*கள்ளை பற்றிய கேள்வி பதில்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:14 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and text that says "கள் சத்தாண உணவு; தமிழ்நாடு அரசு மட்டும் எதிர்ப்பது ஏன்? புதிய தலைமு"


😘
1. "கள்" என்றால் என்ன ?
 
*#பனை, #தென்னை மரங்களில் பாளையை பக்குவப்படுத்தி சீவினால் தேன் போன்ற இனிப்பான திரவம் கிடைக்கும். அது சற்று நொதித்து புளிப்பு சுவையாக மாறினால், அதுதான் கள்.*
 
2. பதநீர் என்றால் என்ன ?
 
*மண் கலையத்தில் சுண்ணாம்பு தடவி பனை, தென்னை மரங்களின் பாளைகளில் இருந்து கிடைக்கும் திரவத்தை சேகரித்தால், அதுதான் பதநீர்.*
 
3. கள் மது வகையா ?
 
*""கள் மது வகை கிடையாது. உணவு வகைகளில் ஒன்று."" _இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 47,_ கள்ளை உணவாகவும், மருந்தாகவும் வகைப்படுத்தி உள்ளது.*
 
4. கள் போதை தருமா ?
 
*""புளித்த மாவில், தயிரில் கிட்டத்தட்ட 2% ஆல்காஹல் உள்ளது."" கள்ளில் 2% - 4% ஆல்காஹல் உள்ளது. இதனால் போதை வராது, கள் குடித்த பிறகு, சூடாக காரமான உணவுகளை உண்டால் சிறிது போதை வரும்.*
 
5. கள்ளால் என்ன பயன் ?
 
*பல ஊட்டச்சத்துகள் உள்ளன. சில, நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. தடை நீக்கப்பட்டால் #பனை மரங்கள் அழிவதை தடுக்கலாம், பனை, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும்.*
 
6. கள் மதுவுக்கு மாற்று பொருளா ?
 
*கள்ளுக்கும், மதுவுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. கள் மதுவுக்கு மாற்று பொருள் கிடையாது. உணவில் உள்ள சத்துகள் கள்ளில் உள்ளன, விஸ்கி பிராந்தியில் சத்துகள் இல்லை, இரண்டும் வெவ்வேறு வியாபாரங்கள்.*
 
7. கள்ளுக்கு தடை ஏன் ?
 
*அரசாங்கத்தால் கள்ளில் நடக்கும் கலப்படத்தை தடுக்க முடியவில்லை என்று காரணம் கூறி கொள்கை முடிவாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.*
 
8. உலகில் வேறு எங்கெல்லாம் கள் தடை செய்யப்பட்டுள்ளது ?
 
*வேறு எங்கும் இல்லை.*
 
9. கள்ளை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடிக்கலாமா ?
 
*பிறந்த குழந்தைகள் கூட குடிக்கலாம்.*
 
10. கள்ளை மருத்துவத்துறை எதிர்க்கிறதா ?
*எதிர்ப்பதில்லை.*
 
11. கள் பற்றி அரசுகளின் கள் ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன ?
 
*கள் தடை கூடாது, மக்களுக்கு தரமான கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கள் விற்பனையை கூட்டுறவு (அ) தன்னார்வலர் அமைப்புகள் (அ) மரமேறுவோர் சங்கம் மூலம் நடத்த வேண்டும்* என்பதே பிற மாநிலங்களில் நீதிபதிகள் தலைமையிலான ஆய்வு குழுக்களின் பரிந்துரை ஆகும்..

 
 
நன்றி:
*தமிழ்நாடு கள் கூட்டமைப்பு*