1979 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதி அத்திவரதர்..

மஹாவாக்கியங்கள்.

அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
1-பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
2-அயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
3-தத் த்வம் அஸி(तत् त्वं असि) - "அது(பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது 'நீ அதுவாக இருக்கின்றாய்' என்றும் சொல்லலாம். இம்மகாவாக்கியத்திலுள்ள சொற்களின் பொருள் இவ்வளவு எளிதாக இருப்பினும், வாக்கியத்தின் உட்கருத்தைப்பற்றி வெவ்வேறு வேதாந்தப்பிரிவினரின் கொள்கைகள் கணிசமாக மாறுபடுகின்றன.
4-அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் (Aham Brahmasmi)(சமஸ்கிருதம்:अयम् आत्मा ब्रह्म) எனில் `நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள் (பிரகதாரண்யக உபநிடதம் (1.4.10).

ஒருத்தர் கை நீட்டி யாசிக்கிறார்.
பத்து ரூபாய் கேட்கும் அவருக்கு மற்றொருத்தர் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். "ஆஹா! என்ன உதார ஹ்ருதயம்"னு கொடுத்தவரை நாம் கொண்டா-டுகிறோம்.
இதை பகவான் கீதையிலே அப்படியே மாத்திட்டார்! "என்கிட்டே கையை நீட்டிக் கேட்கி-றீங்களே... என்ன உதார ஹ்ருதயம் உங்களுக்கு..." என்று கேட்பவரைச் சிலாகிக்கிறார்!
அவனிடத்திலே சென்று, அவன்தான் சர்வம் என்று உணர்ந்து, அவனைப் பார்த்துக் கை நீட்டுகிறவர்களை உயர்த்திச் சொல்கிறான் பகவான்.
"இவர்கள் கேட்காவிட்டால் நான் யாருக்குக் கொடுப்பேன்?" என்கிறான்!
வேறொருவர் கை நீட்டினாலொழிய கொடுப்ப-வருக்குப் பெருமை உண்டோ!
அப்படிக் கை நீட்டுகிறவர்களை "உதாரா:" என்று கொண்டா-டுகிறான் பகவான்.
அவனையே பற்றுதல் என்கிற அறிவை நமக்குத் தருகிறான்.
அந்த அறிவை உண்டாக்கும் தன்மையுடையவன் யார் என்று கேட்டால்... விச்வ சப்தத்தினால் அறியப் படுகிறவன்; சர்வத்திலும் இருப்பவன்; நமக்குச் சுலபமாய்க் கிடைக்கக் கூடியவன் - "பரமாத்மா".
"அவன் ரொம்பப் பெரியவன்; அவன் கிட்டவே போக முடியாதுன்னு சொல்லி விட்டால், இந்த உபதேசம் எதற்கு... உபந்யாஸம் எதற்கு... எல்லாத்தையும் நிறுத்துங்கோ!" என்றுதான் சொல்லத் தோன்றும்.ஆனால், எவ்வளவுதான் உயர்ந்தவனானாலும் அவன் திருவடியை அணுகிவிட்டால் நம்மிடத்-திலே அன்பு கொண்டு ஓடி வருகிறான்.
"அகலில் அகலும் அணுகில் அணுகும்" என்கிறார் நம்மாழ்வார்.
ஒரு கப்பல் நிறைய அரிசி மூட்டை அடுக்கியிருக்கு. அதைச் சாப்பிட வருகிறது ஒரு காகம்.
சாப்பிட்டுக் கொண்டேயிருக்கையில் கப்பல் புறப்பட்டு நடுக்கடலுக்குப் போய்விடுகிறது.
அதை உணர்ந்த காகம் கரைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணி கிழக்குத் திக்காகப் பறக்கிறது.
நெடுந்தூரம் பறந்தும் கரை தென்படவில்லை.
இனிமேல் பறக்க சக்தியில்லை என்று கப்பலுக்கே திரும்பி விடுகிறது காகம்.
சற்றைக்கெல்லாம் திரும்பவும் பறக்கிறது - மேற்குத் திக்கு நோக்கி... மீண்டும் திரும்புகிறது.
இப்படியேநாலா திக்கிலும் பறந்து ஓடி, சோர்ந்து கப்பலுக்கே திரும்பிடறது!
நாம் அந்தக் காகம் மாதிரி. பரமாத்மா அந்தக் கப்பல் மாதிரி.
"நீ எங்கதான் போவே... எங்க போனாலும் இங்க தானே வரணும்..." என்று நாம் போவதைப் பார்த்துக் கொண்டு வாய் மூடி இருக்கிறான்!
ராமாயணத்திலே விபீஷண சரணாகதியை வர்ணிக்கும்போது, "விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்" என்று சொல்லப்படவில்லை. "ராமனிருக்கும் இடம் வந்தான்" என்றுதான் சொல்லி இருக்கிறது!
இதற்கு என்ன அர்த்தம்...? "வர வேண்டிய இடத்துக்கு அவன் வந்து சேர்ந்து விட்டான்" என்று அர்த்தம்.
நாமும் அப்படித்தான் பகவானை விட்டுச் சென்றவர்களாக இருக்கிறோம்.
அவனிடத்தில் சேர வழி அனைத்தையும் அவனே தான் காட்டிக் கொடுக்கிறான்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.