரர் தனது கடையைத் திறந்தபோது ஒரு பெண் வந்து, “ஐயா, இதோ உங்கள் 10 ரூபாய்” என்றார். 🙏

கடைக்காரர் அந்த ஏழைப் பெண்ணை கேள்விக் கண்களுடன், “நான் உங்களுக்கு எப்போது 10 ரூபாய் கொடுத்தேன்?” என்று கேட்பது போல் பார்த்தார். 😳

அந்தப் பெண், “நேற்று மாலை நான் சில பொருட்களை வாங்கினேன். நான் உங்களுக்கு ₹100 கொடுத்தேன், ₹70 மதிப்புள்ள பொருட்களை வாங்கினேன், நீங்கள் ₹30க்கு பதிலாக ₹40 திருப்பித் தந்தீர்கள்” என்று பதிலளித்தார். 😳
தன் வினை தன்னைச் சுடும் 🤨
கடைக்காரர் 10 ரூபாயை அவரது நெற்றியில் தொட்டு, பணப் பெட்டியில் வைத்து, “ஒரு விஷயம் சொல்லுங்கள் சகோதரி. பொருட்களை வாங்கும்போது நீங்கள் நிறைய பேரம் பேசினீர்கள், ₹5க்கு கூட. ஆனால் , இப்போது ₹10 திருப்பித் தர வந்திருக்கிறீர்களா?” 🤔

அந்தப் பெண்,
"பேரம் பேசுவது என் உரிமை. ஆனால் விலை நிர்ணயிக்கப்பட்டவுடன், குறைவாகக் கொடுப்பது பாவம்" என்று பதிலளித்தார். 😳

கடைக்காரர், "ஆனால் நீங்கள் குறைவாகக் கொடுக்கவில்லை. நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தினீர்கள். இந்த ₹10 என் தவறுதலாக உங்களிடம் வந்தது. நீங்கள் அதை வைத்திருந்தால், அது
எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது."

அந்தப் பெண், "உங்களுக்கு அது முக்கியமில்லை, ஆனால் அது
என் மனசாட்சியை எடைபோடும். நான் தெரிந்தே உங்கள் பணத்தை வைத்திருந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நேற்று இரவு அதைத் திருப்பித் தர வந்தேன், ஆனால் உங்கள் கடை மூடப்பட்டிருந்தது." 😳

கடைக்காரர் ஆச்சரியத்துடன், "நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டார், அவள், "செக்டார் 8" என்று பதிலளித்தாள். 😳
வாழ்க்கை தத்துவங்கள் ..*** | Facebook
கடைக்காரரின் வாய் திறந்தது. "நீங்கள் ₹10 திருப்பித் தர 7 கிலோமீட்டர் தூரம் வந்தீர்கள், இது உங்கள் இரண்டாவது வருகை?" 😳

அந்தப் பெண் அமைதியாக, "ஆமாம், இது என்னுடைய இரண்டாவது வருகை*.
உனக்கு மன அமைதி வேண்டுமென்றால், *நீ இதுபோன்ற செயல்களைச் செய்ய வேண்டும். என் கணவர் இப்போது இந்த உலகில் இல்லை, ஆனால் அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தார்: 'வேறொருவருக்குச் சொந்தமான , ஒரு பைசாவைக் கூட ஒருபோதும் எடுக்காதே.' 🤫

ஏனென்றால் ஒருவர்
அமைதியாக இருக்கலாம், ஆனால்* மேலே உள்ளவர்* ஒருவர் எந்த நேரத்திலும் கணக்கு கேட்கலாம். அந்தக் கணக்கிற்கான தண்டனை என் குழந்தைகள் மீது விழக்கூடும்." 😳

இதைச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறினார்.

கடைக்காரர் உடனடியாக பணப் பெட்டியிலிருந்து ₹300 எடுத்து, தனது ஸ்கூட்டரில் ஏறி, தனது உதவியாளரிடம், "கடையைப் பார்த்துக்கொள். நான் விரைவில் திரும்பி வருவேன்" என்று கூறினார்.

அவர் சந்தையில் உள்ள மற்றொரு கடைக்குச் சென்று பிரகாஷ் என்ற கடைக்காரரிடம் ₹300 கொடுத்தார். "இதோ, உங்கள் ₹300 ஐ எடுத்துக் கொள்ளுங்கள். நேற்று, நீங்கள்
பொருட்கள் வாங்க வந்தபோது, நான் உங்களிடம் அதிக கட்டணம் வசூலித்தேன்." 😳

பிரகாஷ் சிரித்துக் கொண்டே, "நீங்க அதிகமா பணம் கட்டியிருந்தீங்கன்னா, நான் திரும்பி வந்தப்போ அதை திருப்பிக் கொடுத்திருக்கலாம். ஏன் இவ்வளவு காலையில வந்தீங்க?" என்றான்.

