உன்னை இழந்து விடாதே .....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and coffee cup

ஒரு ஆசிரியர் 15 ஆண்டுகள் கழித்து தனது மாணவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று அழைத்திருந்தார். அனைவரும் அவர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் மிகவும் பிரபலமானவர்கள் அரசியல் போலீஸ் தொழிலதிபர் பேப்பர் கடை வைத்திருப்பவர் துணிக்கடை வைத்திருப்பவர் அரசாங்க அதிகாரி அமைச்சர் என்று பல துறைகளில் பெரிய ஆட்கள்.
 
அனைவருமே இது ஒரு அழகான வாய்ப்பாக கருதி ஒன்றாக வந்து சேர்ந்தார்கள் துணி வியாபாரி அமைச்சரிடம் சென்று எப்படிடா இருக்கிறாய் என்றும் பேப்பர் காரன் போலீஸ் அதிகாரியிடம் என்னடா இவ்வளவு குண்டு ஆயிட்ட என்றும் பேசினார்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களுக்கு பேச்சு வரவில்லை அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அதுவரை அந்த ஆசிரியர் அங்கு வரவே இல்லை.
வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தார் சுட சுட தேநீரோடு சிலவகை கோப்பை எடுத்துக் கொண்டு வந்தார். அனைவரும் ஆசிரியர் வந்ததும் எழுந்து நின்று தேநீர் வாங்க அங்கே இருந்த கோப்பைகளை எடுக்க செய்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான கோப்புகளை தேர்வு செய்தார்கள்.
 
ஒருவர் சில்வர் மண் பீங்கான் வெள்ளி கண்ணாடி போன்ற பல வகைகளை தேர்வு செய்தார்கள் ஆசிரியர் அமைதியாக பார்த்தார். எல்லோரும் இப்பொழுது கேட்கப் போகும் கேள்விக்கு உண்மையாக பதில் சொல்லுங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரும் ஒரே மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று கேட்டார் அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது இல்லை சார்.
 
பள்ளியில் படிக்கும் போது இருந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் இப்போது ஏதோ ஒன்று தடுக்கிறது அது என்ன என்று எங்களால் கூற முடியவில்லை இதோ என் அருகில் இருப்பவனிடம் நான் பயங்கரமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் இன்று ஏதோ ஒன்று அவனை நெருங்க முடியாமல் தடுக்கிறது என்று கூறினார். இந்தப் பாடத்தை புரிய வைக்கவே தான் நான் உங்களை அழைத்தேன். 
 
நீங்கள் அனைவரும் வெவ்வேறு துறையில் ஒவ்வொரு பதவியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரும் வாழ வேண்டியது உங்களது வாழ்க்கை தான் ஆனால் நீங்கள் எல்லோரும் உங்கள் துறையை தான் நம்பி மதிப்பதால் மற்றவர்களிடம் நெருங்க முடியவில்லை உங்கள் தகுதி துறை என்பது வேறு
காபி கோப்பைகள் போல உங்களது பதவிகள் அலங்காரமாக வேறுவேறு ஆக இருந்தாலும் நமக்கு தேவை அதில் உள்ளே இருக்கும் காபி தான் அதுபோல் நாம் பதவிகளில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த மகிழ்ச்சி நாம் அனைவருக்கும் உள்ளத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 
உங்கள் பதவிகளை தகுதிகளை இல்லத்தில் நுழையும்போதே கழட்டி வைத்து விடுங்கள் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லத்தில் ஒருவனாகவும் வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நிறைய பெரிய இடங்களில் மகிழ்ச்சி இருப்பதில்லை ஆனால் சிறிய குடிசையில் சந்தோஷத்தோடு சிரிப்பொலிக்கு இருக்கும்.
அவர்கள் சிரிப்பதற்கு எந்த பதவியும் பணமும் தடுக்கவில்லை வசதியானவர்கள் தங்கள் பதவிகளை நினைத்து தங்கள் திறமைகளை நினைத்து இல்லத்தில் இன்பமாக இருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.. நீ வெளியில் பெரிய அதிகாரியாக இருக்கலாம் வீட்டுக்குள் உன் குழந்தைக்கு தந்தையாக உன் மனைவிக்கு கணவனாக உன் அப்பா அம்மாவுக்கு குழந்தையாக மாறி நடந்து பார் உன்னுடைய வாழ்வு இனிக்கும்.
 
உன் பதவி அதிகாரத்தை உன் இல்லத்துக்குள் நுழைக்காதே உன் இன்பமான வாழ்க்கை எனும் தேநீர் உனக்கு கிடைக்காமல் போய்விடும்....