உயர்ந்தது ஒழுக்கம்.....!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | Best Blogger Tips

 தேவாங்கர் சமூகம் - "கதை" ஒன்று சொல்லவா...??? தலைப்பு: ❤️அக ஒழுக்கம்❤️  "தன்னை உணர்ந்த குருவும் அவரது சீடனும்" வெளியூருக்கு சென்று தங்கள் ...

 

ஒன்று முதல் எட்டு வரை. உயர்ந்தது ஒழுக்கம்

 

 

திசையை

எட்டாகப் பிரித்த

நம் முன்னோர்கள்..

 

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு

 

திசையை

எட்டாகப்

பிரித்தவர்கள்,

 இசையை

ஏழாக

கொடுத்தார்கள்..

 Charcoal pencil sketch #omkarkhochare | Abstract pencil drawings, Art  drawings sketches pencil, Indian art paintings

  ரி நி

 

 இசையை

ஏழாக

கொடுத்தவர்கள்,

 சுவையை

ஆறாக

பிரித்தார்கள்...

 

இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு

உவர்ப்பு

துவர்ப்பு

 இது தெரியுமா ? அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..!

சுவையை

ஆறாக

கொடுத்தவர்கள்,

 நிலத்தை

ஐந்தாக

பிரித்தார்கள்...

 

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

 5 Vagai Nilangal | Ivagai Nilangal in Tamil | ஐவகை நிலங்கள்

நிலத்தை

ஐந்தாக

பிரித்தவர்கள்

 காற்றை

நான்காக

பிரித்தார்கள்...

 

தென்றல்

வாடை

கோடை

கொண்டல்

 

காற்றை

நான்காக

பிரித்தவர்கள்

 மொழியை

மூன்றாக

பிரித்தார்கள்..

 

இயல்

இசை

நாடகம்

 உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்? | SBS Tamil

மொழியை

மூன்றாக

பிரித்தவர்கள்,

 வாழ்க்கையை

இரண்டாக

வகுத்தார்கள்...

 

அகம்

புறம்

 

கணவன் மனைவி

வாழும் வாழ்க்கை

அக வாழ்க்கை...

 கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் « Siragu Tamil Online Magazine, News

வெளியில் இருக்கும்

வியாபாரம் மற்றும்

விவசாயம் எல்லாம்

புற வாழ்க்கை...

 

வாழ்க்கையை இரண்டாக

வகுத்த தமிழரகள்...

 ஒழுக்கத்தை

மட்டும் ஒன்றாக

வைத்தார்கள்...

 

அதை

உயிரினும்

மேலாக

வைத்தார்கள்...

 

இதைத்தான்

அய்யன் வள்ளுவர்

இரண்டு அடியில்

அழகாகச் சொல்கிறார்...

 ௱௩௰௧ - ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். -  ஒழுக்கமுடைமை - அறத்துப்பால் - திருக்குறள்

"ஒழுக்கம் விழுப்பந் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

Kural 132, குறள் 132, பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்  (Parindhompik Kaakka Ozhukkam Therindhompith) | திருக்குறள் 132 குறள் தமிழ் 

 

 


 Thanks & copy from Web.