ஒருவருக்கு சர்க்கரை பிரசர் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், சாதாரணமாக மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3000 பில் வருகிறது..
இதற்கு பயந்து மாத்திரைகளை சாப்பிட்டாமல் நோயை முற்ற விடுபவர்கள் ஏராளமானோர்...
இந்த துர்பாக்கிய நிலையில் இருந்து மக்களை காக்க "மக்கள் மருந்தக மையங்கள்" மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல் 40 ரூபாய்க்குள் மத்திய அரசு மாநியத்தில் வழங்கி வருகிறது..
பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி..
மோடி அவர்களின் அதிரடி
"மக்கள் மருந்தகம்"
பொதுமக்களின் மருத்துவ நன்மைக்காக கடந்த 2015ல் தொடங்கப்பட்ட பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டமாகும்.
சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன், நாடு முழுவதும் 739 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதுதான் இந்த மக்கள் மருந்தகம்.
இந்த மருந்தகங்களில் 1,600 க்கும் மேற்பட்ட மருந்துகள், 40 சதவீதம் முதல் 90 சதவீதம் விலை குறைவில் கிடைக்கும்
ஒரு ரூபாய்க்கு சுவிதா சானிடரி நாப்கின்கள் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது
அறுவை சிகிச்சைக்கு தேவையான சாதனங்கள் அனைத்துமே மலிவு விலையில் கிடைக்கின்றன. .
சமீபத்தில், மக்கள் மருந்தகங்களில் அதிகபட்சமாக ரூ.100 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகியிருக்கின்றன.
இதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பணமும் மிச்சமாகியுள்ளது.
வெளிச்சந்தையில் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் மருந்துகள், இந்த மக்கள் மருந்தகத்தில் ரூ. 400 முதல் 500 க்கு மட்டுமே விற்கப்படுகிறது..
துரதிர்ஷ்டவசமாக நமது டாக்டர்கள் மக்கள் மருந்தகத்தில் உள்ள மருந்துகளை தனது மருந்து சீட்டில் எழுதி தருவது இல்லை...
டாக்டர் எழுதிய மருந்து மக்கள் மருந்தகத்தில் அதே பெயரில் இல்லாமல் வேறு பெயரில் கம்பெனிகள் மாறி இருக்கும், மருந்து காம்பினேஷன் ஒன்றாக தான் இருக்கும்.. மக்கள் மருந்தகத்தில் உள்ள கம்பெனி மருந்துகள் தரமானதாக இருக்கும் அதை பயப்படாமல் வாங்கி சாப்பிடலாம், சந்தேகம் இருந்தால் உங்களுக்கு தெரிந்த டாக்டர் அல்லது பார்மசி க்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்..
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் இந்த மக்கள் மருந்தகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது..
இதற்காக, முதற்கட்டமாக சுமார் 50 ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது,
தற்போது மத்திய அரசின் முடிவு ரயில்வே பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் நம்பப்படுகிறது.
மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இப்போது, மருந்து கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக உயர்ந்துள்ளது..
வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 10,000 மருந்துகடைகளாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 25ஆயிரம் மருந்துகடைகளாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மருந்தகம் தொடங்கினால், ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.