கேவலமான ஒப்பீடுகள் ... ஆனால் விசித்திரமான உண்மைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:20 PM | Best Blogger Tips

 

 எப்போதும் சிங்கப்பூர், மலேசியா என்று வேறு நாடுகளோடு தமிழ்நாட்டை ஒப்பீடு  செய்பவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஏன் ஒப்பிடுவதில்லை ...

 

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்

கிடைக்கிறது..!!

 

 XBitLabs

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்

விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்

பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

 BJP Claim On Karnataka Toilet Building Appears False, Data Are Not  Comparable

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5

சதவிதம். ஆனால் கல்விக் கடனுக்கான வட்டி 12 சதவிதம்..!!

 Online Education Loan in India | Education Loan for Working Professionals  at Low-Interest Rate | i2iFunding

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அமரர் ஊர்தியும் (Ambulance), தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

 அரசின் இலவச "அமரர் ஊர்தி" சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் ! - You Turnஇறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் இலவச அமரர் ஊர்தி சேவையில் கோவை  முதலிடம்: பயன்பெற விரும்புவோர் 155377 என்ற எண்ணை அழைக்கலாம் | free mortuary  ...

5. ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக் கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக் கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக் கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

 National Welfare Project Special Camp | நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்

காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்

விற்கப்படுகின்றன..!!

 Sisters sell fruit on roadside to support ailing father : The Tribune India

7. குடிக்கும் Lemon Juice, Orange juice etc... இவையெல்லாம் செயற்கையான

ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எலுமிச்சையில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

 

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. சாராயம் விற்று

கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 10-year-old found selling liquor in UP, rescued by police – India TV

9. கோதுமைக்கு வரி என்பது இல்லை. ஏனெனில் கோதுமை விளை பொருள் என்பதால். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

 

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்..!

              

11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்ட்டாகவும் அமைகிறது..

 Types of Escalators: What You Need to Know - Dazen

12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

 Two Village Woman Oil Painting Handpainted on Canvas without Frame - Etsy  UK | Woman painting, Indian women painting, Rajasthani painting

13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலைவாரி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், நமது வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 Looking through my Periscope: தலைவாரிப் பூச்சூடி உன்னை—talaivArip pUccUDi  unnai

14. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்கள், பொருள் கொடுங்கள், உணவு கொடுங்கள், உடை கொடுங்கள்.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

 Consumer Grievance Redressal Commission directive to old age home | சேவை  குறைபாடு காரணமாக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; முதியோர் இல்லத்திற்கு  நுகர்வோர் குறைதீர் ...

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..

அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 

 

16. டாக்டரை மறந்துவிட்டு நர்சுகளை ஞாபகம் வைத்து இருக்கும் விசித்திரமான மாய உலகம் இது.!

 

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,

ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்

பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

 

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,

பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

 

19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..

இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

 

20. கடவுளாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பதற்கு  கல்லாயிருந்தால் போதும்..

மனிதனாக உட்கார்ந்து வாழத்தான் அதிக விவேகம் வேண்டியிருக்கிறது.!                 

 

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..

மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 

21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..

அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

 

22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலை ஓரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

 

23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க

சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

 

நண்பர்களே... ! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை பிறருக்கு பகிர்ந்து கொள்வதில் தயக்கம் வேண்டாம்!!....!

 

நன்றி இணையம்