புராணங்களில் கூறப்பட்ட பாதாள உலகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:06 AM | Best Blogger Tips

 பாதாள உலகம் முழுவதும் எப்படி இருக்கும்.அது சோர்கத்தை விட அழகானதா?  #devotionalsongs - YouTube

#ஆன்மீகச்_செய்தி_தளம்

புராணங்களில் கூறப்பட்ட பாதாள உலகம் இன்றும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

இதை படித்தால் உண்மை புரியும்.அதற்கு முன்னதாக இந்த புராணக்கதையை படியுங்கள்.

தசரத சக்கரவர்த்திக்கு முன்பு அயோத்தியை ஆண்ட மன்னர்களில் ஒருவர் சகரன். ஒருசமயம் இவர் அஸ்வமேத யாகம் நடத்தினார். யாகத்தில் பங்கேற்ற குதிரை சம்பிரதாயப்படி பூமியைச் சுற்றி வருவதற்காக அனுப்பப்பட்டது.

இதைப் பற்றி கேள்விப்பட்ட இந்திரன் மனம் கலங்கினான். யாகம் வெற்றி பெற்றால் தன் பதவிக்கு ஆபத்து உண்டாகுமே என குதிரையை கடத்தினான். சகரனின் அறுபதாயிரம் மகன்களும் குதிரையைத் தேடி அலைந்தனர். எங்கும் காணாததால் ஏமாற்றமடைந்த அவர்கள், பாதாள உலகிற்கு செல்ல முடிவெடுத்து பூமியைத் தோண்ட ஆரம்பித்தனர்.

பாதாள உலத்தில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரருகே யாக குதிரை மேய்ந்தபடி நின்றது. யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்திரன், பாதாள உலகில்

குதிரையை விட்டிருந்தான்.

ஆனால் சகரர்களோ குதிரையைத் திருடியவர் கபில முனிவர் என எண்ணி தாக்க முற்பட்டனர். கண் விழித்த முனிவர் அனல் பறக்கும் கண்களால் ஆவேசமுடன் பார்த்தார். அவ்வளவுதான்.

அவர்கள் எரிந்து சாம்பலாயினர்.

விஷயமறிந்த சகரன் தன் பேரனான அம்சுமானை அனுப்பி முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். அதன்பின் குதிரையை மீட்டு வர யாகம் நிறைவேறியது.

ஆனால் சாம்பலான சகரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமே! இதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆமாம், அம்சுமானின் பேரன் பகீரதன் கடுந்தவம் செய்ததன் பலனாக வானுலகில் ஓடிய கங்கை பூமிக்கு வந்தது. அதில் சாம்பல் கரைக்கப்படவே சகரர்கள் நற்கதி அடைந்தனர்.

இப்போது பாதாள உலகிற்குள் நுழைவோம் வாருங்கள்.

பூமியைத் தோண்டிக் கொண்டே போனால், இறுதியில் கீழே அமெரிக்காவைத் தொடலாம் என்பார்கள். நமக்கும் அமெரிக்காவுக்கும், காலக்கணக்கில் 12 மணி நேரம் வித்தியாசம் என்ற நடைமுறையை பார்க்கும் போது இது சாத்தியமானதாக தோன்றுகிறது. அப்படி இந்தியாவிலிருந்து நேர்க்கோடாக அடியிலுள்ள அமெரிக்கப்பகுதி தான் கலிபோர்னியா. இங்கு ஒரேகான் பகுதியில் உள்ள ஒரு தீவின் பெயர் ஆஷ் ஐலண்ட் அதாவது 'சாம்பல் தீவு'

சகரர்கள் சாம்பலாகிப் போனார்களே, அந்த பாதாள உலகமே இப்போதைய சாம்பல் தீவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த சாம்பலைக் கரைத்த கங்கையே இந்த தீவைச் சூழ்ந்துள்ள நீர்ப்பகுதி.

இங்குள்ள எரிமலைகள் கக்கிய தீப்பிழம்பில் உருவான சாம்பல் படர்ந்த பகுதியே 'சாம்பல் தீவு' எனப்பட்டதாக புவியியல் நிபுணர்கள் வாதாடுகின்றனர். பாதாள உலகில் இருந்த கபில முனிவரின் ஆற்றல் தான் பின்னாளில் எரிமலையாக மாறியது. மேலும் இந்திரன் திருடிக் கொண்டு வந்து கட்டி வைத்ததாகச் சொல்லப்படும் யாகக்குதிரை கட்டப்பட்ட இடமும் கலிபோர்னியாவில் உள்ளது. அந்த இடம்தான் ஹார்ஸ் ஐலண்ட் என்னும் குதிரைத் தீவு என்கிறார்கள்.

இன்னொரு விஷயம்..ஆஷ் ஐலண்ட் பகுதியில் நீர்நிலை வற்றுவதில்லை. கங்கை என்றாவது வற்றுமா என்ன?

'நம் புராண காலத்து கபில ஆரண்யா தான் இப்போது 'கலிபோர்னியா' எனப்படுகிறதோ!' என காஞ்சி மகாபெரியவர் ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.

கலிபோர்னியாவையும், இந்தப் புராணத்தையும் இணைத்துப் பார்த்தால் வியப்பாகத் தானே இருக்கிறது!

 


நன்றி இணையம்