#தீக்ஷிதர்கள்_திருமுறைகளை #மறைத்தனரா??
"#இராஜராஜசோழன்_என்ற_டுபாக்கூர்_திரைப்படம்" #கூறுவது_உண்மையா?? #புராணம்_என்ன_சொல்கிறது!!??"
[சிவதீபன் - 30/01/20]
சிவாஜி கணேசன் நடித்த இராராஜ சோழன் என்ற பழைய திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்!!
"நம்பியாண்டார் நம்பிகள் தஞ்சை பெரிய கோயிலில் வந்து இராஜராஜ சோழனை சந்தித்து மூவர் பாடிய தேவாரங்களை தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் அறையில் பூட்டி வைத்திருப்பதாகவும், தேவாரம் பாடிய மூவரும் நேரில் வந்தால் திறப்போம் என்று அந்தணர்கள் சொல்வதாகவும், பிறகு மூவர் திருமேனிகளை தில்லைக்கு அரசன் எழுந்தருள் பன்னிய பொழுது அதனை ஒத்துக் கொள்ளாத தீக்ஷிதர்கள் தேவாரங்கள் இருக்கும் அறையின் சாவியை தர மறுப்பது போலவும், பிறகு அரசன் வாதம் செய்து சாவியை வாங்கி அறையை திறந்ததாகவும்" காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கும்!!
ஆனால், *"திருமுறை கண்ட புராணம்"* என்ற ஒரு நூல்தான் இந்த காட்சிக்கான மூல ஆதாரம், ஆனால் புராணத்தில் வரும் பல உண்மை காட்சிகளை சிதைத்து திரைக்கதை சுவாரஸ்யத்திற்காகவும் *"வேண்டுமென்றே தீக்ஷிதர்களை கெட்டவர்களாகவும் திருமுறைகளுக்கு எதிரானவர்கள் என்று சித்திரித்தும் எடுக்கப்பட்டதுதான் இக்காட்சிகள்"*
அவற்றை திரைப்படத்தின் மூல ஆதாரமான, *"திருமுறைகண்ட புராணப் பாடல் வழி பார்க்கலாம்"*,
முதலில் *"அபய குல சேகரன்"* என்ற மன்னன் ஒரு தேவாரப் பாடலை யாரோ ஓதக்கேட்டு அதனோடு தொடர்புடைய ஏனைய பாடல்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, அப்பொழுது திருநாரையூரில் ஆதி சைவ மரபில் *"நம்பியாண்டார் நம்பி என்ற சிறுவன் வந்து உதித்தான்"* என்கிறது புராணம் இதனை,
*"அரிய முறை தேட எங்கும் இலாமையாலே நையும் மனத்தினன் ஆகி இருக்குங் காலை நாரையூரினில் ஆதிசைவ மறையோன் பால் வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ மாமணிபோல் ஒரு சிறுவன் வந்து தோன்றி"* என்று புராணத்தின் இரண்டாம் பாடலில் பார்க்கலாம்
அதன் பிறகு அந்த ஆதிசைவ சிறுவன் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாராம் விநாயகருக்கு நேரடியாக உணவுப் பொருட்களை படைத்தமையும் அதனால் விநாயகப் பெருமானால் வேதம் முதலிய அனைத்து கல்விகளையும் ஓதப் பெற்று புகழ் பெற்று விளங்குகிறார் என்றும் அதனை கேட்டு அந்த சிறுவனை சந்திக்கவும், பொல்லா பிள்ளையாருக்கு வேண்டிய பல்வகை நெய்வேத்ய பண்டங்களையும் தயார் பன்னி கொண்டு அரசன் தன் பரிவாரங்களுடன் *"திருநாரையூருக்கு"* செல்வதாக புராணம் கூறுகிறது, இதனை
*"வேழ முகத்தோன் தானும் அந்தம் அற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன்,"*
*"அன்றது போல மற்றை நாளும் விந்தையொடு நிகழ நம்பி ஆண்டார் நம்பி மேவி இருந்திடுஞ் செய்தி வேந்தன் கேளா, செல்வ மிகு திருநாரையூரில் மேவுஞ் சிவன் அளித்த மத கரிக்குச் சிந்தை கூர்ந்து நல்ல புகழ் உடைய நம்பி ஆண்டார் நம்பி நண்பினொடு நிவேதிப்பான் மதுர மிக்க எல்லையில் வாழைக் கனி தேன் அவலோடு அப்பம் எள்ளுண்டை இவ்வுலகோர் எடுக்க என்றே மல்லல் மிகு சேனையுடன் இராசராச மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான்"* என்று புராணத்தின் 4,5ஆம் பாடல்கள் கூறுகின்றன
