காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்தது கூட

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips

 


இங்கு இருக்கும் சமூகநீதி போராளிகள் அவ்வப்போது ஒரு கேள்வி கேட்பார்கள். அதாவது சூத்திரன் பிராமணனாக முடியுமா? என்பதோடு பிராமணர்கள் எழுதிய நூல்களில் எப்படி இதுபோன்ற சமூகநீதிக் கருத்துக்கள் இருக்கும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள்.⁉️❔

இவர்களைப் பொறுத்தவரை பூணூல் அணிந்து கருவறையில் நின்று பூஜை செய்தால் அவர்கள் பிராமணர்கள் எனில் இன்றும் ஏராளமான வர்ண மாற்றங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன.

இந்த பாரத தேசத்தின் மாபெரும் இதிகாசங்களான இராமாயணத்தை எழுதியதோ, மகாபாரதத்தைத் தந்ததோ, வேதங்களை வகுத்ததோ பிராமணர்கள் இல்லை.

அவ்வளவு ஏன் காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்தது கூட பிராமணர்கள் இல்லை.

இராமாயணத்தின் கதாநாயகன் ராமனோ சத்ரியன்,

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரோ யாதவ குலத்தை சேர்ந்தவர்.

ஆனால் அதே இதிகாசங்களில் கெட்டவனாகவும், வில்லனாகவும் காட்டப்படும் ராவணன், அஸ்வத்தாமன் போன்றவர்கள் பிராமணர்கள்.

உண்மைகள் இப்படி இருக்க ஒரு முரட்டு சமூகநீதிப் போராளி இந்த கேள்வியை என்னிடம் கேட்டார். அதாவது வேதங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள் இன்னபிற இந்து நூல்கள் எதிலாவது சூத்திரன் பிராமணன் ஆகலாம் என்று எங்கேனும் உள்ளதா? என்று கேட்டார்...!

இதுபற்றிய புரிதலை வரலாறுகள் நமக்கு எப்படி கற்பிதம் செய்ததோ! இன்றை காலநிலை இதனை எப்படி புரிந்துகொண்டுள்ளதோ என்பதை அறியேன்.

எனினும் மகாபாரதத்திலுள்ள வனபர்வத்தின் 211 ஆவது பகுதி சொல்கிறது சூத்திரனும் பிராமணன் ஆகலாம் என்று. அதாவது,

"ஒரு மனிதன் சூத்திரனாகப் பிறந்திருக்கலாம்,

ஆனால்

நல்ல (வியாபர) விவேகத்தால் குணங்களைக் கொண்டிருந்தானேயானால், அவன் வைசிய நிலையையும்,

வீரத்தால் தைரியத்தால் மேலோங்கி சத்தியமிக்க நேர்மையான ஆளுமை திறமை வளர்ந்தால் க்ஷத்திரியர் ஆகலாம்

அவனே நேர்மையை கற்பிக்கும் திறமையை உறுதியாக இருந்தானேயானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம்"

- மகாபாரதம்.

இக்கூற்றை இன்றைய பிராமணர்களோ, இந்துமத சித்தாந்தவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களில் எத்தனை பேர் ஆதரிப்பார்கள் என்பதை அறியேன். ஆனால் மகாபாரதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது வர்ணங்கள் குணத்தின் அடிப்படையில் மாறக்கூடியது என்று. மேலும் சூத்திரன் என்ற செல்லை என்னென்ன பொருள்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேடினால் சூடாமணி, பிங்கலம் போன்ற நிகண்டுகளில் பல பொருள்கள் உள்ளது. உதாரணமாக,

"மண்மகள் புதல்வர் வாய்ந்த வளமையர், களமர் என்றும் உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர், மேழியர், வேளாளர் திண்மைகொள் ஏரின் வாழ்நர் காராளர், வினைஞர் செம்மை நண்ணுபின் னவர் பன் னொன்று நவின்ற சூத்திரர்தம் பேரே"

- சூடாமணி நிகண்டு.

விளக்கம் : சூத்திரர் என்றால் உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் என்பது பொருள். வளமையர் என்றால் நிலவளம் உடையவர் என்றும், களமர் என்றால் உழவுக் களத்தில் உழைப்போர் என்றும், வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சதுர்த்தர் நான்காம் வருணத்தவர் என்றும், மேழியர் என்றால் ஏர் பிடிப்பவர் என்றும், வேளாளர் என்றால் மண்ணை வளப்படுத்தி ஆள்பவர்கள் என்றும், காராளர் என்றால் மழையால் பயன் விளைப்போர் என்றும், வினைஞர் என்றால் தொழில் புரிவோர் என்றும்,பின்னவர் என்றால் செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் இதே பொருள்களைத் தரும் மற்ற நிகண்டுகளிலோ எந்தவொரு தமிழ் இலக்கியங்களிலோ சூத்திரன் என்ற சொல்லாது திராவிட இயக்கங்கள் சொல்வதுபோல் வேசி மகன் என்றோ வைப்பாட்டி மகன் என்ற பொருளிலோ நிச்சயமாக சத்தியமாக பயன்படுத்தப்படவில்லை.

மதமாற்று அன்னிய சக்திகளின் கைக்கூலியாக திராவிட நாத்திக கும்பல்களால் பிற்காலங்களில் இப்படி தவறாக பரப்புரை செய்யப்பட்டுள்ளது

தனது குணத்தை, கல்வியை செம்மைப் படுத்திக்கொண்டால் சூத்திரனிடம் கல்வி கற்கச் செல்வான் பிராமணன் என்கிறது தமிழின் மிகப் பழமையான சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு...!

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"

- புறநானூறு.

விளக்கம் : தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் மூத்தவன் வருகஎன்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

- பா இந்துவன்.


 


 

பொதுவாக பாரு

ஏன் அட்டஸ் இன்னம் அனுப்ப வில்லை என்று கேட்டால்

அடித்து கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறு

அப்பொழுது Surya வெலை பிரித்து கொடுப்பார்கள்

  நன்றி இணையம்