ஒரு தாசில்தார்
ஆபீசின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.
அவரைக்காப்பாற்ற
ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.
ஒரே பரபரப்பு.
ஒருவர்
கயிறைக்கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.
இன்னும் சிலர்
சட்டைகளைக்கழற்றி முடிச்சுப்போட்டு கிணற்றுக்குள் விட்டு, ஐயா, இதைப்பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கத்தினார்கள்.
பெண் ஊழியர்கள்
கிணற்றைச்சுற்றி நின்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.
ஒவ்வொருவரும்
தீவிரமாக தாசில்தாரை காப்பாற்ற முயற்சி
செய்தார்கள்.
அந்த தாசில்தாரை பாதி
அளவு மேலே தூக்கிக்கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன், இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகி விட்டது.
புது தாசில்தார்
வாசலுக்கு வந்து விட்டார். என்று தகவல் சொன்னார்...
அவ்வளவுதான்......
கிணற்றுக்குள்
இருந்த தாசில்தாரை அப்படியே போட்டு விட்டு புது தாசில்தாரை வரவேற்க எல்லோரும்
வாசலுக்கு ஓடி விட்டார்கள்....
அதிகாரம் மிக்க
பதவிக்கு இருக்கும் மகிமை இது தான்