கழுகுமலை முருகன் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:20 AM | Best Blogger Tips

 May be an image of 7 people and temple


*பழமையான முருகன் கோயில்களில் மிகச்சிறப்பான தலம் கழுகு மலை முருகன் கோயிலாகும்.இந்த கோயில் கோவில்பட்டிக்கும்,சங்கரன் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது.1000 வருடங்கள் பழமை வாய்ந்தது இந்த தலம்.

*இந்த தலமூர்த்திக்கு, கழுகாசலமூர்த்தி என்பர் குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை ஆகும்.

*இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம்மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான் இந்த குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது.

*இக்கோயிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.

*மற்ற தல்ங்களில் முருகனுக்கு அசுரன் மயிலாக இருப்பார்.இந்த தலத்தில் மட்டும்தான் இந்திரன் மயிலாக இருக்கிறார்.

*இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

*கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால்கழுகுமலைஎன பெயர் பெற்றது எனவும்,மலை கழுகு போன்ற வடிவம் கொண்டிருப்பதாலும், எப்போதும் கழுகுகள் இம்மலையைச் சுற்றிக் கொண்டிருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.

* இந்த ஆலய மூர்த்தியை வணங்கினால் செவ்வாய் தோஷம்,திருமணத்தடை போன்றவை நீங்குவது மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாகும்.

No photo description available.


 

நன்றி  அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.