கடைக்காரர், "
நீங்க திரும்பி வருவதற்கு முன்னாடி நான் இறந்துட்டேன்னா என்ன? நான் உங்களுக்கு ₹300 கடன்பட்டிருக்கேன்னு கூட உங்களுக்குத் தெரியாது. அதனால்தான் நான் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாயிற்று. மேலே இருக்கிறவர் எப்போது கணக்கு கேட்பார்னு யாருக்குத் தெரியும்? தண்டனை என் குழந்தைகள் மேல வரலாம்." 😳

கடைக்காரர் போய்விட்டார், ஆனால் பிரகாஷ் மிகவும் வருத்தப்பட்டார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, அவர் ஒரு நண்பரிடம் ₹3 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் மறுநாளே, நண்பர் இறந்துவிட்டார். 😳

நண்பனின் குடும்பத்திற்குப் பணம் பற்றித் தெரியாது, அதனால் யாரும் அதைக் கேட்கவில்லை.
பேராசையால் தூண்டப்பட்ட பிரகாஷ், அதைத் திருப்பிக் கொடுக்க ஒருபோதும் முன்முயற்சி எடுக்கவில்லை.

இன்று, அந்த நண்பரின் குடும்பம் வறுமையில் வாடியது. அவரது
விதவை தனது குழந்தைகளை வளர்க்க ஒரு வேலைக்காரியாக வேலை செய்தார். ஆனாலும் பிரகாஷ் தங்கள் பணத்தை வைத்திருந்தார். 😳

கடைக்காரரின்
வார்த்தைகள்—"மேலே இருப்பவர் எப்போது கணக்கு கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? என் குழந்தைகள் மீது தண்டனை வரக்கூடும்"—பிரகாஷை வேட்டையாடின. 😳

இரண்டு அல்லது மூன்று நாட்கள்
மனக் கொந்தளிப்புக்குப் பிறகு, அவரது மனசாட்சி விழித்துக் கொண்டது. அவர் வங்கியிலிருந்து ₹13 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.

விதவை வீட்டில், தனது குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். பிரகாஷ் அவள் காலில் விழுந்தார். ஒவ்வொரு ரூபாய்க்கும் போராடும் ஒரு பெண்ணுக்கு, ₹13 லட்சங்கள் ஒரு பெரிய தொகை. அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
பிரகாஷின் நேர்மைக்காக அவள் ஆசிர்வதித்தாள். 🙏

 கடைக்காரரிடம் ₹10 திருப்பித் தர இரண்டு முறை சென்ற அதே பெண் அவள்தான். 


கடின *உழைப்பாலும் நேர்மையாலும் வாழ்பவர்கள் கடவுளால் சோதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர் ஒரு நாள் கேட்கிறார் ;

.
மேலே *இருப்பவர் மீது நம்பிக்கை வைத்திருங்கள்..

படித்ததில் பிடித்தது.

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

சில ஆண்களின் கண்களை உற்று❤️💕💜💖💖❤️💜💖💕

மணக்கால் அய்யம்பேட்டை | 10:01 AM | Best Blogger Tips

 

சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்.. 

எல்லோரும்
புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கலை ன்னு சொல்லும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை,

அம்மாவை தரக்குறைவாக பேசும்
மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி துயருறும் கணவர்களின் கண்களை,
413,300+ Male Eyes Stock Photos, Pictures & Royalty-Free Images ...
துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு

நானென்ன செய்தேன் என்று அழுது கெஞ்சிக்கொண்டிருக்கிற காதலனின் கண்களை,

கடன்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்கிற மகனின் தாழ்வான குரலுக்கு பதில் தரமுடியாமல் கூனி குறுகும் குடும்ப தலைவனின் கண்களை,

தன்னை விட
சிறியவனின் திருமணத்தில் உனக்கு அடுத்தது எப்போ? என்ற கேள்வியை எதிர்க்கொள்ளும் முதிர்கண்ணனின் கண்களை,

வரிசையில் நிற்கும்போது தன்னை முந்திச்செல்லும் வலியவனிடம்
எதிர்த்து பேச திராணியில்லாமல் விட்டுக் கொடுக்கும் அப்பாவியின் கண்களை,

