புத்தக பாடமோ - வாழ்க்கை பாடமோ...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

 


பரோட்டா மாஸ்டர் 18,000 சம்பாதிக்கிறார். பொறியியல் படித்தால் 15,000 தான் சம்பளம்.
 
பரோட்டா மாஸ்டர் அடுப்பருகே, 3–4 மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே, 40 degree வெப்பநிலையில் வேலை செய்கிறார்.
 
பல பொறியாளர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் 6–8 மணி நேரம் அமர்ந்துகொண்டே, 26-28 degree வெப்பநிலையில் வேலை செய்கிறார்கள்.
 நீங்கள் சமையல் மாஸ்டரா.. உங்களுக்கு பரோட்டா போடத்தெரியுமா.. சிறப்பான  எதிர்காலம் இருக்கு | jobs: Wanted cooking masters and parotta masters in  tamilnadu - Tamil Goodreturns
ஆரம்பத்தில்,அனுபவமில்லாத பரோட்டா மாஸ்டருக்கு 5000 தான் கொடுப்பார்கள். அதுவும் 21 வயதில், மாவு பிசைக்க மட்டும் தான் பயன்படுத்துவர்.
 
அனுபவமே இல்லாமல் 7000 - 40,000 வரை தரும் படிப்புகளில் பொறியியலும் ஒன்று.
 Infosys - Corporate Responsibility | Social
5 வருட அனுபவத்தின் பின், 26 வயதில் பரோட்டா மாஸ்டர் 10,000 வரை சம்பாதிக்கலாம்.
 
அதே வயதில், பொறியாளர் 15000-60,000 சம்பளம் பெறலாம்.
 
30 வயதிற்கு பிறகே, பரோட்டா மாஸ்டர் 15,000-30,000 வரை சம்பாதிக்கலாம்.
 
30 வயதில் 20,000-80,000 வரை சம்பாதிக்கும் பொறியாளர்கள் பலர் உண்டு.
 
வயதாக ஆக அதிக நேரம் நின்று பரோட்டா செய்வது கடினம்.
 
ஓய்வு வரை உட்கார்ந்து கொண்டே பொறியாளர்கள் வேலை செய்யலாம்.
 Infosys Mangalore office photos
பரோட்டா மாஸ்டர் கூட வேலை செய்பவர்களை காதலித்து திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை.
 
பொறியாளர் கூட வேலை செய்பவர்களை காதலித்து திருமணம் செய்ய வாய்ப்புண்டு.
 
எக்காரணம் கொண்டும், சம்பளத்தை மனதில் வைத்து படிக்காதீர். ஒழுங்காக அப்படி படிக்க இயலாது.
 
பிடித்ததை படியுங்கள். அது சமையலோ அல்லது பொறியியலோ.
 
எந்த தொழிலும் தாழ்ந்ததல்ல. ஒழுங்காக செய்தால் எதிலும் முன்னேறலாம்.
 
படித்தால் நம் எண்ணங்கள், பல கோணங்களில் அழகாகும்.
 
அது புத்தக பாடமோ - வாழ்க்கை பாடமோ.
 
படித்ததில் பிடித்தது
 

 

❌கோயில்களில் செய்ய கூடாத சில தவறுகள்?❌

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 AM | Best Blogger Tips

 May be an image of temple and text

❌கோயில்களில் செய்ய கூடாத சில தவறுகள்?❌

👉நடை சாத்தப்பட்டிருக்கும்போது வணங்கக்கூடாது. கோயிலில் தூங்க கூடாது.

👉கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்கக்கூடாது.

👉தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.

👉கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.

👉அபிஷேகம் நடக்கும்போதும், திரை போட்டிருக்கும்போதும் சுவாமியை அல்லது பிரகாரம் சுற்றி வரக்கூடாது.

👉குளிக்காமல் கோயிலுக்கு போகக்கூடாது. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

👉கையில் விளக்கு வைத்து ஆராதனை காட்டக்கூடாது. கோயில் படிகளில் உட்கார கூடாது.

👉கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.

👉சிவன் கோயிலில் அமர்ந்து வரவேண்டும்.

👉பெருமாள் கோயிலில் அமர கூடாது.

👉வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது.

👉மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .கிரகணம் இருக்கும் போது கோயிலை வணங்க கூடாது.

👉கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.

👉புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.

👉கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

👉தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

👉சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

👉தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும், நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.

👉கோயிலில் வைத்து எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.

👉தற்பெருமைக்காக கோயிலில் எந்த வேலையும் செய்யக்கூடாது.
 

🌷 🌷🌷 🌷  May be an image of 2 people and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

வயது ஐம்பதை கடந்த பிறகாவது ....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:51 AM | Best Blogger Tips

 May be a doodle of 6 people

வயது ஐம்பதை கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...
 
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
 விதி என்றால் என்ன ..? படித்ததில் பிடித்தது
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
 
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
 
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
 
தனித்தனி ஆன்மாக்கள்..
 
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
 
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . 
 
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். 
 
அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
 Hija college natpiddimunai
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
 
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
 சிறகுகள்: தோல்வி நிலையென நினைத்தால்....!
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
 
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...
 
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
 👁 கண்களின் மொழி 👁
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
 
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். 
 
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் .
 
அதையும் மீறி சிலவேளைகளில் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
 
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
 
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
 
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட நீ உன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
 
உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
 மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது... - Big Motivational club | Facebook
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். 
 
இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
 

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