இரவு நேரத்தில் 
ஒரு ஏழை விவசாயி,
 தன் வேலைகளை எல்லாம் 
 முடித்துவிட்டு 
 உறங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் கனவில், 
 கையில் கரும்பலகையுடன்
 கடவுள் வந்தார்.
"இந்த கரும்பலகையில், 
 உனக்கு தெரிந்த 
 முப்பது உறவுமுறைகளின் 
 பெயர்களை எழுது" என்றார்.
அந்த விவசாயியும், 
 "அப்பா, அம்மா , 
 தாத்தா, பாட்டி ,
 மனைவி, மகன், மகள், 
 அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, 
 சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, 
 காதலி, நண்பன்" என,
 முப்பது பேர் பெயரை எழுதினான்.
அப்பொழுது கடவுள், 
"கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும். 
நீ யாரை இழக்க முடியும் 
என்று நினைக்கிறாயோ,  
அந்தப் பெயரை அழி" என்றார். 
சற்று யோசித்த விவசாயி, 
காதலி , நண்பன் என 
இரண்டு பேர் பெயரை அழித்தான்.
கடவுள் மறுபடியும்,  
"இன்னும் இரண்டு பேர் 
பெயரை அழி" என்றார்.
விவசாயியும்
கொஞ்ச நேரத்தில், 
 "மாமா,  அத்தை" என
இரண்டு பேர் பெயரை அழித்தான்.
விவசாயி இப்படியே,  
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்.
கடைசியாக 
அப்பா, அம்மா , 
மனைவி, மகன், மகள் என 
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது.
கடவுள், 
"இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை 
நீக்க வேண்டும்.
நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார். 
விவசாயி வருத்தத்துடன், 
சிறிது நேரம் கழித்து
அப்பா, அம்மா  
பெயரை அழித்தான்.
கடவுள் மீண்டும், 
"இன்னும் இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்" என்றார்.
கடவுளுக்கு சற்று 
எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. 
 "அடுத்ததாக 
இவன் யார் பெயரை 
அழிக்கப்போகிறான்?" என்று. 
அப்போது விவசாயி
மிகுந்த சோகத்துடனும், 
மன வேதனையுடனும்
மகன், மகள் பெயரை அழித்தான்.
கடவுள் ஆச்சரியமுடனும்,
ஆவலுடனும் கேட்டார்.
"மகன், மகள் பெயரை அழித்துவிட்டு, 
எதற்காக மனைவி பெயரை 
அழிக்கவில்லை?" என்று.
அதற்கு விவசாயி, 
 "மகள் எப்படியும் 
 இன்னொரு வீட்டுக்கு 
 வாழப் போய் விடுவாள்.
 மகன்,அவனுடைய  
 மனைவி, குழந்தை என வாழ்வான். 
கடைசி காலம் வரை 
என்னோடு வாழக்கூடியவள் 
என் மனைவி மட்டும்தான்" என்றான்.
விவசாயியின் பதிலைக் கேட்டு 
வியந்து போன கடவுள், 
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம். 
நம்முடைய வாழ்க்கைத் துணையாக, நாம் இறக்கும் வரை நம்முடன் வரக்கூடிய, நம்மோடு வாழக்கூடிய ஒரே உறவு...
மனைவி மட்டும்தான்.
அந்த மனைவி நல்ல மனைவியாக அமைய வேண்டும்.... நல்ல மனைவி அமைய வில்லை என்றால் வாழ்க்கை முழுவதும்.நரகம்தான் .....
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh




.jpg)



 