ஆனால் *"சிவாஜி கணேசன் நடித்த டுபாக்கூர் படத்திலோ!! நம்பியாண்டார் நம்பியை வயதான காவி கட்டிய துறவி போலவும், அவர் வந்து தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அரசனை சந்திப்பது போலவும் காட்சி வருகிறது!!"* எனில் ஆரம்பத்திலேயே இந்த படம் எத்தனை பித்தலாட்டமாக எடுக்கப் பட்டுள்ளது என்பது டுபாக்கூர் தமிழ் போராளிகள் புரிந்து கொண்டு மேற்கொண்டு படிக்கவும்,
புராணத்தில் தொடர்ந்து *"ஆதிசைவர் குலத்தில் பிறந்த பிரம்மச்சாரி சிறுவராம் நம்பியாண்டார் நம்பியை நாரையூரில் சந்தித்து வணங்கும் அரசன், தான் கொண்டு வந்த திண்பண்டங்களை விநாயகப் பெருமானுக்கு நிவேதித்து மூவர் தேவாரம் இருக்கும் இடத்தை கேட்டு சொல்லுமாறு விண்ணப்பம் வைக்கிறார், அதனை ஏற்கும் நம்பிகளும் விநாயகப் பெருமானுக்கு நிவேதித்து விநாயகப் பெருமானிடம் அந்த மூவர் தேவாரம் இருக்கும் இடம் பற்றி வினவுகிறார்"* இந்த செய்தியை முறையே புராணத்தின் 6 முதல் 11 வரையிலான பாடல்களில் காணலாம்
அந்த நிவேதனங்களை உண்ட விநாயகப் பெருமான் நம்பியாண்டார் நம்பிகளுக்கு தேவார மூவர்களின் *"கை அடையாளங்களுடன் கூடிய ஏடுகள் தில்லை கோயிலின் புறக்கடையில் ஒரு அறையில் இருக்கின்றன"*, என்று கூறி அவற்றின் பெருமையை விரிவாக நம்பிகளுக்கு அறிவிக்கிறார்!!
அது பற்றி தில்லையில் நிலவும் சம்பிரதாயங்களையும் அறிவிக்கிறார் இதனை,
*"வண் தமிழ்கள் இருந்த இடம் மன்றுள் ஆடும் கூர்ந்த இருள் கண்டர் புறக்கடையின் பாங்கர்க் கோல மலர்க் கைகள் அடையாளமாகச் சார்ந்தன என்று அருள்செய்து தொண்டர் பேறுஞ் சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி அத்தனையும் நம்பி மனத்து அருளிற் கொண்டார்"* என்று 12 ஆம் பாடலில் கூறுகிறது புராணம்
அதாவது மூவர் தேவாரம் தில்லையில் இருப்பது பற்றிய அனைத்து செய்திகளையும் அதுபற்றி அங்கு நிலவும் சம்பிரதாயங்கள் அனைத்தையும் விநாயகப் பெருமான் கூற மனதில் வாங்கி கொள்கிறார் நம்பியாண்டார் நம்பிகள்
பிறகுதான் அரசரிடம் வந்து விநாயகர் கூறியபடி மூவர் தேவாரத்தின் பெருமைகளை விளக்கி தில்லையில் சுவடிகள் இருக்கின்றன அது தேவாரமூவரும் நேரில் வந்தால் கிடைக்கும் என்ற சம்பிரதாயம் நிலவுகிறது என்ற செய்தியை அறிவிக்கிறார்
இதனை புராணத்தின் 13 முதல் 18 வரையிலான பாடல்களில் அறியலாம்,
ஆனால் *"சிவாஜிகணேசன் நடித்த டுபாக்கூர் திரைப்படத்தில் காட்சிகள் இப்படியா இருக்கின்றன?? விநாயகப் பெருமானின் சிலையை கூட படத்தில் காட்டாமல், நம்பியாண்டார் நம்பிகள் ஆதிசைவ அந்தண பிரம்மச்சாரி என்ற உண்மையை மறைத்து படம் எடுத்திருக்கிறார்கள்"* இதனைதான் உண்மை என்று வரலாற்று பிரமானமாக கூறுகின்றன பல ஆட்டு மந்தை கூட்டங்கள், இது நிற்க!! மேல புராணத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்!!
