பரோட்டா மாஸ்டர் 18,000 சம்பாதிக்கிறார். பொறியியல் படித்தால் 15,000 தான் சம்பளம்.
பரோட்டா மாஸ்டர் அடுப்பருகே, 3–4 மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே, 40 degree வெப்பநிலையில் வேலை செய்கிறார்.
பல பொறியாளர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் 6–8 மணி நேரம் அமர்ந்துகொண்டே, 26-28 degree வெப்பநிலையில் வேலை செய்கிறார்கள்.
ஆரம்பத்தில்,அனுபவமில்லாத பரோட்டா மாஸ்டருக்கு 5000 தான் கொடுப்பார்கள். அதுவும் 21 வயதில், மாவு பிசைக்க மட்டும் தான் பயன்படுத்துவர்.
அனுபவமே இல்லாமல் 7000 - 40,000 வரை தரும் படிப்புகளில் பொறியியலும் ஒன்று.
5 வருட அனுபவத்தின் பின், 26 வயதில் பரோட்டா மாஸ்டர் 10,000 வரை சம்பாதிக்கலாம்.
அதே வயதில், பொறியாளர் 15000-60,000 சம்பளம் பெறலாம்.
30 வயதிற்கு பிறகே, பரோட்டா மாஸ்டர் 15,000-30,000 வரை சம்பாதிக்கலாம்.
30 வயதில் 20,000-80,000 வரை சம்பாதிக்கும் பொறியாளர்கள் பலர் உண்டு.
வயதாக ஆக அதிக நேரம் நின்று பரோட்டா செய்வது கடினம்.
ஓய்வு வரை உட்கார்ந்து கொண்டே பொறியாளர்கள் வேலை செய்யலாம்.
பரோட்டா மாஸ்டர் கூட வேலை செய்பவர்களை காதலித்து திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை.
பொறியாளர் கூட வேலை செய்பவர்களை காதலித்து திருமணம் செய்ய வாய்ப்புண்டு.
எக்காரணம் கொண்டும், சம்பளத்தை மனதில் வைத்து படிக்காதீர். ஒழுங்காக அப்படி படிக்க இயலாது.
பிடித்ததை படியுங்கள். அது சமையலோ அல்லது பொறியியலோ.
எந்த தொழிலும் தாழ்ந்ததல்ல. ஒழுங்காக செய்தால் எதிலும் முன்னேறலாம்.
படித்தால் நம் எண்ணங்கள், பல கோணங்களில் அழகாகும்.
அது புத்தக பாடமோ - வாழ்க்கை பாடமோ.