ஏழைப்பங்காளன் பெருந்தலைவர் காமராஜர்தான்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:38 | Best Blogger Tips

 


முதல்வர் காமராஜருக்கு ஒரே திகைப்பு.. கும்பகோணம் வந்திருந்த தன்னை காண இவ்வளவு ஜனங்களா என்று... அதிலும் காரில் ஏறும் போது இவ்வளவு நெரிச்சலிலும் தன்னை காண வந்த மூதாட்டியை தடுத்து நிறுத்திய போலீஸாரிடம் சத்தம் போட்டு வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கும் அந்த மூதாட்டியை பார்க்க தவரவில்லை. அந்த போலீஸ்காரரை பார்த்து சைகை செய்து அந்த மூதாட்டியை தன்னை காண அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்..

அந்த தள்ளாத வயதினிலும் அந்த மூதாட்டிக்கு காமராஜரை காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சி கண்ணில் மின்னியது.. அந்த மூதாட்டியும் காமராஜர் அருகில் வந்து ஐயா என்னை போல ஆதரவில்லாத மூதாட்டிகள் வயதான காலத்திலே கூடை முடைந்து கூலி வேலை செய்து பிழைக்க வேண்டியதிருக்கு எங்களுக்கு பசியை போக்க ஏதாவது உதவி செய்யுங்க ஐயா என கைகூப்பி வணங்கி நின்றார். அதற்கு காமராஜரும் அம்மூதாட்டியை நோக்கி ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்தார்.

இதை எண்ணியபடியே பயணித்த அவருக்கு காரின் வேகத்துக்கு மேலாக மூதாட்டி கேட்ட உதவியை நோக்கியே சிந்தனையின் வேகம் அதிகமாக இருந்தது. இதன் வெளிப்பாடாக காமராஜர் அருகில் அமர்ந்து பயணித்த அதிகாரியிடம் இந்த மூதாட்டி பசியின்றி வாழ மாதம் எவ்வளவு பணம் இருந்தால் போதுமானதாக இருக்கும் என கேட்டார்.. அதற்கு அந்த அதிகாரியும் சற்று சிந்தித்து விட்டு மாதம் ரூ.20 இருந்தால் போதும் ஐயா என்றார்.

சென்னை சென்றதும் கோட்டைக்கு வந்த முதல்வர் காமராஜர் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து மாநிலத்தில் ஆதரவற்ற முதியோர்களின் கணக்கை சரியாக எடுத்து முழுமையாக தரும்படி கேட்டுக் கொண்டார்.. அந்த கணக்குக்கு ஏற்ற படி முதியோர்களுக்கான பென்சனை திட்டத்தை அமுல் படுத்தினார். இந்திட்டம் உருவாக சிந்தனையில் நின்ற அந்த மூதாட்டியையும் அழைத்து பென்சனுக்கான ஆடரை கையில் கொடுத்து கௌரவித்தார்.. இப்போது எந்த கட்சியாயினும் மக்கள் நலனுக்காக அமுல் படுத்தும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடி ஏழைப்பங்காளன் பெருந்தலைவர் காமராஜர்தான்...

 

நன்றி இணையம்