நம்பிகளின் சொல்கேட்ட இராசராச மன்னவன் சிதம்பரத்திற்கு வந்து தில்லை வாழ் அந்தணர்களிடம் *"இது போல விநாயகப் பெருமான் கூறியிருக்கிறார்"* என்று அறிவிக்கிறார் இதனை,
*"மன்று இடஞ் சென்று மறையோர்கள் தொண்டர் வார் சடையோர் காவல் உடை மரபோர்க்கு எல்லாம் நன்று எங்கள் கணபதி தன் சொல் இது என்று நன்மையுடன் மன்னவனார் நவிலுங் காலை"* என்று புராணம் கூறுகிறது
உடனே தில்லைவாழ் அந்தணர்கள் தேவார மூவரும் வந்தால் அறை திறக்கும் என்கிறார்கள் இதனை
*"அத்தகையோர் தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும் என உரைக்க"* என்கிறது புராணம்!!
இந்த இடத்தில் நன்கு கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது!! புராணத் தொடக்கத்திலேயே *"மூவர் தேவாரத்தை பல இடங்களில் அரசன் தேடியதாக வருகிறது!! ஆனாலும் எந்த தகவலும் அரசனுக்கு கிடைக்கவில்லை, ஆனால் கடல்கடந்து ஆட்சி பன்னும் அரசனின் ஒற்றர் படைக்கு தில்லையில் இப்படி ஒரு அறை இருப்பதும் இப்படி ஒரு சம்பிரதாயம் இருக்கிறது என்ற செய்தியும் தெரியாமல் போனது எப்படி??"* என்பது தனியே ஆராயத் தக்க செய்தி!! இது நிற்க!!
எப்டியே அது அரசருக்கு தெரியாமல் போய் இப்பொழுது நம்பியாண்டார் நம்பிகள் மூலம் தெரியவந்து தில்லைக்கு வந்து தீக்ஷிதர்களிடம் அரசர் இது பற்றி விசாரிக்கையில் தீக்ஷிதர்கள், *"மூவர் வந்தால் அறை திறக்கும்"* என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான்,
உடனேயே மூவர் திருமேனிகளை செய்து ஊர்வலமாக கொண்டு வந்து நிறுத்தியவுடன்
*"தில்லை சிற்சபையின் மேற்கு பக்கத்தில் ஒரு அறை கை இலச்சினை இட்ட முத்திரைகளுடன அனைவருக்கும் தென்படுகிறது!!"* என்றுதான் புராணம் கூறும் காட்சி இதனை,
*"அத்தகையோர் தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும் என உரைக்க, அரசன் தானும் மெய்தகு சீர் அம்பலவர்க்கு உற்ற செல்வ விழா எடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை உய்த்து அணி வீதியினில் உலா வருவித்து உம்பர் நாயகன் தன் கோயில் வலமாக்கி உள்ளே சித்தம் எலாம் உருக்கு தமிழ் இருக்கை சேரச் சேர்த்தி அவர் சேர்ந்தது என செப்பி நின்றான்"*
*"ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால் அருள் பெற்ற மூவர் தமது அருள் சேர் செய்ய கை அதுவே இலச்சினையாய் இருந்த காப்பைக் கண்டவர்கள் அதிசயிப்ப"* என்று காட்சி செய்கிறது புராணம்
அதாவது திரை படத்தில் வருவது போல, மூவர் திருமேனி எழுந்தருள் பன்னுவதற்காக தீக்ஷிதர்கள் எதிர்ப்பும் செய்யவில்லை, அறையை பூட்டிசாவியை இடுப்பிலும் வைத்தில்லை,
என்ன நடக்கிறது என்றால், அரசன் நடராஜாவுக்கு விழா எடுத்து மூவர் திருமேனியை உள்ளே கொண்டு வருகிறான் அதற்கு தீக்ஷிதர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக அனைத்துக்கும் ஒத்துழைக்கிறார்கள், பின்னர் தானாகவே *"மேற்கு திசையில் விநாயகப் பெருமான் கூறியது போலவே தேவார மூவரின் கை இலச்சினையுடன் ஒரு அறை தென்படுகிறது, தீட்சிதர்கள் உட்பட அனைவருக்கும் அப்போதுதான் அந்த அறையே தெரிகிறது"*
இதனை *"மூவர்தமது அருள் சேர் செய்ய கையதுவே இலச்சினையாய் இருந்த காப்பைக் கண்டவர்கள் அதிசயப்ப"* என்று தெளிவாக கூறுகிறது புராணம்.