சரியாக உண்ணும் போது இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலை கிடைக்காமல் இப்படியே இருப்பாய் என்ற தந்தையின்
நக்கலுக்காக பாதியில் எழுந்துச்செல்லும் வேலையில்லா பட்டதாரியின் கண்களை,
விவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3: அஜித்-காஜல் நடித்த படம் ரூ-100 கோடியை  நெருங்குகிறது - IBTimes India
உச்சி வெயிலில் மேல் சட்டை இல்லாமல் சாலை வேலை செய்யும் ஒருவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உட்கார்ந்த வேளையில் மேலாளரின் அதட்டல் சத்தம் கேட்டு எழுந்து போகின்ற சாமனியனின் கண்களை,
கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை ...
இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி ஓட்டமுடியும் என்று நினைத்து தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை,

எப்போதும் உற்று நோக்காதீர்கள்,

அப்படி பார்த்தீர்களானால்


 கரைந்து போவீர்கள்...


-பகிர்வு பதிவு.

#ஆண்

எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:18 PM | Best Blogger Tips
 எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்! திருச்சி திருவெறும்பூர்  எறும்பீஸ்வரர் கோயிலின் ஆச்சரியம் | Do you know about the Erumbeeswarar  temple Specialities and ...

எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்! திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலின் ஆச்சரியம்
 
சென்னை: எறும்புக்கு வழிவிட்ட சிவபெருமான் உள்ள கோயில் பற்றி தெரியுமா? திருச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதன் பின்னணியில் சொல்லப்படும் புராண காரணங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
 
தாருகாசூரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்திருக்கிறான்.. நாளுக்கு நாள் அவனது அட்டகாசத்தை தேவர்களாலும் இந்திரனாலும் பொறுத்து கொள்ள முடியவில்லை.. அந்த அரக்கனை எதிர்த்து போரிடவும் முடியவில்லை.
 
எறும்பீஸ்வரர் கோயில்
இறுதியில் தாருகன் அவர்களை தோற்கடித்து தேவலோகத்தையே கைப்பற்றி விட்டான்.. இதனால் பயந்துபோன தேவர்கள், பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்திலுள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்கு சென்று இறைவனைப் பூஜிக்கும்படி கட்டளையிட்டார்.
 எறும்பீஸ்வரர் -எறும்புகளுக்கு வழிவிட்ட சிவபெருமான் ..
இதே உருவத்துடன் சென்றால் தாருகன் ஏதாவது செய்துவிடக்கூடும் என்று அச்சமுற்று, எறும்பு உருவம் கொண்டு, திருவெறும்பூருக்கு சென்று, இறைவனை கண்டு தங்கள் குறைகளை சொன்னார்கள்.. உடனே சிவபெருமான், உமா தேவியுடன் காட்சி தந்து, தேவர்களை அங்கேயே சில காலம் தங்கியிருக்கும்படி கூறினார்.. தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களுடன் வந்திருந்து, தினசரி ஆயிரம் கரு நெய்தல் மலர்களால் இறைவனை பூசித்து வந்தான்.
 கற்பக விருட்சம்: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்!

தேவர்கள் - சிவலிங்கம்
 
தேவர்களும் இந்திரனும் எறும்பு வடிவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். அப்போது சிவபெருமான் லேசாக தலை சாய்த்து சரிந்து வழி கொடுத்தாராம்.. அதாவது சிவபெருமான் தன்னை புற்று வடிவில் மாற்றிக்கொண்டாராம்.. இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 
 

இன்று பௌர்ணமி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும்.

 பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயமே! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். சில விஷயங்கள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. 

ஆன்மீகமோ? அறிவியலோ? இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
   
சதுர்த்தசி, பௌர்ணமி திதியில் ...
பௌர்ணமியில் விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.
May be an image of 2 people, monument and temple
பௌர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
பன்னிரு தமிழ் மாத பௌர்ணமி ...
பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள் ளனர்.

இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. 
பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள் ளனர்.
மாசி மாத பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும்  பலன்கள்... | Pournami Viratham Benefits
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.


May be an image of 8 people, temple and monument
பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும். வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.

பவுர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

திருவண்ணாமலை 
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். 

கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண் டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறிய வர்கள் அனைவரும் மன அமைதி பெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. 

தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது.

 அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட் டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது. 

இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக் காக பல நன்மைகளால் அருள் புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங் களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார் கள்.

நன்றி
 





May be an image of 3 people, temple and text

இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்.✍🏼🌹