தேர் இழுப்பதினால் இவ்வளவு நன்மைகளா!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:25 AM | Best Blogger Tips

 தேர் இழுப்பதினால் என்ன பலன்? காஞ்சி மகா பெரியவர் கருத்து! What is the  benefit of pulling a chariot? Kanchi Maha periyava opinion!

மஹா பெரியவா_கூறியது:-

நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம்தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.

ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர்

May be an image of 1 person

மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார்.

தேர் இழுத்தாயோ ….” என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார்.

தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள் நோயாளிகல் மாற்றுத் திறனாளிகள் ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும்.

கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளீப்படும் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்காத மனிதர்களாலேயே தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே தேரோட்டம் உணர்த்தும் உண்மை.

Read all Latest Updates on and about தேர் திருவிழா

தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் தேர் இழுப்பதற்கும் தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். பூர்வ ஜென்ம புண்ணீயம் இருந்தால்தான் நம்மால் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். தேர்வடத்தைத் தொட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும்போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது.

பக்தியுடன் தெய்வத்தை இழுக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக மக்கள் கருதுவதும் பக்தர்களின் பக்திப் பெருக்கைக் கண்டு தெய்வம் ஓடி வருவதும் தேர்த்திருவிழா வின் மகத்துவம் ஆகும். அந்த இடத்தில் தெய்வத்தின் சாந்நித்யம் அதிகரித்துள்ள இடத்தில் இருப்பதற்கே ஒருவரின் ஜாதகம் சரியாக அமைய வேண்டும்.

நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர்த்திருவிழாவில் பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு மஹானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர்த்திருவிழா விலும் கலந்துகொள்ளச் செய்தது. அதனால் கடவுளின் அருள் பலம் சேர வழக்கும் அவருக்கு சாதகமானது

திருவாரூர் தேரோட்டம் எதற்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா.? நீங்களே  ஆச்சர்யப்படுவீங்க.!!

தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்

1 கடவுளின் அருள் பலம் கிடைக்கும்

2 வெற்றி உண்டாகும்.

3 நோய்கள் தீரும்

4 பாபவினைகள் தீரும்.

5 வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அகலும்.

6 மனக்குழப்பங்கள்நீங்கி, நிம்மதி கிடைக்கும்

7 சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்

இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதும் உற்சவம் நடைபெற உதவி செய்வதும் தொண்டுகள் புரிவதும் நிறைந்த புண்ணியத்தைத் தரும்.

ஹர ஹர சங்கர!! ஜய ஜய சங்கர!!

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and motorcycle  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