இந்த இடத்தில் தீக்ஷிதர்களின் நிலைபற்றி ஒன்றை விளக்க வேண்டும், அது வரை கோயிலில் தொண்டு செய்யும் அவர்களுக்கே புலப்படாத அறை திடீர் என்று புலப்படுவதால் *"இது பற்றி முற்காலந்தொட்டு நிலவும் சம்பிரதாயத்தின் மேல் அவர்களே நம்பிக்கையற்று இருந்திருக்கலாம் என்பதால் அரசர் விசாரித்த பொழுது அப்படி ஒரு உண்மை வெளிப்படமல் போயிருக்கலாம், அது என்ன சம்பிரதாயம்?? தில்லையில் ஒரு அறையில் மூவர் கை இலச்சினையுடன் தேவாரங்கள் இருக்கின்றன ஆனால் மூவர் வந்தால் திறக்கும்"* என்பதுதான் அது,
ஆனால் அந்த அறை நேரில் அனைவருக்கும் தெரியும்படி இருந்திருந்தால் அரசனுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, ஆனால் யார் கண்களுக்கும் தெரியாமல் இறைவன் மறைத்து வைத்து திடீரென்று தோன்றுவித்த அதிசய அறை அது என்பதால்தான் *"அரசன் வந்து கேட்ட போது இப்படி ஒரு சம்பிரதாயம் உண்டு மூவர் வந்தால் திறக்கும் என்ற தங்கள் முன்னோர்கள் கூறிய வழிவழி சம்பிரதாயத்தை கூறி அமைதி அடைகிறார்கள்"* தீக்ஷிதர்கள்
ஆனால் *"இந்த முட்டாள் தனமான திரைப்படத்தில் அறையின் சாவியை தீக்ஷிதர் இடுப்பில் வைத்திருந்து அரசருடன வாதம் செய்து பிறகு எடுத்து தருவது போல காட்டப் படுவது எத்தனை புராண விரோதம்?? எத்தனை அயோக்கியத்தனம்?? இது யாரை ஏமாற்றும் வேலை??"*
சரி!! தொடர்ந்து ஒரு முக்கியமான செய்தியை கூறி நிறைவு பன்னி கொள்வோம், புராணப்படி
திடீர் என்று தோன்றிய அந்த அதிசய அறையின் காப்பினை அரசன் நீக்கி உள்ளே நுழைகிறான்
*"கையதுவே இலச்சினையாய் இருந்த காப்பைக் கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய் நீக்கி"* என்று புராணம் கூறுகிறது, பூட்டு உடைக்கப்பட்டதா?? சாதாரண தாழ்ப்பாள் மட்டும் இருந்து திறக்கப் பட்டதா?? சும்மா கதவு சாத்தி இருந்து திறக்கப்பட்டதா?? என்பதெல்லாம் ஆய்வுக்குரிய செய்தி ஆனால் காப்பு நீக்கப்பட்டது, ஆனால் *"அந்த சாவியை தீக்ஷிதர்கள்தான் வைத்திருந்து கொடுத்தார்கள் என்பது புராணத்தில் இல்லாத செய்தி ஆனால் திரைப்படத்தில் அப்படி காட்ட வேண்டிய அவசியம் என்ன??"* என்பதனை அன்பர்கள் சிந்திக்க வேண்டும்!!
உள்ளே சென்று பார்த்தால் தேவாரச்சுவடிகள் மீது பெரிய புற்று எழுந்து செல்லரித்து கிடக்கிறது!! அதனை கண்டு இடிந்து போன மன்னன் உடனே புற்றினை தள்ளி நிறைய நல்லெண்ணை குடங்களை கொண்டு வந்து ஊற்றி கரையான்களை நீக்கி ஏடுகள் பல சிதைந்திருப்பது கண்டு இறைவனை எண்ணி கண்ணீர் விடுகிறார் இதனை
*"நொய்ய சிறு வன்மீகம் (புற்று) மூடக் கண்டு நொடிப்பு அளவினிற் சிந்தை நொந்த வேந்தன் பார்த்து அதனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே படிந்திருந்த மண்மலையைச் சேரத்தள்ளிச் சீர்த்த திலதைல (நல்லெண்ணெய்) மலி கும்பங் கொண்டு செல்லு நனையச் சொரிந்து திருஏடெல்லாம் ஆர்த்த அருள் அதனாலே எடுத்து நோக்க அலகிலா ஏடு பழுதாகக் கண்டு தீர்த்த முடிக்கு அணி பரனே!! பரனே!! என்னச்சிந்தை தளர்ந் திருகண்ணீர் சோர நின்றான்"* என்று காட்சி செய்கிறது புராணம்
அப்பொழுது ஒரு அசிரீரி கேட்கிறது!! *"அதாவது இறைவனது குரல் "அசீரீரி அசிரீரி கேட்கிறது"* பக்கத்தில் உள்ள சீர்காழி கோவிந்தராஜன் பேசவில்லை
*"அசிரீரியாக இறவன் பேசுகிறார்"*
என்ன பேசுகிறார்??
