பெருமாளே தர்ப்பணம் செய்யும் நென்மேலி திருத்தலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips

 Nenmeli Lakshmi Narayanan Perumal Temple, Kanchipuram – lightuptemples

 

பெருமாளே தர்ப்பணம் செய்யும் நென்மேலி திருத்தலம்

 

அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருகோவில்,

 நமக்காக... நம் பித்ருக்களுக்காக... பெருமாளே சிராத்தம் செய்யும் நென்மேலி  திருத்தலம்! | nenmeli perumal - hindutamil.in

இந்தக் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தி ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் எனும் திருநாமம் கொண்டு திருக்காட்சி தருகிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.

 

தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமாளே செய்ததாகச் சொல்கிறது இந்தத் தலத்தின் சரிதம்!

 லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்- நென்மேலி | Nenmeli Lakshmi Narayana  Perumal Temple

இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம்!

 Tharpanam for pitru | முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தினமும் நடைபெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது எந்த நாளில் முடியுமோ அன்று கலந்து கொள்வது கயாவில் சென்று ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

 

செங்கல்பட்டு

(காஞ்சிபுரம் மாவட்டம்)

 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி. மீ. மீட்டர் தொலைவில் உள்ளது.

 

நன்றி இணையம்