*"சைவநெறித் தலைவர் எனும் மூவர் பாடல் வேய்ந்தன போல் மண்மூடச் செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம் என்று, உலகில் உள்ள மாந்தரொடு மன்னவனும் கேட்குமாற்றால் வானகத்தில் ஓர் ஓசை எழுந்தது அன்றே!!"* என்கிறது புராணம்
அதாவது ஏடுகளை மண்மூடச் செய்து காலத்திற்கு ஏற்ப வேண்டியதை வைத்தோம், என்று இறைவனே கூறுகிறார் ஆதலால்தான் அரசன் எத்தனை தேடியும் தேவாரம் இருக்கும் இடமும் தெரியவில்லை, தீக்ஷிதர்களுக்கும் அந்த அறை பற்றிய இரகசியம் தெரியவில்லை அரசன் வந்தவுடன் காலம் காலமான சம்பிரதாயத்தை சொல்லி அமைதி அடைகிறார்கள், பிறகு விழா நடக்கிறது, அறை தோன்றுகிறது செல்லரித்த ஏடுகளை கண்டு வேதனையுற்ற மன்னனை இறைவனே அசீரீரி வாக்கால் தேற்றுகிறார்
*"ஆதலால் தேவார ஏடுகள் சிதைந்து கிடைக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும் என்பதே புராண முடிபாகும்!! இதனை அப்படியே படமாக்காமல் ஒரு பாவமும் அறியாத தில்லைவாழ் அந்தணர்களாம் தீக்ஷிதர்களின் மீது பழி ஏற்படும் வண்ணம் படம் எடுத்து வைத்து இருக்கிறார்கள்"*
அதனை காலங்காலமாக உண்மை என்று நம்பி பலர் திரைப்பட காட்சிகளை எல்லாம் ஆதாரமாக காட்டி காமெடி பன்னுகிறார்கள்!!
இந்த படம் எடுக்கப் பட்ட காலம் ஏற்குறைய அறுபதுகள் (60ஸ்) என்றால் அது திராவிட சிந்தனை தமிழகத்தில் வளர்ந்த காலம், அப்போது பார்ப்பன துவேசம் என்பது பகுத்தறிவாக பார்க்கப்பட்டது, ஆதலால் இராசராச மன்னன் கதையை வரலாற்று படமாக காட்ட நினைத்த இயக்குனர் பார்ப்பன துவேசத்தையும் இணைத்து இறைவன அசிரீரி, விநாயகர் தோற்றம், போன்ற காட்சிகளை நயமாக நீக்கிவிட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்
அவர் தில்லை அம்பலம் போன்று செட் போட்டிருப்பதில் கூட எத்தனை அபத்தம் என்று ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்!!, தீக்ஷிதர்கள் போல நடிப்பவர்கள் கூட தக்க முறையில் மேக்கப் போடவில்லை, அபத்தம் அபத்தம் முழுக்க முழுக்க அபத்தங்களால் மட்டுமே சூழப்பட்ட காட்சி இது
ஆக இப்படி ஒரு டுபாக்கூர் படத்தை எல்லாம் பார்த்து விட்டு தமிழ்!! தமிழ்!! என்று கூவாமல் குறைந்தது தமிழில் உள்ள மூல நூல்களையாவது படிங்கப்பா!!
கொஞ்சமாவது ஆண்டவன் கொடுத்த அறிவை உபயோகப் படுத்துங்கப்பா போராளீ பாய்ஸ்களா!!
பின்குறிப்பு: *"திருமுறைகண்ட புராணத்தின் ஆசிரியர் மற்றும் காலம் ஆகியவையும் உண்மையில் திருமுறையை கண்டறிந்தது இராசராச சோழன்தானா??, நம்பியாண்டார் நம்பிகளும் இராசராச சோழனும் சம காலத்தவர்கள்தானா?? என்பது எல்லாம் ஆய்வுக்குரிய செய்திகள்"* முடிந்தால் போராளிகள் ஆராயவும், இந்த கட்டுரையில் உள்ள தமிழ் பாட்டுகளின் பொருள் புரியவில்லை என்றால் அடியேனுக்கு வாட்சப் பன்னவும்
*"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்!!"*
திருச்சிற்றம்பலம்
நன்றி*சிவதீபன்*
9585756797
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh